M.ராஜா கவிதைகள்

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

M.ராஜா


1.விழியருகில் வானம்

இழுத்து
போர்த்திக்கொள்ளமுடியாத தூரத்தில்
விரிந்திருக்கிறது வானம்
தூரங்களைக் கரைக்கும் கற்பனைகள்
தோற்றுப்போய்த் தூங்கிவிடும் இரவுகளில்
என்மேல் கவிழ்ந்து
என்னை இறுக்கி
அணைத்துக் கொண்டுவிடுகிறது.
______________________________________________________________________________________________
2.இலவச இணைப்பு

பன்னெண்டு ரூபாயா ஏறிப்போச்சு
ஒருகப் ஹார்லிக்ஸ் விலை.

“சக்கரை ஜாஸ்தியா சின்னகப்ல ஹார்லிக்ஸ்”
சொல்லிட்டு ஓரச்சேரா பார்த்து உக்கார்ந்தேன்.

ஆவிபறக்க
நங்கென்று டேபிளில் வச்சிட்டு போனான்
நாயர்கடைப் பையன்.

ஆஸ்பிடல் போகணும்.
சட்டையில் ஒழுகினால் பிசுபிசுப்பாய் ஒட்டிக்கும்.

கைப்பிடி பற்றி
விரலில் சூடு படாமல் எடை ஏந்தி
ஒரு கப்புக்கும் ஒரு லிப்புக்கும் இடையிலான
பல ஒழுகல்களைத் தவிர்க்க
தலை குனிந்து கழுத்து நீட்டி உதடு குவித்து
ஒருவாய் உறிவதர்க்குள்-

விளிம்பிலிருந்து வழிந்தது
சக்கரைப்பாகா இனிச்ச ஹார்லிக்ஸ்.

பன்னெண்டு ரூபாயில் ரெண்டு ரூபாய் நஷ்டம்.

பாதிகப் பருகும்வரைக்கும்
பறந்துகொண்டுதான் இருந்தது
இலவச இணைப்பாய்
அஞ்சுரூபாய் பெறுமானமுள்ள ஆவி.

நானும் குடிக்காமல்
நாயருக்கும் நஷ்டமில்லாமல்
காற்றில் கலந்து காணாமல் போனது.

___________________________________________________________________________________________________

3.இரத்தலினும் இறத்தல் நன்று

முன்னைப்போல் ஓடித்திரிய
என்னால் முடியவில்லை.

வயோதிகம் வந்ததில்
சுருங்கிவிட்டது எல்லை.

அடுத்தவரின் நிராகரிப்பும்
சுய இயலாமையும்
மரணம் வரைக்கும் நரகம்.

சுயமாய்ப்பு செய்து கொள்ளவும்
சமாதானம் இல்லாமல்
வந்துவிழும் பண்டங்களுக்காக
படியோரம் படுத்திருக்கிறேன் –

ஆறாத புண்களை நக்கியபடியும்
ஈனக்குரலில் குரைத்தபடியும்.

______________________________________________________________________________________________________________

4.ஹிம்சை

இடதும் வலதுமாய் புரண்டு படுத்தாகிவிட்டது.
இன்னு மொருமுறை கலைத்தால்
ஓரிரு மயிர்கள் உதிரக்கூடும்.
நான்கைந்து நகங்கள் மிச்சமிருக்கின்றன.
ஓரச்சதையோடு மென்று துப்புவதற்குள்
வந்துவிடவேண்டும்-

உனது குறுஞ்செய்தி
அல்லது
ஒரு குட்டித் தூக்கம்.

______________________________________________________________________________________________________________________

5.கடவுளின் காலடித் தடயங்கள்

உயிரின் மூலாதாரங்களை
அகழ்ந்தாய்ந்திருந்தபோது தென்பட்டன
கடவுளின் காலடித் தடயங்கள்.
அடியொற்றியே தொடர்ந்தேன்.

கால வெளி எல்லைகள் தூர்ந்து
ஆதியும் அந்தமுமான பிராந்தியம்.
வெளியெங்கும் விரவிக்கிடந்தேன் நான்;
என்னெங்கிலும் பரவிக்கிடந்தது வெளி.
விழித்தெழுந்த உடலணுக்கள் யாவிலும்
வெடித்துக் கிளம்பியது பேரானந்தக் கிளர்ச்சி.
கருமக் கயிறுகள் அறுந்து
ஞான ஒளியூட்டம் நிகழ்ந்தது.
சூன்ய பெருஞ்சூட்சமங்கள் தெரிந்து தெளிந்தும்
கண்ணெட்டியவரையில் காணக்கிடைக்கவில்லை
கடவுள் மட்டும்.

