This entry is in the series 20091015_Issue

தணிகாஷ்(எம்.இளையதம்பி)


முழு நிலவில் பால் கறந்து
நிறைபானை பொங்கல் வைத்தோம்
இரவென்றும் பாராமல்
ஊரெல்லாம் பகிர்ந்திட்டோம்
சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து
முற்றத்திற் கதைபேசி
முழுவதையும் உண்டார்கள்!
காலை விடிகையிலே
பானையதும் காலியாச்சு
மறு இரவும் பொங்கலிட்டோம்
பி(ப)டியரிசி குறையாக‌….
எனினும்
முன்னிரவுபோலே
முறையாகப் பங்கிட்டோம்
தொடர்ந்து வந்த இரவுகளில்
ஒவ்வோர் பி(ப)டியரிசாய்க் குறைத்திட்டோம்
பானையதும் குறையாக
ஊர்வயிறும் அரைவயிறாய்….
ஒரு நாள் மட்டுமிங்கே
பானையிட அரிசில்லை
மாதமொரு நாள்
மக்களெல்லாம் பட்டினியாய்..

Series Navigation