மாற்றங்கள்
அதிரை தங்க செல்வராஜன்
கல்லூரியின் கடைசி நாள்
வண்ணத்து பூச்சிகளின்
சிறகுகள் இரும்பாகி,
இழுப்பதற்கு தயாராய்
பஞ்சு மூட்டை பாரங்கள்.
கண்ணுக்கு கடிவாளம் இல்லை
கூட்டத்தில் கரையப் போகிறோம்.
யார் இழுக்கவில்லை,
சுமப்பதும் இழுப்பதும் சுகம்
சொல்லிக் கொள்வதற்கு.
நத்தைக்கு ஓடு பாரமல்ல, நமக்கும்தான்.
தனிமை, வெம்மை வெறுமையால் கூடு கட்டும்.
காதல், காமம் இன்னும் எத்தனையோ
காலம் வண்டியில் ஏற்ற போகும்
அதிசய பாரங்கள்.
நாளை இறகுகள் இளகலாம், பறக்கலாம்.
கல்லூரி வாசனை, வாரிசுகளின் வழியே
வந்து போகலாம்.
பார்வை தேடலில்
மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமாய்