மீண்டும் ஒரு காதல் கதை 2

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

இரவி ஸ்ரீகுமார்


-1-

குமாராகிய என்னால், இன்னும் நம்ப முடியவில்லை. நிஜமா கனவா ? புர்ியவில்லை.

‘அது ஸ்வாதியா ? நான் பார்த்தது ஸ்வாத்ியையா ? இன்னும் குழந்தை என்று குடும்பத்தார் எண்ணிக்கொண்டிருக்கும் என் ‘அண்ணன் வெங்கடகிருஷ்ணனின் மகள் ஸ்வாதியையா அந்த மாத்ிரி ஒரு நிலையில், ஒரு இளைஞனோடுப் பார்த்தேன்.

அதுவும் ஒரு சித்தப்பா, மகளை பார்க்கக் கூடாத ஒரு நிலையில்.

நம்பத்தான் வேண்டும்.

என்னுடன் அப்போது இருந்த கஸின் ஹரியும் தானே அதனைப் பார்த்தான். நாங்கள், எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரின் வீட்டு கல்யாணத்திற்கு போய்விட்டு, பைக்கில் வரும் வழியில், ரோடை ஒட்டிய ‘பார்க் ‘கில், ஸ்வாதியையும், அவனையும் அந்த

– ‘மெய் மறந்த ‘ நிலையில் பார்த்தோம்.

ரோட்டோரம், இன்னும் சூரியன் மறையாத வேளையில், இவ்வளவு நெருக்கமாக ஒரு இளைஞனுடன்- என் குடும்பத்துப் பெண்.

மனம் மரத்துப் போன மாதிரி – வலி தெரியாது, வேதனைப் படாது- அப்படியே ஸ்தம்பித்துப் போயிருந்தது.

ஸ்வாதி, போன மாதம் வரை என் வீட்டிலிருந்து தான் , வேலைக்குப் போய்கொண்டிருந்தாள். இப்பொது தான் ‘வொர்க்கிங் வுமன்ஸ் ‘ ஹாஸ்டலில் தங்க ஆரம்பித்துள்ளாள்.

‘ இந்த வசதிக்காக தானா ? ‘ – என் மனம் வெம்பியது.

‘இல்லை சித்தப்பா. அந்த ஹாஸ்டல், என் ஆஃபிஸ் பக்கதிலேயே இருக்கு. எனக்கு ரொம்ப செளகரியம்.. இங்கேயிருந்து பஸ்ல போய்ட்டு வர இரண்டரை மணி நேரத்துக்கு மேலே ஆறது.. நீங்களும் அப்பாவும், டூ வீலர் வாங்கிக்க ஒத்துக்க மாட்டேங்கிறீங்க..

பஸ் டிராவல் உடம்பை ரொம்ப வலிக்குது. ‘ ஸ்வாதி சிணுங்கியப் போது,

‘ ஐயோ பாவம் குழந்தை ‘ என மனம் இளகியது.

அப்பொழுதும் சித்ரா- என் மனைவி ஆட்சேப்பித்தாள்.

‘நாங்க இதே ஊரில இருக்கறச்சே..நீ ஹாஸ்டல்ல தாங்கக் கூடாது ஸ்வாதி.

அது தப்பு.அப்புறம் ஏதாவது தப்பாச்சுன்ன எங்க தல தான் உருளும். அதலேயும்

என்னதான் எல்லாரும் தப்பு சொல்வாங்க. இந்த வ்ிஷயத்தில எனக்கு பரிபூரண ஆட்சேபணை தான். நீங்க இதுக்கு ஒத்துக்க கூடாது. -சித்ரா சொன்னதை கேட்டிருந்தால், ஒருவேளை இன்னிக்கு நான் இந்த கண்றாவி காட்சியைப் பார்த்திருக்க வேண்டாம்.

‘இதோ பாரு ச்ித்ரா.. குழந்தை ரொம்ப கஷ்டப் படறா..நீ கொஞ்சம் சும்மாய்ிரு ஒகே ? ‘ நான் அவளை அடக்கினேன். விதைத்த வினை. அறுக்கதான் வேண்டும்.

வேதனைப் படும் மனதினை சோதிக்கும் விதமாக ஹர்ி,

‘ இல்ல குமார்..,..என்னால ஜீரணிக்க முடியல..,வெங்கியண்ணாவுக்கு இந்த வயசுல இது வேணுமா ? ‘ என்று புலம்புகிறான்.

அவன், வெங்கியண்ணாவின் வயசை மட்டும் தான் பார்க்கிறான்.

