நறுக்குகள்

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

கி. சீராளன்


(1)

சாலையில்

நாலும் நாலும் எட்டு பேருடன்

சவ ஊர்வலம்

சைக்கிள் என்பதால் கடந்து

முந்தினேன்.

என்னைையும் கடந்து

இன்னொரு வேக வாகனம்

முந்திப் போனது.

எங்கே போனோம் ?

யார் முந்தி ?

(2)

பூமி தன் உடம்பை

ஒருமுறை சின்னதாய்

குலுக்கிக் கொண்டது.

ரிக்டரில் ஐந்து புள்ளி ஆறு.

மரணத்தின் தூதுவன்

எடுத்து வைத்த முதலடியில்

நகரம் கிடுகிடுத்தது.

நிலையாமை

தன்னை

நிலை நிறுத்திக்கொண்டது.

(3)

மாட்டை ஏரில் பூட்டி

ஆதிமனிதன் சொன்னான்

இவை குரங்குத்தனமாய்

நிமிர்ந்துவிடலாகாது

என்று.

(4)

வண்டிமாடு

தனைமுந்தும்

கைவண்டிக்காரனை கண்டு

பரிதாபப்பட்டது

‘பாவம் மனிதன்

வண்டி இழுக்க

முதுகில்லாத பிராணி ‘

என்று.

(punnagaithozhan@yahoo.com)

Series Navigation

கி.சீராளன்

கி.சீராளன்