சாம், நீ ஒரு விசித்திரமான பெண்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

நடேசன்


அறுபது கிலோ எடையுள்ள அந்த நாய் என்மீது பாய்ந்து நட்புடன் எனது கைகளை நக்கியது.எதற்கா இங்கே வந்து இருக்கிறேம். அல்லது என்ன நடக்கப்போகிறது என்பது அதற்கு புரியவில்லை.

‘எனது நாயின் விதையை அகற்றிய பு¢ன் அந்த விதையை எறிந்து விடாதீர்கள் என்றாள்’ அந்தப் பெண்.

அந்த நாயின் உரிமையாளரான பெண்ணின் கூற்று எனக்கு ஏற்பட்ட அதிர்சியை மறைத்துக் கொண்டு ‘நாயின் விதையை வைத்து என்ன செய்யப்போகிறாய்’ என்று கேட்டேன்.

அந்தப்பெண் பதில் சொல்லவதற்கு முன்பு ‘இவளுக்கு பைத்தியம்’ என்றான் இவளுடன் வந்துதிருந்த அவளது போய் பிரண்ட் சொன்னான்

அவனது பதிலைப் பொருட்படுத்தாது ‘நான் அந்த விதைகளை பாதுகாக்கப்போகிறேன். இது போல் எனது இறந்த தந்தையின் விதைகளையும் இன்னும் பாதுகாத்து வருகிறேன்’

இதைக்கேட்டதும் எனது நேர்சின் முகத்தில் கலக்கம் உருவாகியது

மனிதர்களில் விதையை அகற்றுவது பலர் அறிந்திருக்க முடியாத விடயம். இதுவே எனது நேர்சின் மனத்தில் புதிரை ஏற்படுத்தி கலக்கத்தை உருவாக்கியது.

இந்த இறுக்கத்தை குறைப்பதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டியிருநதது.

‘ஆண்களில் புரஸ்ரேற் காண்சர் வந்த பின்பு விதைகளை அகற்றுவது அவசியமாக இருந்தது.விதைகளில் இருந்து சுரக்கும் ஹோமோன் இந்த கான்சருக்கு ஊக்கியாக இருக்கும் என நம்பப்பட்டது. தற்போது விதை அகற்றுவது இல்லை என நினைக்கிறேன்.’

எனது விளக்கத்தை கேட்க பொறுமை இல்லாதவளாக அந்தப் அந்தப்பெண் ‘நான் எனது மகனினது ஆண்குறியின் முன் தோலையும் சேகரித்துவைத்திருக்கிறேன்’ என்றாள்.

அவுஸ்திரேலியாவில் இஸ்லாமியர்கள் யூதர்கள் அல்லாத மற்றயவர்களிடமும் சுன்னத்து செய்யும் வழக்கமுண்டு. இது சிறிய சத்திர சிகிச்சையாக வைத்தியசாலைகளில் நடைபெறும். சுகாதாரத்துக்கு உகந்தது என்ற நம்பிக்கையில் பெற்றேரால் ஆண்குழந்தைகளுக்கு செய்துவந்த இந்த முறை தற்காலத்தில் பெருமளவு குறைந்து விட்டது.

வு¢பரீதமான போருட்களை சேகரிக்கும் இந்தப்பெண் சாம் பலவருடங்களாக எனக்கு பழக்கமாகிவள். இவளது பல விடயங்கள் வேறுபாடாக இருப்பது எனக்கு தெரிந்ததால் இவளது வேண்டுகோள் எனக்கு புதிதாக இருக்கவில்லை. மேலும் நான் வெட்டி குப்பைக்கூ¨டிக்குள் போட இருக்கும் ஒரு பொருளைத்தானே கேட்கிறாள். பலர் கடிதத்தை கிழித்தது தபால் முத்திரையை குப்பைக்கூடைக்குள் எறிவார்கள். சிலர் அதை சேகரித்துவைத்திருப்பார்கள்.