‘ப்ச்.., நீ வெங்கியண்ணாவோட வயசை மட்டும் தான் பார்க்கறே… ஸ்வாதி வயசை தான் முக்கியமா பார்க்கணும். சரியா ? ‘ நான் எரிச்சல் பாட்டேன்.

இதற்கு எந்த வகையிலாவது ஒரு தீர்வுகாண வேண்டும்.

அதனை விடுத்து இதெல்லாம் என்னப் பேச்சு.

‘ஓகே ஹர்ி. இதை ..இங்கே பார்த்ததை இப்பவே மறந்துடு. சர்ியா ? ‘

ஹரி, தொலைபேசி துறையில் ஒரு குமாஸ்தா.

வேலைக்கு லீவு போட்டுவிட்டாவது, இந்த விஷயத்தை பரப்புவான்.

அதை தடுக்கவேண்டும்.

‘இல்லேன்னா, என் ஃபிரெண்டு கம்பெனில உன் மச்சினனுக்கு ரெக்கமண்ட் பண்ணலாம்னு இருக்கிற வேலை .. அவ்வளவு தான். ஒகே ? ‘-

நான், ரவுடி போல், ஹரியை பயமுறுத்தினேன். வேறு வழி.

என் குடும்ப கவுரவம் முக்கியம். ‘அது பாழ்படக்கூடாது.

ஆனால் அதே நேரத்த்ில், ஸ்வாதியின் மனதும் காயப்படக் கூடாது.

‘இல்லை குமார். நான், யார் கிட்டேயும் சொல்லலை.. ‘- முகம் சுருங்க ஹரி சொன்னான்.

ஒரு பரபரப்பான வம்பை தன்னால் வெளியில் கிசுகிசுவாக ஆக்க முடியாத வருத்தம் அது.

**********

-2-

இரவு ஒன்பது மணி. ஸ்வாதி, இன்னும் ஹாஸ்டலுக்கு வரவில்லை.

‘ஸார்.நாங்க ஜெனரலா வ்ிஸிட்டர்ஸை, ராத்திரி எட்டு மணிக்கு மேலே

அனுமதிக்கறதில்லே. மணி இப்போ ஒன்பதாகி விட்டது. நீங்கள் இதற்கு மேல் வெயிட் பண்ணாமல், கிளம்பலாம். ஸ்வாத்ி வந்தால் நீங்கள் வந்துப் போன செய்தியை

சொல்கிறோம். ‘ –

அந்த ஐம்பத்தைந்து வயது ஆன்டி-அந்த வுமன்ஸ் ஹாஸ்டலின் மேலாளர்- என்னிடம் கண்டிப்பான குரலில் கன்னடத்த்ில் கூற்ியதின், தமிழாக்கம்.

மெதுவாக நடந்து வெளியில் வந்தேன்.

ஹரி, ஏதோ வேலை இருப்பதாக கூறி நடுவில் இறக்கி விட சொல்லிவிட்டான்.

அந்த அளவில் கடவுளுக்கு நன்றி.

சித்ராவிடமும்,

‘வர நேரமாகும். நண்பரோடு முக்கியமான விஷயமாக வெளியில் போகிறேன் ‘

என ‘மொபைல் ‘ வழியாகப் புளுகியாகிவ்ிட்டது.

மெதுவாக, நான் சென்ற வாரம் புதிதா வாங்கிய டூவிலரிடம் வரவும் –

அவர்கள், ஸ்வாதியும் அவளுடைய ஆண் நண்பனும் – டூ வீலர்ில் வந்து இறங்கவும் –

நேருக்கு நேர்.

ஸ்வாதியின் முகத்தில் நிதர்சனமாக அத்ிர்ச்சி .

‘சித்தப்பா ? ‘ , நான் பத்ில் சொல்லவில்லை.

‘யாருக்காவது உடம்பு சரியில்லையா. நீங்களே ஹாஸ்டலுக்கு வந்துட்டிங்க.. ? ‘ – ‘அப்படியென்றால் ‘வளுடைய ‘திர்ச்ச்ி, ‘வளுடைய செய்கைக்கு இல்லையா ?

அவளையும், அவள் நண்பனையும் ஒரு முறை தீர்க்கமாக பார்த்தேன்.

‘நாளைக்கு கார்த்தாலே..11 மணிக்கு வீட்டுக்கு வா ? ‘

நான் அவளுடைய பத்ிலுக்கு காத்திராமல் டூவீலரைக் கிளப்பினேன்.

