தேவன் அவதாரம்

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

பசுபதி


வந்துதிக்கும் புத்தாண்டை வரவேற்கும் விருந்தில்
. . வழக்கம்போல் ஒருநண்பர் மனையதனில் புதிய
. . வாக்குறுதிப் பட்டியலை வாய்விட்டுப் படித்தேன் !

‘மின்னிணைய கழிவுகளை மேய்ந்திருக்கும் போது
. . விதம்விதமாய் சிற்றுண்டி வெட்டுவதை விட்டு
. . மேனிஎடை குறைக்கவழி மேற்கொள்ளல் வேண்டும் ! ‘

‘செந்தமிழின் செல்வமெலாம் தெளிவுறவே தேர்ந்து,
. . சிறுவருடன் தமிங்கிலத்தில் சீராட்டல் தவிர்த்துத்
. . தினந்தோறும் தாய்மொழியில் தேன்பாய்ச்ச வேண்டும் ! ‘

சென்றஆண்டும் செபித்ததிது ! செயலாற்ற வில்லை :-((
. . தேவன்அவ தாரமிது ; திரும்பவந்து நிற்கும் !
. . சித்ரபானு செனித்தபின்னர் சூளுரைப்பேன் மீண்டும் ! :-))

****
தமிங்கிலம் =தமிழ்+ஆங்கிலம்;
சித்ரபானு = ஏப்ரலில் வரப்போகும் தமிழ்ப் புத்தாண்டு.

Series Navigation

பசுபதி

பசுபதி