சாமின் நாய் ஐம்பது கிலோவுக்கு கூடியதால் நிலத்தில் வைத்து மயக்கமருந்து கொடுத்து விட்டு நான் எனது நேர்ஸ் மற்றும் சாம் இவளது போய்பிரண்டு என நால்வருமாக ஆப்ரேசன் மேசைக்கு உயர்த்தி தூக்கினோம்’

‘சாம், இதற்கு மேல் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.நீ வரும்போது உனது நாயின் விதையை போமலினில் பதனிட்டு தருகிறேன், என உறிதியளித்தேன்

சாம் என்ற இந்தப் பெண கடந்த ஏழு வருடங்களாக எனக்கு அறிமுகம் உண்டு. ஆரம்பத்தில் தனது சிறிய நாய் ஒன்றை பக்கத்து வீட்டு பெரிய நாய் ஒன்று கடித்து விட்டதாக கொண்டுவந்தாள். ஓரு சில நாட்களில் அதை எனது கிளினிக்கில் வைத்து குணப்படுத்திய பின்பு நாங்கள் தொடர்பு கொண்டு நாயை வீட்டுக்கு எடுத்து செல்லும்படி சொன்னபோது இரண்டு நாட்களாக வரவில்லை.எங்களுக்கு இந்த நாய்களை வெளியே கொண்டு செல்லவேண்டும். உணவு தண்ணீர் கொடுக்கவேண்டும்.முக்கியமாக விடுமுறை நாட்களில் இது பல சங்கடத்தை அளிக்கும்.

இரண்டு நாட்களின் பின்பு தான் பகலிலில் நித்திரை கொண்டுவிட்டேன் என மன்னிப்பு கேட்டுக்கொண்டு இரண்டு நாட்கள் அவளது நாயை வைத்திருந்ததற்கு ஆன பணத்தையும் சேர்த்து நோட்டுகனால் செலுத்தினாள். அவளது கையில் இருந்து வந்தவை பச்சை நிறமான அவுஸ்திரேலிய நூறு ரூபாய் நோட்டுக்கள்.

இப்படியாக இரண்டு முறை நடந்தது. இதன் பின்பு எனது நேர்சுக்கும் அவளது நடத்தை எரிச்சல் ஊ.ட்டியது.

இந்த சாம் இப்படி பகலில் நித்திரை கொள்வதற்கு அப்படி என்ன வேலை செய்கிறாள்?

‘கேட்க வேண்டியது தானே’

‘நான் கேட்பதற்கு கூச்சப்படும் வேலையாக இருக்கலாம் என யோசித்தேன்’

‘அது என்ன அப்படி கூச்சப்படும் வேலை?’

‘ஏதாவதாக இருக்கலாம்’ என இழுத்தாள்

இதற்கு மேல் உரையாடலை நிறுத்திக்கொண்டேன்

இரு வருடங்கள் சாம்மிடம் எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது

நாங்கள் அனுப்பிய புத்தாண்டுவாழ்த்துகள் திரும்பி வந்தது.

நான் சொன்னேன்’ எங்கள் உறங்கும் அழகி வீடுமாறி இருக்கலாம்’

‘உறங்கும் பெண் என்பது சரி ஆனால் அழகி என்பது பொருந்தாது’ இது எனது நேர்ஸ்

‘அவளது இழமைக்காலத்தில் அழகியாக இருந்திருக்கலாம் ஒரு தானே’ என சமாளித்தேன்.

இப்படி பேசிய சில நாட்களின் பின்பு இந்த உறங்கும் அழகி எங்கள் முன் தடீரென வந்து

நான் சிலகாலமாக கிழக்கு விக்டோரியாவில் பண்ணை வீடொன்று வேண்டியிருப்பதாகவும் எங்கள் கிளினிக்கு அருகாமையில் தான் வசித்த வீட்டை வாடகைக்கு கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தாள். அவள் செள்றதும் எனது நேர்சை பார்த்து

‘இப்பொழுது தெரிகிறதா ஏன் இந்தப்பெண் பகலில் தூங்குகிறாள். அவளுக்கு வேலை செய்யவேண்டிய தேவையில்லை. அவளுக்கு ரொட்டியையையும் பட்டரையும் கிடைப்பதற்கு ஆண்டவன் ஏற்கனவே வழிசமைத்திருக்கிறார். எங்கள் மாதிரி அன்றாடம் வேலைசெய்யவேண்டியது இல்லை.

