This entry is in the series 20110123_Issue

ஆனந்தி



எத்தனை மாற்றங்கள்..
எண்ணிலடங்கா ஆசைகள்…
எதுவும் செய்ய முடியா…
எதிர்க்கும் சக்தியற்ற…
ஏகாந்த மனோநிலை…!

அத்தனைக்கும் ஆசைப்படு என்றே..
அடிகள் ஒருவர் சொன்னார்…
சரி எத்தனைக்கு ஆசைப்பட்டால்..
ஏதேனும் ஒன்று கிடைக்கும்..?

ஓர் நாளில்
ஓராயிரம் மாற்றங்கள்..
அமைதியான ஓடையாய்..
ஆர்ப்பாட்டமில்லா அருவியாய்..
கலங்களில்லா நீர்த்தேக்கமாய்…
கற்பனையில் தான்
வாழ முடியுமோ??

~

Series Navigation