சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

பி.கே. சிவகுமார்


சு.ரா.: அது மத்தவங்க மேட்டரைப் போட்டு இருக்காங்க. ஜெனரலா நீங்கப் பார்த்தீங்கன்னா – இந்த country-க்கு வந்ததுக்கு அப்புறம் – (முருகானந்தத்தைப் பார்த்து) சாருக்கு அதுல ரோல் உண்டுன்னு நினைக்கறேன் – இங்கதான் கம்யூனிசம் அமுலாயிருக்கு அப்படான்னு சொன்னார்.

ராஜாராம்: அதனாலதான் அவரை எல்லாரும் திட்டினாங்க.

சு.ரா.: யாருமே திட்டலை சார். (ராஜாராம் அப்படியா என்கிறார்.) தமிழ்நாட்டுல யாருமே அதைக் கண்டுக்கவே இல்லை. லெப்டிஸ்ட் பார்ட்டாஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா ரீயாக்ட் பண்ணியிருக்கணும். அப்படிச் சொல்லாதே, சோஷியலிசம் அங்க இன்னும் அமுலாகலை, சோஷியல் சிஸ்டம் அங்க வேற அப்படான்னு யாருமே சொல்லலை.

ராஜாராம்: சொல்லலை ? ம்…

சு.ரா.: ஏன்னா – அவர் கண்டபடி திட்டுவார். இப்ப நான் திட்டுற மாதிரி இல்லை. அவர் என்னை எப்படித் திட்டியிருக்கிறார் என்று சொன்னால்தான் உங்களுக்குத் தெரியும் மத்தவங்களை எப்படித் திட்டுவார்னு. கண்டபடி திட்டுவார் அவர். அதுக்குப் பயந்துண்டு அவங்க வாயை மூடிட்டு இருக்காங்க.

பி.கே. சிவகுமார்: கார்ல் மார்க்ஸ்கூட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலே முதலாளித்துவத்தின் சிறப்புகள்னு ஒரு அத்தியாயம் எழுதியிருக்கார். So, capitalism has its advantages too.

சு.ரா.: அதுபத்தி நான் சொல்லலை.

பி.கே. சிவகுமார்: அந்த aspect-ல ஜெயகாந்தன் அமெரிக்கா பற்றிச் சொன்னதை ஏன் …

(உரையாடல் மேற்கொண்டு ரெகார்ட் செய்யப்படவில்லை. சில நிமிடங்கள் கழித்து ரெக்கார்டிங் மறுபடியும் ஆரம்பிக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே உரையாடல் தொடர்கிறது. சு.ரா.வும் சாப்பிட்டுக் கொண்டே பேசுகிறார். ரெக்கார்டிங் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன், பி.கே. சிவகுமார் ‘உங்கள் எழுத்துகளில் கிருஷ்ணன் நம்பியைப் பற்றிப் பேசும்போது ஒரு விசேடமான அன்பும் வாத்ஸல்யமும் தெரிகிறது. கிருஷ்ணன் நம்பி இருந்திருந்தால் உங்கள் எழுத்துகளுக்கு உதவி இருக்குமா ? உதாரணமாக, இடைவெளி விடாமல் எழுத உதவியிருக்குமா ? ‘ என்று சு.ரா.வைக் கேட்கிறார். கிருஷ்ணன் நம்பி இருந்திருந்தால் அவர் என் மோசமான எதிரி ஆகியிருக்கலாம் என்று சு.ரா. பதில் சொல்கிறார். அந்த உரையாடலில் தொடர்ந்து சு.ரா. பேசுவது பின்வருகிறது.)

சு.ரா.: அவங்கதான் என் enemy ஆகி இருக்காங்க. ரொம்ப close-ஆ பழகினவங்க. மத்தவங்க இல்லை. மத்தவங்க இல்லை. (கூட்டத்தில் சிரிப்பு) இப்ப ராஜன் குறை என்னை என்ன வேணா திட்டட்டும். அவர் திட்டறது கொஞ்சம் கூட – எனக்கு மனசுல பாதிக்கவே இல்லை. என்ன வேணா அவர் விமர்சனம் பண்ணட்டும். அவரைத் தூக்கித் தூரப் போட்டுடுவேன். இல்லைன்னா, பதில் சொல்லுவேன். என்ன வேணா செய்வேன். என்ன வேணா செய்வேன். counter பண்ணுவேன். ரீஜாய்ண்டர் எழுதுவேன். அவர் என்ன விளையாடுறார் என்கறதை நான் பார்த்துண்டே இருக்கேன். ஆனா, அவங்களுடைய (க்ளோஸ் பிரெண்ட்ஸுடைய) விஷயம் நம்மால தாங்க முடியாது. ஏன்னா, நாம அவங்ககிட்டே பழகியிருக்கோம்.

பி.கே. சிவகுமார்: உங்க எழுத்துகளில் ஓர் இனம் புரியாத ஒரு துள்ளல் – ஒரு innocence – திடார்னு ஒரு ஒளி – நீங்க கிருஷ்ணன் நம்பியைப் பற்றிப் பேசும்போது மட்டும்தான் வரும். மற்ற நேரங்களில் நீங்க ரொம்ப cautious-ஆ எழுதறீங்க. கிருஷ்ணன் நம்பியைப் பற்றிப் பேசும்போது மட்டும் நீங்க வந்து – திடார்னு ஒரு பழைய காலத்துக்குப் போய் – கனவு வாழ்க்கைல இருந்து எழுதற மாதிரி – நீங்க எழுதுவீங்க. So, it is very hard for me to believe that he would have…

சு.ரா.: இல்ல இல்ல. உங்க பேர் என்ன ?

பி.கே. சிவகுமார்: சிவகுமார்

சு.ரா.: சிவகுமார், நாம வந்து நல்ல மனநிலையில் இருக்கற சூழ்நிலையிலேயே நம்மளை அறியாமலேயே பிறரைத் துன்புறுத்தறோம். அதை நீங்க புரிஞ்சிக்குங்க. நாம ரொம்ப நல்ல மனநிலையிலே இருக்கறோம். இப்ப கிருஷ்ணன் நம்பிக்கு – அவரை நான் promote பண்ணலைன்னு எண்ணம்னு வெச்சுக்குங்களேன் – அவருடைய முக்கியமான – மனசுல உள்ள எண்ணம் வந்து – இந்தச் சுந்தர ராமசாமி என்கிற பயல் வந்து – என்னை ஏன் promote பண்ணலை – அப்படாங்கற எண்ணம் இருந்ததுனா, அவர் என்னைத் திட்டுறதுக்கான காரண காரியங்கள் – ஆயிரம் காரணங்கள் இருக்கு. நான் அவரை promote பண்ணலை. எந்த ரைட்டரையும் நான் promote பண்ணலை.

சாமிநாதன்: உங்க age group-லயே இருந்தவங்க அந்த மாதிரி ஆகி இருக்காங்களா ? ஒரு மோசமான எதிரிங்களா ?

சு.ரா.: அப்படி ஆகாதவங்க இல்லை. (கூட்டத்தில் சிரிப்பு) இந்த மாதிரி நம்முடைய விஷயங்களை – எண்ணங்களை – சுத்தமா ஏத்துக்காதவங்க இருக்காங்களே ராஜன் குறை மாதிரி – அவங்களைகூட நாம பிரெண்ட் ஆக்கிக்க முடியும். ஆனா, அவங்ககூட ப்ரெண்ட்டா இருக்க முடியாது.

பி.கே. சிவகுமார்: எனக்குக் கூட உங்களுடைய இலக்கியக் கோட்பாடுகளில் கருத்து வித்தியாசம் உண்டு. ஆனால், மற்றதில் எல்லாம்..

சாமிநாதன்: காலச்சுவடு வந்து – ஒரு institutionally established ஆனபிறகுதான் இந்த மாதிரி ஆனதுன்னு நினைக்கறீங்களா ?

ராஜாராம்: இல்ல இல்ல. முன்னாடியே இருந்து…

சு.ரா.: உங்களுக்குத் தெரிய வரது இல்லை. காலச்சுவடு established ஆனபிறகு பல விஷயங்கள் ரீடர்ஸ்க்குத் தெரிய வருது. முன்னாடி அது தெரிய வராது.

