ஸ்பரிசம்

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

ஷம்மி முத்துவேல்வெளிர் மேகம் சற்றுக் கருமை பூசியதும்
தட்டாம் பூச்சிகள் வட்டமிட்டன …

முதல் துளி ஸ்பரிசம்
உள்வாங்கிய பூமியும்
இசைக்க மறந்த பாடல்களுமாய்
கொஞ்சம் சிலிர்க்க …

உயிர்ப்பை தொலைத்திருந்த
விதை ஒன்றும் துளிர் விட்டது ..
முதல் அரும்பு வெளிவர
காதல் மழை அதை நனைத்தது

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்