This entry is in the series 20091023_Issue

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.


பஞ்சு மேனி குருவிகளின்
தங்குமிடம்…
தொங்கும் தொட்டில்
குருவிகள் தங்கும் கட்டில்..

அறைகளை அழகு படுத்த
விஞ்ஞானம் தந்த
விளக்கொளி தேவையில்லை
மின்மினிகளின் வெளிச்சத்தில்
மிகை அழகு பெற்றிடும்
அற்புத இல்லம்மது

காற்றில் மிதக்கும்
கப்பலது…
சூடும்,குளிரும்
சரிவிகிதத்தில்
பேணும் சொகுசு பங்களா..

விஞ்ஞானம் வியக்கும்
நுட்பமது…

வெறும் தும்புகலால்லான
அத்தாணி மண்டபம்..

இரண்டு அறைகள்
ஒன்று இருக்கையறை
மற்றது படுக்கையறை
இரண்டு அறைகளினாலான
மாளிகையது…

தூளியில் தொங்கும்
குட்டித் தாஜ்மஹால்

எந்தத் கட்டிடக் கலைஞனும்
தேவையில்லை..
ஒரு தூக்கணாங் குருவி போதும்
இந்த இருப்பிடத்தை அமைக்க.

rhmfarveen@gmail.com

Series Navigation