மரக்கொலைகள்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

பிரதாப் ருத்ரன்


பாஷை பேசும் மரங்கள்
பூிவதில்லை மரம் வெட்டியானுக்கு
துயிலெழுந்த காக்கைகளின் பூபாளம்
மயக்கும் வண்டை சாலையோர கள்ளிப் பூக்கள்
மரங்கள் வெறுமையின் பிரளயம்
மனதை உந்த
காக்கையின் கூட்டில்
விருந்தாளி குயிலின்
விட்டுவைப்பு
கணக்கறியா காக்கை அடைகாக்க
அலகோடு அலகுரசும் ஆனந்தம்
தொிந்தபின்
தான் வளர்த்ததையும்
யாரோ வளர்த்ததையும்
அழிக்கும் களிப்பில்
அறியா மாக்கள்

கண்ணாடி பிரபஞ்சம்

முகம் முகமாய்
கண்ணாடி பிரபஞ்சத்தில்
முகம் முகமாய்:

ஒரு முகம்
அதில்
என் முகம்
எனத் தேடும்
ஒரு முகம்:

என் முகம்
இதுவுமில்லை
அதுவுமில்லை
என
தெளியதொியா
ஒரு முகம்:

இத்தனை ஆர்ப்பாிப்பில்
உன் முகம்
எதுவெனத் தேடும்
என் முகத்தில்
நெறுஞ்சி முள் கீறல்கள்:

விரவிப் பரவும் உள்ளுணர்வு இதயத்தில்
உன் சிாிப்பலை வாிசைகள்
புன்னகைக்காப் பூக்களில்
அந்நியமாய் உணரும் வாசத்தின் உறவுகள்:

உன்னோடு ஒரு நூறு நாட்கள்
நேசத்தின் பிாிவில்
என்றோ ஒருநாள்
ஏதேச்சைப் பார்வை:

என் முகம் அணிந்த
உன் முகமும்
உன் முகம் அணிந்த
என் முகமும்
கருமை புலப்படா
பார்வைகள் வெட்டவெளியில்:

நான் எங்கோ-
உனை இருப்பதாய் உணர்த்தும்
உன் முகத்தின் கண்ணாடி பிரதிபலிப்பு:

நினைவின் முனைமழுங்கிய அந்திமம்

ஓர் மழை நாளில்
எனக்காய் நீளும்
குடைபிடிக்க ஓர் கை

உன் வறண்ட உதடுகளின்
மந்தகாசப் புன்னகை
மாற்றங்களின் பிறழலில்
வாயிருந்தும் பேச்சறுந்த
ஊமைப் பூக்கள்:

ஒற்றைக் காக்கையின்
உதிர்ந்த சிறகாய்
அறுபடும் சிநேகத்தின் கடைசி முடிச்சு:

நினைவின் முனை மழுங்கிய அந்திமத்தில்
நீ
கடந்து போனாலும்
விலகி போகாத
சொந்தம்:

கடலே கலை

என் கையில் நீ வடித்த
ஜோதிட கல்வெட்டு
நம்மிலும் முடியாதுபோன
தொடரும் பிாிவுப் பாிணாமம்
மணற்கரையில் அலை அாித்து
கலைந்துபோன உன் பெயர்
பழுதடைந்த எந்திரமோ
விட்ட குறை தொட்ட குறையோ
புதுபிக்க அல்ல இது
உன் நினைவுக்கும்
ஒப்பணை கலைந்த முகத்திற்கும்
தாலாட்டு பாடும் நிகோடின்
உனக்கும் எனக்குமான
நேர்கோட்டு உறவில்
எவ்வித பிரக்ஞையுமற்று
சூழ்கொண்ட கருப்பையில்
முடிவில்லா நித்திரையில்
ஆட்கொண்ட கடலே கலை.

லயம் பிறழா ஆலிங்கனம்
வெப்ப ஆற்றலாக மாற்றமடைகின்றன
உன் என் உடல் ஆற்றல்கள்
உன் முக்கோண அறையில்
எனக்கான மூலையில்
கோதையின் படிமத் தோற்றம்
மேனகையாகிறது:

பொங்கி பிரவகிக்கும் எாிமலையாய்
கருவுற்ற எண்ண அலைகள்:

நீாின் சுழற்பாதையில்
உனைத் தேடும் உன் அஸ்தி:

உனை பிரசவிக்கும் ஆசையில்
கரையை புணரும் அலைகள்:

வறண்ட ஒளியற்ற கண்களில்
உன் பிம்பம் எதிரொளியற்று தொிகிறது:

நீ தொடர்ந்ததை
நான் தொடர்கிறேன்
நம் சந்ததியினருக்காய்:

பார்வையின் கூர்முனை படையெடுப்பில்
தொட்டதும் தொடர்கிற உறவு
நீந்துகின்றன
கோதையின் விரல்மீன்கள்
நீாில் முத்தம் பெறுகின்றன
ஒருவரும் அறியாது
இருவரும் தொலைத்து நிற்கிறோம்:
இதயத்தின் மறித்த மயானம்
எங்கும் வியாபித்திருக்கும்
நிகோடின் நுரையீரல்கள்
நாம் நமது
எல்லையை வரையறுக்கிறோம்
கால்தூக்கி
சிறுநீர் கழிக்கும் நாயாய்
நீ
உன்னதையும்
நான்
என்னதையும்.

