திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சு.மு.அகமது கவிதை

This entry is in the series 20100418_Issue

சு.மு.அகமது


வேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல்
எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும்
பூடகப் பறவையின் பறத்தல்
காலக் களறியின் குளம்பொலிப்பட்டு
கன்றி கனன்று கங்கென உமிழும் எண்ணங்களை

செந்தீனியிட்டு பசியாற்ற விழைகையில்
மவுன தேசத்து சிறகொன்று
வருடிடும் மென்மையாய் உணர்வுகளை

வேண்டுதலற்ற பிரார்த்தனையின் விளைவாய்
அந்நியப்படும் மனக்கிலேசங்கள்
மாற்றாய் பிணிநீக்கும் அருமருந்தாய்…

எல்லாம் வாய்க்கும் பொழுதில்
கூடுவிட்டு பாய்ந்தோடும்
நினைவுக்கலவையில் வார்த்தெடுத்த ஓவியசிதிலங்கள்

உண்மை உணர்த்துவது உள்ளவற்றையே!

சு.மு.அகமது

Series Navigation

About சு.மு.அகமது

சு.மு.அகமது

View all 12 articles →

சு.மு.அகமது கவிதை

This entry is in the series 20100402_Issue

சு.மு.அகமது


———————–

வேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல்
எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும்
பூடகப் பறவையின் பறத்தல்
காலக் களறியின் குளம்பொலிப்பட்டு
கன்றி கனன்று கங்கென உமிழும் எண்ணங்களை

செந்தீனியிட்டு பசியாற்ற விழைகையில்
மவுன தேசத்து சிறகொன்று
வருடிடும் மென்மையாய் உணர்வுகளை

வேண்டுதலற்ற பிரார்த்தனையின் விளைவாய்
அந்நியப்படும் மனக்கிலேசங்கள்
மாற்றாய் பிணிநீக்கும் அருமருந்தாய்…

எல்லாம் வாய்க்கும் பொழுதில்
கூடுவிட்டு பாய்ந்தோடும்
நினைவுக்கலவையில் வார்த்தெடுத்த ஓவியசிதிலங்கள்

உண்மை உணர்த்துவது உள்ளவற்றையே!

சு.மு.அகமது

Series Navigation

About சு.மு.அகமது

சு.மு.அகமது

View all 12 articles →