சாமிநாதன்: சரி.

சு.ரா.: இது எல்லாம் என் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. தமிழ் சொசைட்டி சம்பந்தப்பட்ட விஷயம். (கூட்டத்தில் மெலிதான சிரிப்பு) நான் இருக்கிற டைம்ல நான் இருக்கேன். இல்லைன்னா, வேற ஒருத்தன் இருப்பான். ஆனா, எல்லாருடைய எக்ஸ்ப்ரீயன்ஸும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். இப்ப வந்து அசோகமித்ரனுக்குச் சாகித்ய அகாடமி – சாகித்ய அகாடமி பரிசு என்பது சுண்டைக்காய் பரிசு – ரொம்ப சுண்டைக்காய் – உலகத்தில் உள்ள பரிசுகளை நீங்க கணக்கில் எடுத்துப் பார்த்தீங்கன்னா – ரொம்ப சுண்டைக்காயான பரிசு அது. அதுக்கு twenty five thousand rupees கொடுத்துட்டு இருந்தான். இப்ப இந்தியால வந்து ஒரு டாய்லெட் கட்டறதுக்கு ஐம்பதனாயிரம் ரூபாய் ஆகும் (கூட்டத்தில் சிரிப்பு)

பி.கே. சிவகுமார்: Eighty three வரைக்குமோ Eighty Five வரைக்குமோ five thousand-தான் கொடுத்துட்டு இருந்தாங்க.

ராஜாராம்: ஆமா ஆமா.

சாமிநாதன்: இன்னும் இலக்கியச் சிந்தனை ஐம்பது ரூபாய்தான் கொடுத்துட்டு இருக்காங்க போல இருக்கு.

சு.ரா.: அந்தப் பரிசு – அதை அசோகமித்ரனுக்குக் கொடுத்தாங்க – அதை oppose பண்ணி – (கொடுத்தாங்க ? என்று கேட்கிறார் கூட்டத்தில் ஒருவர்) – கொடுத்தாங்க – இரண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி – அதைக்கூட நேர்மையா வாங்க முடியல – அவருடைய பிரெண்டு போய் காலைப் பிடிச்சி – அவர் வாங்கிக் கொடுத்தார். அவர் பிரெண்ட் வாங்கிக் கொடுத்தார். அதெல்லாம் ரெகார்ட்லேயே இன்னிக்கு இருக்கு. நான் சொல்றது இல்லை. ஞானி இருக்காரே ஞானி பழனிச்சாமி – அவர் வந்து அவர் ரெகார்ட்ல போட்டு அந்த ரெகார்ட் எனக்கு வந்தது. அதனால பிரிண்ட்டட் மெட்டாரியலா இருக்கறதுதான் நான் உங்களுக்குச் சொல்றேன். ஊகங்களோ ஒண்ணுமே கிடையாது. அவர் போய் அங்கக் காலைப் பிடிச்சி – அவர் பிரெண்ட் – அசோகமித்ரனுக்கு இந்தப் பரிசைக் கொடுத்தாகணும். இல்லைன்னா அவர்க்குப் பரிசு கிடைக்கறதுக்கு வாய்ப்பே இல்லாம ஆயிடும். இப்ப நீங்க சிபாரிசு பண்ற ஆட்களுக்கு நீங்க இரண்டு வருஷம்கூட தள்ளியோ கூட கொடுக்கலாம். ஒண்ணும் பிரச்னை இல்லை. அப்படான்னு சொல்லிக் காலைப் பிடிச்சார் என்கிற வார்த்தையை ஞானி பயன்படுத்தறார். அவர் நான் காலைப் பிடிக்கலைன்னு பதில் சொல்லவே இல்லை. ரெண்டு பேருமே உயிரோட இருக்காங்க. அவர் காலைப் பிடிக்கலைன்னு சொல்லவே இல்லை. அப்படிக் கிடைச்ச பரிசு. பரிசு கிடைச்ச நிமிஷத்திலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு வந்திடுச்சு. ரேடியோல சொல்றாங்க. டி.வி.ல சொல்றாங்க. அசோகமித்ரன் சொல்றார். இந்தப் பரிசு எனக்குக் கிடைச்சதுக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன் என்கிறார்.

