This entry is in the series 20030822_Issue

மீ.வசந்த்,வட பசிபிக்


சூரியனும் தொடாத
கற்புள்ள சமவெளிகள்,
பயமின்றி பறக்கும்
நடுக்கடல் பறவைகள்,
சிகெரெட் குடிக்கும்
எரி மலைகள்,
அழுது புலம்பும்
பனி மலைகள்,
சர்க்கS தெரியாத
டால்பின்கள்,
குதித்து விளையாடும்
சுறாக்கள்,
குட்டிக் குட்டியாய்
திமிங்கலங்கள்,
பறந்து சிலிர்க்கும்
சின்ன மீன்கள்,
கண்ணுக்குத் தெரியாத
கன்னித் தீவுகள்!,
விண்ணில் சிந்தியிருக்கும்
வண்ண ஓவியங்கள்,
தொட்டு வருடும்
தென்றல்,
தொடர்ந்து வரும்
கடல்கள்,
…………..
அத்தனையும் ரசித்து
தனியாய் இருக்கையில்,
சேட்டிலைட்டில்
வந்து விழும்
செய்தித்தாள் சொல்லும்…,
அணு ஆயுத நாடுகள்
சண்டைக்கு தயாராம்!! ?.

–MSV001@MAERSKCREW.COM

Series Navigation