வந்த வழி வியந்தேன்.

இரண்டு சுவடுகளன்றி
இன்னொன்று ஏதுமில்லை.
இருந்த சுவடுகள் மீது
நின்றுகொண்டிருக்கின்றேன்
நான்; கடவுள்.

____________________________________________________________________________________________________________________

நன்றி

1.விழியருகில் வானம்

இழுத்து
போர்த்திக்கொள்ளமுடியாத தூரத்தில்
விரிந்திருக்கிறது வானம்
தூரங்களைக் கரைக்கும் கற்பனைகள்
தோற்றுப்போய்த் தூங்கிவிடும் இரவுகளில்
என்மேல் கவிழ்ந்து
என்னை இறுக்கி
அணைத்துக் கொண்டுவிடுகிறது.
______________________________________________________________________________________________
2.இலவச இணைப்பு

பன்னெண்டு ரூபாயா ஏறிப்போச்சு
ஒருகப் ஹார்லிக்ஸ் விலை.

“சக்கரை ஜாஸ்தியா சின்னகப்ல ஹார்லிக்ஸ்”
சொல்லிட்டு ஓரச்சேரா பார்த்து உக்கார்ந்தேன்.

ஆவிபறக்க
நங்கென்று டேபிளில் வச்சிட்டு போனான்
நாயர்கடைப் பையன்.

ஆஸ்பிடல் போகணும்.
சட்டையில் ஒழுகினால் பிசுபிசுப்பாய் ஒட்டிக்கும்.

கைப்பிடி பற்றி
விரலில் சூடு படாமல் எடை ஏந்தி
ஒரு கப்புக்கும் ஒரு லிப்புக்கும் இடையிலான
பல ஒழுகல்களைத் தவிர்க்க
தலை குனிந்து கழுத்து நீட்டி உதடு குவித்து
ஒருவாய் உறிவதர்க்குள்-

விளிம்பிலிருந்து வழிந்தது
சக்கரைப்பாகா இனிச்ச ஹார்லிக்ஸ்.

பன்னெண்டு ரூபாயில் ரெண்டு ரூபாய் நஷ்டம்.

பாதிகப் பருகும்வரைக்கும்
பறந்துகொண்டுதான் இருந்தது
இலவச இணைப்பாய்
அஞ்சுரூபாய் பெறுமானமுள்ள ஆவி.

நானும் குடிக்காமல்
நாயருக்கும் நஷ்டமில்லாமல்
காற்றில் கலந்து காணாமல் போனது.

___________________________________________________________________________________________________

3.இரத்தலினும் இறத்தல் நன்று

முன்னைப்போல் ஓடித்திரிய
என்னால் முடியவில்லை.

வயோதிகம் வந்ததில்
சுருங்கிவிட்டது எல்லை.

அடுத்தவரின் நிராகரிப்பும்
சுய இயலாமையும்
மரணம் வரைக்கும் நரகம்.

சுயமாய்ப்பு செய்து கொள்ளவும்
சமாதானம் இல்லாமல்
வந்துவிழும் பண்டங்களுக்காக
படியோரம் படுத்திருக்கிறேன் –

ஆறாத புண்களை நக்கியபடியும்
ஈனக்குரலில் குரைத்தபடியும்.

______________________________________________________________________________________________________________

4.ஹிம்சை

இடதும் வலதுமாய் புரண்டு படுத்தாகிவிட்டது.
இன்னு மொருமுறை கலைத்தால்
ஓரிரு மயிர்கள் உதிரக்கூடும்.
நான்கைந்து நகங்கள் மிச்சமிருக்கின்றன.
ஓரச்சதையோடு மென்று துப்புவதற்குள்
வந்துவிடவேண்டும்-

உனது குறுஞ்செய்தி
அல்லது
ஒரு குட்டித் தூக்கம்.

______________________________________________________________________________________________________________________

5.கடவுளின் காலடித் தடயங்கள்

உயிரின் மூலாதாரங்களை
அகழ்ந்தாய்ந்திருந்தபோது தென்பட்டன
கடவுளின் காலடித் தடயங்கள்.
அடியொற்றியே தொடர்ந்தேன்.