ராஜாராம்: யாரு ?

சு.ரா.: அசோகமித்ரன் சொல்றார். டி.வி.யிலே சொல்றார். ரொம்ப பேர் ஆசைப்பட்டிருக்காங்கன்னே எனக்குத் தெரியாது. ரொம்ப பேர் ஆசைப்பட்டிருக்காங்கன்னு தெரியாது. சும்மா கொடுக்கறாங்கன்னு – இந்தக் கடைல கொடுப்பாங்க இல்லையா – கோயில்ல சுண்டல் கொடுப்பாங்க இல்லை. அதுமாதிரி கொடுக்கறாங்கன்னு நான் போய் வாங்கிட்டேன். இப்பதான் எவ்ளோ பேர் ஆசைப்பட்டிருக்காங்கன்னு தெரியறது என்கிறார். (கொஞ்சம் இடைவெளி விட்டு) அவருடைய கதைகளை எல்லாம் படிச்சிப் பார்த்தேன். சார், ஒருத்தன் வந்து சின்சியரான ரைட்டராக இருப்பானானால், அவனை நீங்க progressive-ஆ பார்ப்பதற்கு எவ்வளவு சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரானோ, அந்த அளவுக்கு reaction-ஆ பார்ப்பதற்கு சந்தர்ப்பங்கள் தந்துட்டே இருப்பான். progressive-ஆ பார்ப்பதற்கு மட்டும்தான் அவன் உங்களுக்குச் சந்தர்ப்பங்கள் தரான் என்று சொன்னால் அவன் ஒரு உண்மையான ரைட்டரே இல்லை. அவனுடைய நோக்கம் வந்து பாலிடிக்ஸ். லிட்டரேச்சர் இல்லை.

சு.ரா.: (சந்திராவைப் பார்த்து) ஏகப்பட்ட சமையல் பண்ணி இருக்கீங்க. (சாப்பாட்டைப் பற்றித் தொடர்ந்து பலரும் பேசுகிறார்கள். அவை இங்கு தரப்படவில்லை.)

பி.கே. சிவகுமார்: (அண்ணாமலையைப் பார்த்து) உங்ககிட்ட ஒரு கேள்வி. சலபதிகூட உங்க பேட்டி பற்றி. I have not read it. I just heard about it. So, please correct me if I am wrong. சு.ரா. சொன்ன மாதிரி – தகுந்த தடயங்களும் ஆதாரங்களும் இல்லாம, கொஞ்சம் over zealous ஆகி, தொ.ப.மீ., மு.வ. இவங்க எல்லாம் ஜாதி சார்பா செயல்பட்டார்கள் என்று அவர் கேட்டபோது உங்க மனநிலை எப்படி இருந்தது ?

அண்ணாமலை: அப்ப நான் நினைச்சது – இது தேவையில்லாத கேள்வின்னு. (சு.ரா. சிரிக்கிறார்.) அது ஒருவேளை பத்திரிகைல controversy இருந்தா – பத்திரிகை விற்பனை கூடும்னு கேட்கறாங்கன்னு நினைச்சேன். (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: இல்ல, ஒரு மோசமான விஷயம் அது. மறுபடியும் அவர் மழுப்பி பதில் சொன்னது இன்னும் அசிங்கமா இருந்துச்சி.

சு.ரா.: யாரு ?

ராஜாராம்: வெங்கடாசலபதி. அவங்க object பண்றது வந்து – specific-ஆ தொ.ப.மீ.யும் மு.வ.வும் இப்படிப் பண்ணாங்களான்னு கேட்க வேண்டிய அவசியமில்லை. இவர் கிட்ட போய் ஆயிரம் பேரைக் கேட்கலாம். இரண்டாயிரம் பேரைக் கேட்கலாம். ரெண்டு பேரை மட்டும் சொல்லிக் கேட்க வேண்டிய அவசியமில்லை. It does not prove anything.

சாமிநாதன்: இங்கேயே வந்தார் வெங்கடாசலபதி. அவர் சொன்னார். நான் திராவிட இயக்கம் சார்பான ஆள்தான்னு வெளிப்படையா ஒத்துக்கிட்டார்.

