ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

அமைதிச்சாரல்பிளாஸ்டிக் பெட்டிகளுடன்,
நகரும் இரும்புப்பெட்டிகளுக்குள்
கடைவிரிக்கும்
எதிர்கால தொழிலதிபர்கள்,
வழக்கமான வாடிக்கையாளருக்கென்று
திறந்துவைக்கும் சிறிய சாம்ராஜ்யத்தில்;
தொண்டை கிழிய
கத்தியபின்னும், மிஞ்சுகின்றன..
இன்னும் நிரம்பியிருக்கும் பெட்டிகளும்
ஒரு தேனீருக்கான
சில சில்லறைகளும்..

Series Navigation

அமைதிச்சாரல்

அமைதிச்சாரல்