மீண்டும்

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

பவளமணி பிரகாசம்


எழுப்பி விட்டது ஏதோ ஒரு சிறு பொறி
பழைய ஞாபகங்கள் பல எண்ணங்கள்
ஆழத்தில் உறங்கும் சேமிப்புகள்
ஒழித்துப் போட்ட பரண்மேல் பெட்டியாய்
விளக்கைத் துடைத்து வெளிப்பட்ட பூதமாய்
கிளறிய சம்பவம் இனிமையான அனுபவம்
விளைந்ததோ மீண்டும் நேற்றில் வாசம்
களிப்பாக்கும் கூடை நிறை பூவாசம்.
—————————————————
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

மீண்டும்

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

ப.ய.ணி


.
மெல்ல ஒளிபுரட்டும் பொழுதுகள்
வெளிர் சாம்பல் அடர்ந்து இருளும்
சலிக்கும் பேருந்தின் இருக்கை முதுகு

கொக்கியில் தூக்கி மாட்டிய
தோலுரித்த சதையின் கண்ணாய்
பார்வை இழுபடும்

தோன்றிவிடக்கூடாதா எனும்
யோசனையின் கனம் அஞ்சிக்கவிழ்ந்துத்
தடம் மீண்டும் நாடும் மனம்

பயம் உறைந்து வியர்த்து வழியும்
சலனமற்ற முகத்தசையினூடே
மெல்லக் கசியும்
உயிர்விடும் பெருமூச்சு

பூ மிதக்கும் பசுங்குளக்கரையின் வாசம்
பொசுங்கும்

– ..ப.ய.ணி…

dharan@payani.com

Series Navigation

பயணி

பயணி