லேசர் படிம உடலகங்கள்

பகலும் இரவும்
புணர்ந்து
இரவில் மூழ்கிய
பகல் நேரம்:

வெறுமையை உணர்த்தும்
நிர்வாண நிமிடங்கள்:

கலவிக்கு அழைக்கும்
தவளையின் குரல்பை
சத்தம்:

விரல் நுனியில்
உயிர் வழியும்
இயற்கையின்
அபிநயம்:

தயங்கித் தூங்கும்
விழிகளில்
பட்டுத் தெறிக்கும்
காமக் கதிர்வீச்சு:

காமத்துயிலாழ
தொட்டுத் தழுவும்
லேசர் படிம உடலகங்கள்:

நாகாஸ்த்திர பட்டுவிாிப்பில்
வள்ளலவனின் சொர்க்கபூி:

ருத்ரதாண்டவத்தின்
மைக்ரோ
தாளலய சிலிர்ப்புகள்:

சிந்தும் இரு கைகளின்
இடைவெளியில்
அமில அாிப்புக் காமம்:

ஜனனத் தொழிற்சாலையில்
காமக் கூலிகளாய்
ஆணும் பெண்ணும்:

நிலவாய் வளர்ந்து
நிலவாய் தேய்ந்து
நிலவாய் மாறி
கைப்பற்றிய ராகு
முற்றுகையிட்ட கிரகணம்
விலகா விகார வாழ்வில்
உழன்று திாியும்
அவர்கள் விகாரமானவர்கள்:

கரையோரத்து இரவில்
சுவர்க்கோழி சகவாசிகள்
சகிதமாய் முன்னிரவை கழிக்க
யாகம் பூிகின்றோம்:
உவர்ப்பான உன் முத்தமிடா
நெற்றியில் இதழ் பதிக்கிறேன்
என் விரல் தீண்டிய பூக்கள்
உன் காதோரத்து கூந்தல்
வருடும் உணர்வுகள் மறத்துப்போன
சிலைகளாய் இருக்கிறோம:;
நம் மூச்சுக் காற்றின் பகிர்மாணங்கள்
நினைவுகூறும் செல்லாித்த தேகம்
ஒரு செல்லேனும் கடந்துபோய்
பார்க்கிற முகங்களில் நாட்களாகியும்
ஒரு முகமேனும் நீயாய் தொிகிறது
வாசிக்க யாசிக்கும் வாசகன்
எங்கும் கடற்கரை மணல்வெளியில்
மெட்டியணியா உன் நீள்பாதங்கள்
எழுதிச்செல்லும் கவிதைகள்
நீ
நான் பாிசீலிக்கப்பட்ட
இவைகளின் உற்பத்தித் திறன்
மற்றும் கொள்ளளவு யுரேனியக்
கொள்கலனின் இருமடங்காய்
தொடர்கின்ற பிாிவினை
சோதனையாய் உரையாடல்
மிதிவண்டி சோதனைக் கூடத்தில்
பேச்சற்ற பார்வை பாிபாலனைகள்
படைத்தவரை எதிர்க்க வேண்டும்
கானமே.

நீட்சியுற்ற உணர்வுகள்

சப்தங்கள் நிறைவுபெறும்
உன்னத இரவின் அந்தகாரத்தில்
உணர்வுகள் நீட்சியுற்று நெளிகின்றன:

முண்டங்களான மரங்களின்
பூிபடா பாிபாஷைகள்:

மரங்களின் பாவனைகளோ
அதன் பாஷைகளோ
அறியாது நிறைவுபெறுகிறது
பிறவிப்பயன்:

திசைமாறிய மழை
இடம்பெயர்ந்த பறவைகள்
நிலவில்லா வானம்
சாய்கின்ற மரம்
சாய்க்கின்ற மனிதன்:

பிறிதொரு நாள்
பிறிதொரு பொழுது
வேரூன்றிய மனிதர்கள்
கை கால்கள் முளைத்து
அணிவகுக்கின்றன
மரங்கள்:

மரங்கள் உயிரற்று சாய்ந்ததுபோல்
மனிதர்கள் நீரற்று சாய்வார்கள்:

ஓர் பவுர்ணமி இரவில்
மரங்களின் தோலுறிக்கும்
மனிதர்கள்:

செவிப்பறைகளில் எதிரொலித்து
அதிர்கிறது
மனம் மரங்கள்
எங்கோ வெட்டுபடும்
மரண ஓலம்:

நீள்கிறது மூன்றாவது கையாய்
மனிதனுக்கும் அாிவாள்:

தான்தோன்றியாய்
காற்றில் கரைந்த உபதேசங்கள்:

ஆண்குறியாய் விரைத்த
மரங்கள்
யோனியில் செயலிழந்து
எனது ஆண்குறியில்
துளிர்விட்டு சிலிர்க்கின்றது:

நிஜத்திற்கும் நிழலுக்குமான
இடைவெளியில் நான்
நானற்று பயணிக்கிறது:

பாலைவன மணற்பரப்பில்
ஒட்டகத்தின் சேமிப்பு நீராய்
மனிதனின் மண்டையோட்டில்
சிந்தனையை சிதறடித்து
நெளிகின்றன பாம்புகள்:

அங்கொன்றும் இங்கொன்றுமான
ஈச்சமர நிழல்களில்
காலம் கடந்து செல்கிறது:

எகிப்திய பிரமிடுகளின்
சயன அறைகளாய்
மனிதனின் முக்கோண மூளை
விஸ்தீரணம்
10 ஒ 10 சதுர அடி:

————————————–
munirasu@yahoo.com

Series Navigation

பிரதாப் ருத்ரன்

பிரதாப் ருத்ரன்