This entry is in the series 20090915_Issue

’ரிஷி’



மொழியால் கட்டமைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில்
மக்களுக்காக, மக்களின் பெயரால்
அயராமல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன பரிசோதனைகள்.
பன்றியாய் அறுக்கப்படுபவர்கள்,
’மனிதர்களல்ல’ என்று அறிவிக்கப்பட்டு
புழக்கடையில் வீசியெறியப்படுகிறார்கள்.
நுரைத்துக் கொதித்துக் கொண்டிருக்கும்
அமிலக் கரைசலில் இடப்படுவதற்கு முன்
நீட்டப்படும் வெற்றுத்தாள்களில்
கைரேகை பதிக்க மறுத்துக் கேள்வி கேட்பவர்கள்
கையூட்டு பெற்றவராகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
’போட்ட விதைகள் மழையில்லாமல் முளைப்பதேது’,
என வாட்டத்துடன் வழிசெல்லும் ஏழை விவசாயியையும்
‘கோழையே, இந்தியன் என்று சொல்லிக் கொள்கிறாயே, கேவலம்’
என நாவினால் சுட்டுப் பொசுக்குவார்கள் நல்லருஞ் சிந்தனையாளர்களும்.
’இந்தியரெனில் நீர் மனிதராக இருக்கவியலாது’ என்பாரிடம்
’மந்தையாக அன்றி மனிதராக
எப்பொழுது எவரும் இருக்கவிட்டிருக்கிறீர்கள் எம்மை?’
என்றவாறு வழி சென்றவாறு.

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation