சதையானவள் .
மார்கண்டேயன்
. .
ஜாதி இல்லை மதமும் இல்லை,
காதல் இல்லை காமம் இல்லை,
வாலிபம் தொலைந்தது நினைவில்லை,
வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை,
. . .
இச்சையின் பிச்சை பசி போக்க,
எச்சிலால் தாகம் தீர்க்க,
வியர்வையின் வீச்சங்கள் விசிறி வீச,
. . .
குடிகெட்ட(கெடுத்த) குறிகளாலே,
குறிகளின் குறிக்கோள்களுக்கென்றே,
குமைந்து போன வாழ்க்கையில்,
சதையென்ற சவமாகி,
சதையாலே ‘சமாதி’
மார்கண்டேயன்.