This entry is part 49 of 43 in the series 20110529_Issue

ரவிஉதயன்


மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை
நடுநாக்கில் தொட்டெடுத்து
சொடுக்கிச் சுழற்ற
தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி.

சாட்டைக் கையிற்றில்
எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான்.

அட்சய ரேகையிலிருந்து
இடம் மாறி
சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது
சுழலும் பூமிப்பம்பரம்.

20110529_Issue

“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்