கால வெளி எல்லைகள் தூர்ந்து
ஆதியும் அந்தமுமான பிராந்தியம்.
வெளியெங்கும் விரவிக்கிடந்தேன் நான்;
என்னெங்கிலும் பரவிக்கிடந்தது வெளி.
விழித்தெழுந்த உடலணுக்கள் யாவிலும்
வெடித்துக் கிளம்பியது பேரானந்தக் கிளர்ச்சி.
கருமக் கயிறுகள் அறுந்து
ஞான ஒளியூட்டம் நிகழ்ந்தது.
சூன்ய பெருஞ்சூட்சமங்கள் தெரிந்து தெளிந்தும்
கண்ணெட்டியவரையில் காணக்கிடைக்கவில்லை
கடவுள் மட்டும்.

வந்த வழி வியந்தேன்.

இரண்டு சுவடுகளன்றி
இன்னொன்று ஏதுமில்லை.
இருந்த சுவடுகள் மீது
நின்றுகொண்டிருக்கின்றேன்
நான்; கடவுள்.

____________________________________________________________________________________________________________________

நன்றி

ராஜா

Series Navigation

M.ராஜா கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

M.ராஜா


1சாபச் சுமை
சுவர்வழி இறங்கிய ஈரம்
படர்ந்திருக்கும்.
பாதுகை உதிர்த்த மண்துகள்கள்
ஈரக் கோடிழுத்தூரும் அட்டைப்பூச்சி
மேலும் கீழுமாய்
பயணதிசை காட்டும் பாதச்சுவடுகள்.
எதையும்
பாரமெனவே கொள்ளுமோ மாடிப்படிகள்?

வருடிச் செல்லும் காற்றில்
விமோசனம் இல்லை
ஏதேனும் ஒரு அற்புதப்பாதத்தை
எதிர்பார்த்தபடி படுத்துக்கிடக்கிறது
கல்லாய்க் கடவது எனச் சபிக்கப்பட்ட
முனிவன் காலத்து நீரோடை ஒன்று.

__________________________________________________

2.அகத்துள் அகவை

கண்ணை மூடி
தூங்குங்க தாத்தா-

மஞ்சள் காமாலையால்
மூளை மழுங்கி
மூச்சிரைக்க
அழுது பிதற்றிக்கொண்டிருந்தவரின்
நெஞ்சுக்கூட்டில்
தட்டிக் கொண்டிருக்கிறாள்
கிருஷ்ணவேணி சிஸ்டர்.

தாய்த் தீண்டலின் கதகதப்பில்
தூங்கிப்போகிறது குழந்தை.

வயதுகளை
கூட்டியும் குறைத்தும்
சமன்படுகிறது காலம்.

____________________________________________________

3.ஒத்திகை

முன்சக்கரம்
உழுது பீய்ச்சும் மண்குழம்பு
படாது கால்களை உயரத் தூக்கி
நெகிழ்த்தும் ஈரமண்ணில்
விழாது வாகனத்தை வளைத்து
சேற்றுக்குளத்தைக் கடந்து
சமன்பரப்பை அடைந்ததும்
படர்கிறது ஒரு ஜெயக்களிப்பு…
சேதாரமின்றி
ஏதோவொன்றை கடந்து வந்துவிட்டதாய்.

___________________________________________________

4.வெளிச்சம்

அடுத்த முறை ஊருக்கு வரும்போது-

நண்பர்களை பார்க்கணும்.
சிவன்மலைக்கு நடந்தே போகலாம்.
பள்ளிக்கூடத்திற்குள் போய் வர வேண்டும்.
இன்னும் கொஞ்சம் கனிவோடு நடந்து கொள்ளலாம்.

பக்கவாட்டு சன்னல்வழி புகும் காற்றில்
ஈரத்துளிகள்
மழை எச்சில் சளிக்கு
ஈரம் பொது அம்சம்.

ஏறிய இடம் வேறு
இறங்கும் இடம் வேறு
சகவாசம் தற்காலிகம்.

அசைவன அசைவற்றன
சகலமும் பின்னகரும்.

இருட்டை கீறிப் பாயும் பேருந்து வெளிச்சம்.

________________________________________________________

நன்றி,

M.ராஜா

Series Navigation