புத்தமாவது

This entry is part of 39 in the series 20101212_Issue

சித்ரா


புத்தமாவது
_________

ஆரம்பபள்ளி வளாகமாய் மனபெட்டகம் ..

மூக்கை நோண்டியபடி புரிதலின்றி
தானாக லயித்து சிரித்தபடி
அடைபட்டோம் என்று கூவியபடி
அனேக உணர்வுகள் சிலகணம்

மணியடித்து பள்ளி முடிந்து
ஓவென்று விரிச்சோடி போன
கண்ணுக் கெட்டியவரை வெற்றிடமாய்
உணர்வுகள் அற்று சிலகணம்

உணர்வுகளாய் கணப்பிணும் பாராமகிறாய்
உணர்வுகளற்று வெற்றிடமானாலும் பாராமகிறாய்

பூவிரிய கண்டு புன்னகைத்ததை
தீட்சையாக சுவைத்து பகிர்ந்த
புத்தமாவது எப்போது …

k_chithra@yahoo.com

Series Navigation