**********

-3-

சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தேன். களைப்பாக இருந்தது.

‘வாம்மா. ‘

மறு நாள் ஸ்வாதி வந்த பொழுது, சித்ரா வீட்டில் இல்லை.

அவள் ‘செளந்தர்யலஹர்ி ‘ –ஸ்லோக வகுப்புக்குப் போய் விடுவாள் என தெரிந்தே தான்

ஸ்வாதியை வர சொல்லியிருந்தேன்.

என்னோடு 20 வருடம் வாழ்ந்தவள் தான், சித்ரா. ஆனாலும் என் திட்டம்

அவளால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

‘சித்தி இல்லையா சித்தப்பா ? ‘-ரெஃப்ர்ிஜிரேட்டர்ில் இருந்து, இரண்டு கோக்கோ கோலா

பாட்டில்களை எடுத்து திறந்தப்படி கேட்டாள்.

மழையோ,குளிரோ இல்லை வெய்யிலோ, குளிர் பானம் குடிப்பதில் தான்,

இந்த கால இளைஞர்களுக்கு எவ்வளவு ஆர்வம் ?

‘ஸ்லோக கிளாஸ் போயிருக்கா ‘

‘அப்படியா ? இந்தங்கா… ‘ ஒரு பாட்டிலை என்னிடம் நீட்டினாள்.

‘அவ இருக்க மாட்டாள் என்பதால் தான் உன்னை வர சொன்னேன்.

இல்லாட்டி, உன்னுடைய நடவடிக்கையால் அவள் ரொம்ப அப்ஸெட் ஆயிடுவா. ‘

– முதல் அடியிட்டேன்.

‘என்னுடைய மனைவியையும் வ்ிட்டுக் கொடுக்கவில்லை, அதை வைத்தே,

ஸ்வாதியிடமும் பிரச்சனையையும் ஆரம்பித்தி வ்ிட்டேன்.

‘என்னுடைய நடவடிக்கையாலேயா ? அப்படின்னா ? ‘ –

அவள் குரலில் ஆர்வமா,கவலையா இல்லை அத்ிர்ச்சியா என இனம் காண முடியாத

ஏதோ ஒரு பதற்றம் இருந்தது.

‘.இதை….இதை தான் எதிர்பார்த்தேன் மகளே ‘-

‘யாரவன் ? ‘- ஒரு வார்த்தை வினா.

ஸ்வேதா ஒரு வ்ினாடி அதிர்ந்தாள். சாமாளித்தவளாக,

‘என்ன கேக்கறீங்கா ? ‘

நேருக்கு நேர் அவள் கண்கள்ில் பார்த்தேன்.

குழப்பம்,திகில் மற்றும் லேசான அதிர்ச்சி.

‘யாரவன் ? நேத்திக்கு உன்னோட வந்தானே அவன். ‘- என்னுள் ஊறிய கோபத்தை

அடக்கியபடி, கேட்டேன்.

‘அவர் பேரு..,.. ‘ தயங்கினாள்.

‘:உம் சொல்லு. ‘

‘பீட்டர்.., ‘

‘ஓ..,..கிரிஸ்டியனா ? ‘

‘வெங்கியண்ணா.., உன்னுடைய மாப்பிள்ளை ஒரு கிற்ிஸ்டியன். ‘

என் மனம் நேற்று அவர்களை, பார்த்ததலிருந்து மரத்துப் போய் இருந்தலும்,

மீண்டும் ஜனித்து, இறந்தது.

‘ஆமாம். ரோமன் காத்தலிக்..,.. ‘

‘ஓ..,..எத்தனை நாளா பழக்கம். ? ‘

‘நியர்லி ஒரு வருஷமா.. ‘ குரலில் லேசான பதற்றம் இருந்ததை தவிர,

அவள் சாதரணமாக இருந்தாள்.

அவள் body language மிகச் சாதாரணமாக இருந்தது.

என் வீட்டு முன் அறை-portico-வில் உட்கார்ந்திருந்தோம்.

வெளியில் ஜனவர்ி மாத முற்பகல் வெய்யில் நிதானமாக.

‘ தென். என்ன பண்ணப் போறே. ‘

என்னை அமைதிப் படுத்திக்கொண்டு, திட்டமும் போட்டுவிட்டேன்.

இனி செயல்முறைதான்.

பதில் சொல்லாமல் வெளியில் வேடிக்கை பார்த்தாள்.

