நீரைப்போல நாமும் இருந்தால்

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

இரவி ஸ்ரீகுமார்


! —-
——————————————————————–
நீரைப்போல நாமும் இருந்தால்
வானும் மண்ணும் ஒன்றாய் தெரியும்!
கசடும் கழிவும் அகிலும் மணமும்
நீரில் எல்லாம் ஒன்றாய் கலக்கும்!
பிரித்து கழித்து ஒதுக்கி என்றில்லாமல்
வருவதையெல்லாம் தன்னுள் கரைக்கும்!
எனிற்,
நஞ்சும் அமுதும் நீரில் கலந்தால்-நீரும்
கொஞ்சம் தன்மை மாறும்! உடலில்
ஓடும் குருதியில் நீரை பிரித்தெடுத்தால்,
உயிரும் போகும் நீரும் நாறும்!
பொருளுக்கேற்ற உருவை எடுக்கும்
நீரைப்போல – அரசியல் இருந்தால்..
நன்றா தீதா? புரியாப் புதிர்!

Series Navigation

இரவி ஸ்ரீகுமார்

இரவி ஸ்ரீகுமார்