படுக்கை குறிப்புகள் – 1
Published October 15, 2009 • By
மணி
மெத்தை இழந்த கட்டில்
தனது அந்திமக்காலத்தில்
இடத்தை மட்டும் அடைத்துக்கொண்டு
ஜனித்திருந்தது.
அதன் பயனற்ற இடமடைப்பு
எல்லோருக்கும் தொந்திரவுதான்.
அதற்கும் கூட எனினும்
தொலைத்துவிட முடியவில்லை
இருப்பிடத்தை
இடம், காலம், பருண்மை விதிகள்
பாடையில் போகப்போகிற
கட்டிலுக்கு இருக்கக்கூடாதா என்ன ?
மெத்தை இழந்த அந்த
படுக்கையறைக்குள் யாரும் செல்வதில்லை.
யாரோ வந்து தூக்கிசெல்ல காத்திருக்கிறது
எதைஎதையோ அசைபோட்டபடி.
mani@techopt.com
Mani – Mumbai
மணி.