ராஜாராம்: திராவிட இயக்கத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. அதுக்குப் பதில் சொல்லும்போது – தமிழ்நாட்டுல வந்து – ஜாதி அடிப்படைல இல்லாம எதுவுமே நடக்காதுன்னார். that is not the question he is asking.

அண்ணாமலை: முன்னால இடதுசாரிகளைப் பொருத்தவரை எல்லாம் class என்கிற முறைல பார்ப்பாங்க. இப்ப we are going the other way. other extreme. எல்லாமே ஜாதியில பார்க்கறது. class-ஐயே விட்டுடறது என்கிற மாதிரி.

ராஜாராம்: ஆமாம். நீங்க சொன்னது எல்லாத்திலயும் ஜாதி இருக்கிறது என்பதை நான் ஒத்துக்குவேன். ஆனா, அது மட்டுமே consideration-ஆ இல்லை. அது வந்து – it is there. In part of their mind it is there. ஆனா, அது இல்லாத ஒரு பொது இடம் தமிழ்நாட்டுல இருக்கு.

அண்ணாமலை: நான் சொல்லவந்தது – தொ.ப.மீ.க்கும் மு.வ.வுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு in their approach to Tamil Research-ல. அதைக் கொண்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழுக்கும். அவங்க எந்த ஜாதிக்கு வேலை போட்டுக் கொடுத்தாங்க என்பது… (கூட்டத்தில் சிரிப்பு) அதை வெச்சித் தமிழுக்கு..

ராஜாராம்: That is not the question he should be asking you. அதை வெச்சி அவர் ரிசர்ச் பண்ணி – ஒரு தனிகட்டுரை எழுதினார்னு வெச்சுக்குங்க. மு.வ. வந்து – அவர் என்ன ஜாதின்னு எனக்குத் தெரியாது – முதலியாரா – (அகமுடைய முதலியார் என்கிறார். பி.கே. சிவகுமார். ‘உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்க castist-ஆ ‘ என்று பி.கே. சிவகுமாரை ஜாலியாகச் சீண்டுகிறார் துக்காராம். திண்ணையில் பி.கே. சிவகுமாரை ஒருவர் castist என்று திட்டியதை வைத்து அப்படிச் சீண்டுகிறார் துக்காராம். ‘I am not castist. என் தாத்தாவும் மு.வ.வும் classmates. அதனால எனக்குத் தெரியும் ‘ என்கிறார் பி.கே. சிவகுமார்) – castist ஆ இருப்பதற்கு வெட்கப்படவே விஷயம் இல்லீங்க. (பாதித் தமிழ்நாடு முக்கால் தமிழ்நாடு அப்படியிருக்கு என்கிறார் டெக்ஸன்) caste is a reality.

அண்ணாமலை: அவங்க பின்னாடி எடிட் பண்ணும்போது சில பகுதிகளை விட்டிருந்தாங்க. இதை விட்டிருக்கலாமே, அதைச் சேர்த்திருக்கலாமே என்று நினைத்தேன்.

பி.கே. சிவகுமார்: I think Chalapathy is a very… Overall, if you ask my opinion, we need more people like Chalapathy in Tamil especially when we lack people who can do productive work. அவர் நிறைய நல்ல விஷயங்கள் கொண்டு வந்திருக்கார். புதுமைப்பித்தன் தொகுப்புகள் இந்த மாதிரி. Sometimes over zealous ஆயிடறார்னு நினைக்கறேன்.

அண்ணாமலை: அது விஷயம் இல்லை. over zealous இல்லை. அது பத்திரிகைக்காகச் செய்யறாரோ என்னவோ. சில gossip வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கற மாதிரி இருக்கு. (கூட்டத்தில் சிரிப்பு) gossip வந்தா குமுதத்துக்கும் காலச்சுவடுக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும். இதுவும் gossip-தான்.

பி.கே. சிவகுமார்: நல்ல பாயிண்ட் இது.

அண்ணாமலை: அந்த புரொபஸர் எந்த ஜாதியைச் சார்ந்தவர் என்பது gossip-தான்.

பி.கே. சிவகுமார்: நான் actual-ஆ பிரபஞ்சன் கிட்டே சொன்னேன். நான் காலச்சுவடு subscriber இல்லை. நண்பர் முருகானந்தம் subscriber. அவர்கிட்ட வாங்கிப் படிச்சேன். I subscribed to Uyirmmai, Chol Puthithu இதெல்லாம். If I like it, I will subscribe. We want something good to happen in Tamil Nadu. நான் நைட்ல படுக்கறதுக்கு முன்னாடி – ஒரு பத்துமணிக்கு – ஒரு ரெண்டு நாள் – ரெண்டு issues – காலச்சுவடு படிச்சேன். ஒரு இலக்கிய அனுபவமோ, உச்ச நிலையோ, intoxication-ஓ அது கொடுக்கும்னு பார்த்தா – ஒரே வருத்தமாயிடுச்சி. பார்த்தா இவர் அவரைத் திட்டறார். அவர் இவரைத் திட்டறார். காலச்சுவடு full-ஆ சண்டையா இருக்கற மாதிரி..

துக்காராம்: திண்ணை மாதிரின்னு உங்களுக்கு ஒரு feeling வந்திருக்குமே. (கூட்டத்தில் சிரிப்பு)

பி.கே. சிவகுமார்: இல்லை. திண்ணை வந்து – day time-ல படிக்கறேன். அதனால வந்து அவ்வளவா வந்து – தாக்கம் இருப்பதில்லை. (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: பாருங்க, நாம பேசறதிலேயே வந்து இவர் எவ்வளவோ விஷயங்கள் சொல்லியிருக்கார். ஆனா, கடைசியில நமக்கு வந்து focus ஆவறது இந்த மாதிரி விஷயங்கள்தான். thats very bad.

பி.கே. சிவகுமார்: பிரபஞ்சன் சொன்னார் – காலச்சுவடு பற்றி உங்களுக்கு இத மாதிரி ஒபினியன் இருந்தா உங்க ரசனை மிகவும் உயர்ந்த ரசனை அப்படான்னார். so, எல்லா issues-லயுமே (பிரச்னைகளிலுமே) குறைகள் இருந்தா கண்டிப்பா எடுத்துச் சொல்லித்தான் ஆகணும். I agree with it. But, I think Kalachuvadu is kind of going little bit… இவர் (சு.ரா.) ஆசிரியரா இருந்தபோது நடத்தப்பட்ட காலச்சுவடுக்கும், இப்ப நடத்தப்படற காலச்சுவடுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்கற வித்தியாசம் இருக்குன்னு சொல்ல முடியும்.

ராஜாராம்: இளைய தலைமுறை இது.

துக்காராம்: அப்படிச் சொல்ல முடியுமான்னு தெரியலை.

பி.கே. சிவகுமார்: This is only a compliment to him (Su.Ra.)

துக்காராம்: பெரியார் கட்டுரைகள்ல வந்திருக்கிற விஷயங்கள் வந்து ஜெனரலா common-ஆ எல்லாருக்கும் தெரிந்த விஷயங்களா ?

ராஜாராம்: இல்லைன்னுதான் நினைக்கறேன் நான்.

துக்காராம்: ரவிக்குமார், ராஜ் கெளதமன் எழுதினது எல்லாம்…

ராஜாராம்: ரவிக்குமார், ராஜ் கெளதமன் எழுதினது வந்து – அந்த ரெண்டு கட்டுரையும் – I would say that – it cannot be dispassionate – அவங்க ஒரு பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து பார்த்து எழுதறாங்க. See…

துக்காராம்: எதிர்பார்ப்பு வந்து இல்லை அப்படாங்கற சோகத்துல எழுதறாங்களா ?

சாமிநாதன்: ராஜ் கெளதமன் வந்து மாவோயிஸத்தைப் போய் பெரிய புரட்சின்னு எழுதிப் போட்டாரு.

துக்காராம்: அது… ஒண்ணும் தெரியாதுன்னு அர்த்தம்.

