This entry is in the series 20030209_Issue


தேவையான பொருட்கள்

1 முட்டை

1 கோப்பை வெதுவெதுப்பான தண்ணீர்

1 தேக்கரண்டி உப்பு

3 மேஜைக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய்

600 கிராம் மாவு (மைதா)

சர்க்கரை ருசிக்கேற்ப

செய்முறை

மாவு, சர்க்கரை, தண்ணீர், முட்டை ஆகியவற்றைக் கலந்து கொண்டு நன்றாக மெதுவான பதம் வரும்வரை பிசையவும். இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இரவு முழுவதும் வைக்கவும். காலையில் ரொட்டி கனாய் செய்ய வேண்டும் போது, நெய்தடவி தட்டையாக தேய்க்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ரொட்டிகளை ஒவ்வொன்றாக வேகுவரை சுடவும்.

இதனை சூடாக இருக்கும்போதே, பருப்பு அல்லது கோழிக்கறி குருமாவுடன் சேர்ந்து சாப்பிடலாம்

Series Navigation