கடல்

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

சத்ய ஸுகன்யா ஷிவகுமார்.


முத்துக்கு விளைநிலமே!
உயிர்சத்துக்கு உறைவிடமே!
முக்கால முணர்ந்தோன்
உனக்களந்தது
முக்கால் எனுமொதுக்கீடு
“உப்பிட்டவரை உள்ளவரை நினை”
இவ்வொப்பில்லா மொழிக்கேற்ப
நினைக்கிறோம்
எம்மை நனைக்கிறோம்
எமக்கப்புறமும் நிலைக்கும் உன்னை.

sathgopi@yahoo.co.in

Series Navigation

சத்ய ஸுகன்யா ஷிவகுமார்.

சத்ய ஸுகன்யா ஷிவகுமார்.

கடல்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

பிரியா ஆர்.சி.


சரித்திரங்களை மூழ்கிச் சாகடித்த வருத்தமா ?

உன் கரையில் தொடங்கி கல்லரையில்
முடிந்த காதலுக்கு கண்ணீர் அஞ்சலியா ?
பல்லாயிரம் ஜீவன்களின் நிழலான உனக்கு
நிழல் இல்லையென்ற ஏக்கமா ?
எங்கள் கணக்கில்லா கலவரங்களில் உன்
நிறம் சிவப்பாகுமோ என்ற நடுக்கமா ?
மாதம் ஒருமுறைகூட முழுநிலவை
எட்டிப் பிடிக்க முடியாத இயலாமையா ?
மக்களைக் காக்கும் மழைநீர் கொடுத்தும்
நீ மட்டும் என்றும் கரிக்கும் சாபமா ?

எதற்கு இந்த ஓயாத அலை அழுகை ?

rcpriya@yahoo.com

Series Navigation

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...