திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

விதி

This entry is in the series 20050408_Issue

இளந்திரையன்


அம்மி மிதித்து
அருந்ததி தேடி
அந்தணன் காட்டிய
பகலிலும் பார்த்ததாகப்
பல்லிளித்து

மோதிரம் மாத்தி
மொய் எழுதிப்
போன உறவுகளும்
சாட்சியாக
சக வாழ்வுக்காய்
கைப் பிடித்ததென்னவோ
உண்மைதான்

நான் வரும் வரை
நடு நிசியென்றாலும்
நாக்கு வரண்டு
தண்ணீர் குடிக்கும்
உன்னைப் பார்த்து
சிரிக்கின்றாள்
அருந்ததி

—-
ilan19thirayan@yahoo.ca

Series Navigation

About இளந்திரையன்

இளந்திரையன்

View all 22 articles →

விதி

This entry is in the series 20040513_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


எல்லாம்
எல்லாம்
உன்னால்தான்…

எல்லாம்
எல்லாம்
என்னால்தான்…

யாரால் ?
யாரால் ?
எல்லாம்…

உன்னாலும்…
என்னாலும்…
எந்நாளும் !

யாதும் கூறி….
யாவரும் கேளீர்….
—- நெப்போலியன்
சிங்கப்பூர்

____
Do You Yahoo! ?
Log on to Messenger with your mobile phone!
http://sg.messenger.yahoo.com

Series Navigation

About நெப்போலியன்

நெப்போலியன்

View all 62 articles →

விதி

This entry is in the series 20020825_Issue

வை. ஈ. மணி


விதியால் வந்த வினையென்பர்
….. விண்ணில் கோட்டை கட்டுபவர்
மதியால் விளைவை ஆய்ந்தறிவர்
….. மடமை வினையை வழக்குமென (1)

சதிபோல் தோன்றும் விதியேநம்
….. துன்பம் தீர்க்கத் துணையாகும்
முதியோர் உணர்ந்த இவ்வுண்மை
….. வடிவம் கொண்ட கதையிதுவே (2)

அரசன் நாட்டின் நிலையறிய
….. அழைத்துச் சென்றான் மந்திரியை
மரங்கள் அடர்ந்த காட்டினிலே
….. மன்னன் கேட்டான் யோசனைகள் (3)

பாதை தவறிச் சென்றவர்கள்
….. பதறிப் புதரில் சிக்கினரே
காதை முட்கள் கிழிக்க(அ)ரசன்
….. குமுறித் தனது விதிநொந்தான் (4)

நடுங்கும் குளிரில் நடுநிசியில்
….. நடந்து மேலும் செல்லுகையில்
தடுமா றிப்பாழ் கிணறொன்றில்
….. தவறி வீழ்ந்தான் அமைச்சனவன் (5)

மிகவும் நொந்த மன்னனிடம்
….. வருத்தம் கொண்ட மந்திரியும்
நிகழ்ந்த தெல்லாம் நன்மைக்கே
….. நம்பும் என்று நவிழ்ந்தனனே (6)

வீண்டும் வேந்தன் வழிநடக்க
….. முன்னில் வந்த அரக்கர்கள்
உண்ண உணவு உறுதியென
….. ஓலமிட் டவனைச் சூழ்ந்தனரே (7)

வலையில் வீழ்ந்த மானைப்போல்
….. மருண்டு நின்ற மன்னனது
தலையைத் தாக்க முன்வந்த
….. துட்டன் காதில் குறைகண்டான் (8)

உடலில் ஊனம் உற்றவரை
….. உண்ப துசிதம் அன்றென்று
தடங்கல் நேரச் சினம்கொண்டு
….. தூற்றிக் கொண்டு சென்றனரே (9)

உயிர் பிழைத்த மன்னன்பே(ர்)
….. ருவகை பூத்து மந்திரியின்
உயிர் காக்கத் துணைதேடி
….. ஊரை நோக்கி விரைந்தனனே (10)

அரசன் ஆழ்ந்தான் சிந்தனையில்
….. அமைச்சன் கூற்றின் பொருள்தேடி
விரைவில் வந்தான் மந்திரியும்
….. வாழ்த்த மன்னன் புகழ்பாடி (11)

இயலா விதியின் குறியறிய
….. இன்னல் போலத் தோன்றிடினும்
நியதி நிலைக்கக் காரணமாய்
….. நன்மை பயக்கச் செய்திடுமே (12)

வை. ஈ. மணி

Series Navigation

About வை ஈ மணி

வை ஈ மணி

View all 19 articles →