குறைந்த பட்சம் அவளது வேலையை பற்றி புதிராக இருந்த விடயம் புரிந்ததில் திருப்தி அவளது முகத்தில் தெரிந்தது.

சுமீபத்தில் ஒரு காலைநேரத்தில் நாள் தனிப்பட்ட முறையில் பேசமுடியுமா என்னிடம் கேட்டாள்.

சும்மதம் தெரிவித்து வரசொல்லிவிட்டேன்.

அன்று மதிய நேரத்தில் கண்கள் சிவந்தபடி கண்ணீர்மல்க வந்தாள். எனது அறையின் உள்ளே அவளை அழைத்து நாற்காலியில் இருத்தினேன். இருந்த படியே முகத்தை மூடிக்கொண்டு குலங்கி அழுதாள.

சு¢றிது நேரம் அழுது முடியும் வரை பொறுத்திருந்து விட்டு ‘என்ன விடயம்?

‘என்னிடம் ஒரு புல் மஸ்ரீவ் நாய் உள்ளது. நீங்கள் அதைப்பார்க்கவில்லை. ஓரு வயதும் ஆகவில்லை. பக்கத்துவீட்டில் இருந்த சிறிய நாய் வந்த போது அதைக் கடித்துவிட்டது. நகரசபையை சேர்ந்தவர்கள் வந்து எனது நாயை கருணைக்கொலை செய்யச் சொல்லிவிட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஓரு முறை அதுவும் உங்கள் வீட்டு வளவுக்குள் வந்த போது கடித்ததால் உங்கள் நாயை கொலை செய்ய சொல்வது நியாயம் இல்லை. எதற்கும் நகரசபை உறுப்பினருக்கு மேன் முறையீடு செய்வது நல்லது’

‘அடுத்த திங்கள் கிழமை வரும் போது நாய் இருந்தால் தாங்கள் கொண்டு போய் விடுவோம் என்றார்கள். இன்னும் நகரசபையில் நான் பதிவு செய்யாததற்கு அபராதம் விதிப்பதாக கூறி விட்டு சென்றார்கள்’எனக் கூறி சிறு குழந்தைபோல் அழுதாள் அந்த நாற்பது வயதுப் பெண்

அழுவது துக்கத்தின் வெளிப்பாடு என்றாலும் சாம்மின் அழுகை கொஞ்சம் அளவுக்கு மீறியதாக எனக்குப்பட்டது. அள்னிய மான பெண் இந்த மாதிரி எனது அறையில் இப்படி அழுவது ஒரு அந்தரமாகவும் இருந்தது.

சு¢றிது நேர சிந்தனைக்குப்பின் ‘சாம் இப்படி செய்தால் என்ன? உனது நாயை வேறு இடத்துக்கு மாற்றி ஒருவரிடம் கொடுத்து அவரது நாயாக நகரசபையில் பதிவு செய்து கொள்.’

உடனே அழுகையை நிறுத்திவிட்டு அது நல்லது யோசனைதான் எனது போய்பிரண்டின் குடும்மபத்தினரிடம் நாயை கொடுத்து விடுகிறேன்.

,சாம், ஆண் நாய் ஆனதால் விதை நீக்கிவிடுவதுடன் கீழ்படிவாக பயிற்சி அளிக்கவேண்டும். இல்லையெனில் இந்தப்பிரச்சனை மீணடும் ஏற்படலாம்’

,நான் உங்களிடம் ஆப்பிரேசனுக்கு கொண்டு வருகிறேன். நன்றி ‘ என முகம் முழவதும் சிரித்தபடி வெளியேறினாள்

எனது நேர்ஸ் அவள் சென்ற பின் மிகவும் விசித்திரமான பெண் என்றாள்

—-

நாயின் விதையை அகற்றி அதை கண்ணாடி ஜாரில் போட்டு கையில் கொடுத்த போது சம், நீ ஒரு விசித்திரமான பெண்’ என்றேன்.
அவள் சிரித்தபடி ‘ ஓம்’ அப்படித்தான் பலர் சொல்லி இருக்கிறார்கள்’

uthayam@optusnet.com.au

Series Navigation