மோனநிலை..:-

This entry is part 52 of 43 in the series 20110529_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்ஒருத்திக்கு கிளி பூச்செண்டு
இன்னொருத்திக்கு கரும்புவில்
மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள்
சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி.

நான் சமையலறைக் கரண்டியுடன்
சிலசமயம் லாப்டாப்புடன்
எதுவும் சுமக்கா மோனநிலையில்
ஏன் எவருமே இல்லை..

Series Navigation<< போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்சில மனிதர்கள்… >>

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்