பேல் பூரி , கொத்துமல்லி சட்டினி , பேரீச்சம்பழ சட்டினி

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

வலையிலிருந்து


தேவையான பொருட்கள்

2 உருளைக்கிழங்கு வேகவைத்து சிறு சதுரங்களாக நறுக்கியது

1 வெங்காயம் நுண்மையாக நறுக்கியது

1 கோப்பை துவரம்பருப்பு வேகவைத்தது

1 கோப்பை அரிசிப்பொரி

சில உடைத்த பூரிகள்

3 மேஜைக்கரண்டி கொத்துமல்லி சட்டினி

1/2 கோப்பை பேரீத்தம்பழ சட்டினி

சில கொத்துமல்லி தழைகள் நறுக்கியது

செய்முறை

எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும். பரிமாறும்போது மேலே சில கொத்துமல்லி தழைகளைப் போட்டு பறிமாறவும்

***

கொத்துமல்லி சட்டினி

தேவையான பொருட்கள்

ஒரு கொத்து கொத்துமல்லி இலைகள்

1/2 கொத்து புதினா இலைகள்

6 சிறு பச்சை மிளகாய்

1 தேக்கரண்டி ஜீரகம்

1 எலுமிச்சை சாறு

1/2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்

***

பேரீச்சம்பழ சட்டினி

125 கிராம் புளி இரவு முழுவதும் ஊறவைத்தது

250 கிராம் பேரீச்சம்பழம் இரவு முழுவதும் ஊறவைத்தது

1 மேஜைக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

1 மேஜைக்கரண்டி ஜீரகத்தூள்

1/2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது

உப்பு ருசிக்கேற்ப

செய்முறை

எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்

***

Series Navigation

வலையிலிருந்து

வலையிலிருந்து