This entry is in the series 20040101_Issue

மதுமிதா


==========================
ஓடும் நதி நீீரின்றி
பாடும் தென்றல் காற்றின்றி
ஆடும் பறவைக்கூட்டமின்றி

வயல் வரப்பின்றி
விரிந்த வானம் காணும் வகையின்றி
விசாலமான தோட்டமின்றி

பூட்டிக்கிடக்கும்
கூண்டுக்குள்ளான
குடும்ப வாழ்க்கை.

புழுக்கத்துடன்
எரிச்சல் நிறைந்த வார்த்தைகள்
காயங்களை மாத்திரமே தரும்.

அன்பே மருந்தானால்
பூசிவிட பூசிவிட
ஆறும் ரணங்கள்
நாள்பட நாள்பட

வேதனை தீரும்
என்றும் வாழ்வில்
மகிழ்வு சேரும்.
===============
madhumitha_1964@yahoo.co.in

Series Navigation