‘சொல்லு ஸ்வாதி. ‘

தயங்கினாள். மீண்டும் நான் பேச ஆரம்பிக்கும் முன்,

‘பிளீஸ்..ஒரு ஃபியூ மினிட்ஸ் சித்தப்பா. ‘

மனதில் ஒத்திகை பார்க்கிறாள்.புரிந்தது.

எதையும் ஒத்திகைப் பார்ப்பது நல்லது. நானும் ஒத்திகைப் பார்த்துவிட்டேன்.

‘ காதல் .கலப்பு மணம். இதெல்லாம் இன்றைக்கு மிக சாதாரணம் தான். ஆனால்..,..

அவரவர் அனுபவப் பட்டால் தான் அந்த பக்குவம் வரும்.

அதுவும் குடும்பம், கெளரவம்- இந்த மாயையில் சிக்கியவர்களின் கதி

என்னுடையதைப் போன்றது தான். எல்லாவற்றையும் சரியாக்க,

அனுசரணை-compromise ரொம்பத் தேவை.

குழந்தையைப் பெறுதல், வளர்த்தல், படிக்கவைத்தல் இதையெல்லாம் செய்யும் பெற்றவர்களுக்கு, குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க மட்டும் உரிமையில்லை.

‘உம் சொல்லுமா.. ‘

‘வந்து,. ‘ – ஒரு வினாடி இழுத்தவள்,

‘கம் வாட் மே. நாங்க கல்யாணம் செய்துக்கப் போறோம். ‘-என்றாள் உறுதியான குரலில்.

‘அவன் பேரு பீட்டர். ஓகே. அவனுடைய குடும்பம் , கேரக்டர், படிப்பு, வேலை..

இதெல்லாம் தெரிய வேண்டாமா ஸ்வாத்ி…. ? ‘- என்னை இடை மறித்து,

‘எல்லாம் விஜார்ிச்சாச்சு. ‘ என்றாள்.

‘அப்படினா..வெங்கியண்ணாவும் நாங்களும் வந்து கல்யாணத்தை நடத்தி வெச்சாப் போறும். இல்லையா ? ‘

‘அது உங்க இஷ்டம். உங்களாலே முடியாதுனா., நாங்களே செய்துபோம். ‘

அவள் இப்போது மிகவும் தைர்ியமாகப் பேச ஆரம்பித்திருந்தாள்.

‘ஸ்வாதி. அவன் ஒரு கிறிஸ்டியன். நாம பிரமின்ஸ். இந்த கல்யாணத்திலே,

நிறைய பிரச்சனைகள் வரும் ஸ்வாதி. உன்னால சமாள்ிக்க முடியாது.

நீ மதம் மாற வேண்டியிருக்கும். அப்புறம் எங்க யார் வீட்டு விஷேசங்களுக்கும்

வரமுடியாது. ‘

என் குரலில் வேதனை.

மனம் கடுத்ததை, என் முகம் காட்டவில்லை. என்னுடையத் தொழில் முறை பயிற்சி,

இதற்கு பயன்பட்டது.

‘உன் அம்மா அப்பா சாவிற்குக் கூட உன்னால் பங்கேற்க முடியாது. ‘

‘சித்தப்பா..நீங்க எந்த காலத்திலே இருக்கீங்கா ?அதெல்லாம், ஒரு பேரன் பேத்தி பிறந்தால், எல்லாம் சர்ியாகி விடும். மத விஷயமா எங்களுக்குள்ளே பிரச்சனை வராது. ஏன்ன,

நான் already கிறிஸ்டியனா கன்வர்ட் ஆயிட்டேன். ‘

‘வாட் ? ‘ அதிர்ச்சியில் எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.

‘ஆமாம் சித்தப்பா. என் பேரு இப்போ அஃபிஷியாலா ‘ஸ்வாத்ி மேரி ‘.

நம்ப வீட்டுக்குதான் நான் ஸ்வாதி. ஆஃபீஸ்ல நான் ஸ்வாதி மேரி.

கெஸட்டிலேயே பேரை மாத்தியாச்சு. ‘ அலட்டிக்கொள்ளாமல் அவள் பேசினாள்.

இதற்குமேல் என்னால் பொறுக்க முடியவில்லை.

‘ஸ்டாப் இட் ஸ்வாதி. நீ ஒரு மனுஷப் பிறவி தானா ?

பெத்தவங்க வெச்ச பேரையே அவங்களுக்குத் தெரியாம மாத்தி வெச்சுண்டு,

எங்க யாருக்கும் தெரியாம மதம் மாறிண்டு.. you are a traitor to the family.. ‘ கோபத்திலும், வேதனையிலும் எனக்கு நெஞ்சை அடைத்தது.

