This entry is in the series 20040101_Issue

பா.சத்தியமோகன்


சதுரமாகி வரும் வீடு
சில உணர்தலில் வட்டமாகி விடும்
வட்டமென நெகிழ திடுமென விண்டு
கோணலாகி விடும்
கோணல்தானே என்றிருக்க
விரிசலாகி விடும் ஆங்காங்கே
விரிசலைச் சரி செய்ய பூதம்தோன்றும்
பூதமென ஒதுங்கிப் போக
கனவெல்லாம் பாம்பாகும்
மகுடி எடுத்து ஊதப்போனால்
எதுவும் இல்லையே எனச் சிரித்து
கைப்பிள்ளையாகும் எச்சிலொழுக.
——————————————————
cdl_lavi@sancharnet.in

Series Navigation