அவள் அமைதியாக வெள்ியில் எங்கோ பார்த்தபடி இருந்தாள்.

‘உன்னை வளர்க்க உன்னுடைய அப்பாவும் அம்மாவும் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்.

நான் காதலுக்கு எதிரி இல்லை. ஆனால் உன்னுடைய கன்னிங்னெஸ் எனக்கு வெறுப்பை தரது. நீ ஒரு முழு சுயநலவாத்ி.only tinking about you. you alone. உன் பேரண்ட்ஸ்கு நீ ஒரே குழந்தை. உன் பேரண்ட்ஸ்..அவங்க உன் மேலே வெச்ச நம்பிக்கை,அன்பு..

எல்லாம்.. பொய்யா ? ‘- சற்று உரக்க பேசினேன். இல்லை கத்தினேன். உணர்சிவசப்பட்டதில், எனக்கு மூச்சு வாங்கியது. என்னை ஆஸ்வாசப் படுத்திக்கொண்டு,

‘ஓகே. மதம் எங்கே மாறினே. மெட்ராஸிலேயா..இல்லை இங்கேயா ? ‘

‘இங்கே தான். ஜஸ்ட் டூ மன்த்ஸ் ஆறது.அவள் சற்று வித்தியாசமாக ,

யாரோ அந்நியனிடம் பேசுவது போல் பேசினாள்.

இல்லை என் பிரமையா ?

‘ஓ.. ‘ சற்று நேரம் இருவருமே அமைதியாக இருந்தோம்.

‘ம்.. ஒரு ச்ித்தப்பா மகள்ிடம் கேட்க கூடாத கேள்வி இது. பீடிகையுடன் ஆரம்பித்தேன்.

ஸ்வாதி சற்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

‘இன்னும் நீ மிஸ் தானே. ? தாட்டாஸ்.. ‘

‘புரியரது. ‘ சற்று தயங்கினாள்.

‘உங்க காலத்தைப் போலே.. பழைய பஞ்சாங்கமாய்

என் ஜனரேஷன் இருக்கறது இல்லை..

பாதுகாப்பா இருக்க நிறைய வழி இருக்கு.. ‘

‘ஓ ‘- புரிந்துக்கொண்டேன். ஆனால் அவள் ஜனரேஷன் முழுவதற்குமாக பேசியது

பிடிக்கவில்லை.

‘ஓகே .. என்ன பண்ணலாம் ? ‘ – நான் மனம் மறந்து கேட்டேன்.

மனதளவில் ஸ்வாதி விஷயத்த்ில் இறந்திருந்தேன்.

‘அதான் சொன்னேனே. ஐ ம் ரெடி ஃபார் எனிதிங்.பட் ஐ ஹாவ் டு மெரீ பீட்டர். ‘

ஒன்று புரிந்தது. அவள் எதற்கும் தயராகி வ்ிட்டாள்.

நிஜம் தான். ஊர் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் தான்.

ஆனால் அந்நிகழ்வுகள் எங்கள் குடும்பத்திலும் அரங்கேற போகின்றன

-யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.

அதனை நாகரீகமாக நிகழ்த்தவேண்டும்.அவ்வளவு தான்.

‘சரி ஸ்வாதி. நீ ரொம்ப உறுதியாக இருக்கே. Good. ஆனால்,

என் அண்ணனின் உடம்பும் உயிரும் எனக்கு ரொம்ப முக்கியம்.

ஸோ , நான் ஒரு திட்டம் சொல்றேன். Can you co-operate ?

இப்போ காதலை பேஸ் பண்ணிதான் நிறைய மூவீஸ் வரதே.

‘காதலுக்கு மரியாதை ‘ பார்த்திருப்பியே.

அந்த ஹீரோயின் மாதிரி please கொஞ்சம் help பண்ணு. Ok ? ‘

‘ம்.. ‘ – தலையாட்டினாள்;

திமிர். உடம்பு முழுவதும் கொழுப்பு. எனக்கு எரிச்சல் வந்தது.

நான் திட்டதை சொல்லத் தொடங்கினேன்.

வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

சாய்வு நாற்காலியிலிருந்து, எழுந்து கதவை திறந்தேன்-ஸ்வாதி.

முற்றும்.

**

ravi_srikumar@hotmail.com

Series Navigation

இரவி ஸ்ரீகுமார்

இரவி ஸ்ரீகுமார்