பி.கே. சிவகுமார்: ரவிக்குமார் வந்து – he is coming from dalitism. அவருடைய நோக்கமே வந்து – they dont want anything that is there already. எல்லா பீடங்களையும் உடைப்பதும், தங்களுக்கான அழகியலைத் தாங்களே அடைவோம் என்கிற ஒரு நம்பிக்கையும்…

ராஜாராம்: இப்போ – பெரியார் வந்து – அவர் சொல்ற ஒரு பாயிண்ட் ரைட் – எத்தனை தலித்துகளுக்கு அவர் இடம் கொடுத்தார் பார்ட்டில. அப்படிப் பார்க்கப் போனால் எத்தனை பெண்களுக்கு அவங்க பார்ட்டில இடம் கொடுத்தாங்க – dmk-ல எத்தனை பெண்களுக்குப் பார்ட்டில இடம் கொடுத்து இருக்காங்க.

அண்ணாமலை: நாம இப்போ இருக்கற காலத்தை வெச்சிதானே பார்க்கிறோம். அந்தக் காலத்துல எவ்ளோ இருந்ததுன்னு…

ராஜாராம்: அது தெரியாதே நமக்கு. அதுவும் குறைவுதான்னு நினைக்கறேன்.

(தொடரும்…)

Visit http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VIII

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

பி.கே. சிவகுமார்


சு.ரா.: சார், வந்து satire என்பது வந்து – ஒரு மனுஷனுக்கு வந்து – இந்த thought இருக்கு இல்லை thought – ஒரு மனுஷனுக்கு இருக்குமேயானால் அவன் வந்து தொடர்ந்து satire-ல depend பண்ணிட்டே இருக்க முடியாது. மீட்டிங்ல பார்த்தீங்கன்னாவே தெரியும். முதல்ல ஒரு ரெண்டு மூணு விஷயம் சொல்லுவான். satire. உடனே, ஆடியன்ஸ் சிரிப்பான். சந்தோஷப்படுவாங்க. அதுக்கப்புறம் சப்ஜெக்ட்டுக்கு வருவாங்க. நீங்க சொல்லணும் என்கிற ஒரு விஷயம் – இன்னொரு விதத்துல நீங்க சொல்லணும்கிற விஷயம் இருக்கோ இல்லையோ satire-ஐ சொல்றாங்க. இன்னொன்னு satire-ஏ இல்லாத கதைகள் நிறைய இருக்கு. அந்தக் கதைகள் எல்லாம் மிக முக்கியமான கதைகள்.

ராஜாராம்: ஆமா. நிறைய இருக்கு.

சு.ரா.: அவையெல்லாம் சட்டயர் இல்லை என்பதால் மோசமான கதைகள் இல்லை. எனக்கு வந்து மனசுக்குள்ளே வந்து நான் ஒரு விஷயம் சொல்லணும்னு வரும்போது அதை நீங்க சீரியஸா எடுத்துக்கணும். அப்படி நினைக்கிற சமயத்துல சட்டயர் பின்னாலதான் போகும். எந்தக் காரணம் கொண்டும் இதை நான் தமாஷா நினைக்கறேன். எனக்கு அதில pain இல்லை அப்படான்னு நீங்க நினைச்சுடக் கூடாது. எனக்கு அதுல ரொம்ப pain இருக்கு. அப்படான்னு நான் சொல்ல நினைக்கற சமயத்துல – அந்த மாதிரியான விஷயங்கள் வரத்தான் செய்யும். அதனால எந்த ரைட்டரும் வந்து – ஏதாவது ஒரு விஷயத்தை கம்யூனிகேட் பண்ணனும் என்கிற ரைட்டர் வந்து தொடர்ந்து சட்டயரை சொல்லிண்டிருந்தான் என்பது கிடையாது. சட்டயரைச் சொல்லாமலேயே அவன் காரியத்தைப் பண்ணான் என்பதும் கிடையாது. எப்படியும் வந்திடும் அது. சட்டயர் தானா வந்திடும். நீங்க… (கொஞ்சம் யோசிக்கிறார்) இந்த… ஒரு ஐரிஷ் நாவல் …. (யோசிக்கிறார்) Angela ‘s …

கூட்டத்தில் குரல்கள்: Angela ‘s Ashes.

சு.ரா: அந்த நாவலைப் படிச்சீங்கன்னா – அவனுடைய ஹியூமர் இருக்கு இல்லையோ – பர்ஸ்ட் பேஜுல இருந்து – கடைசி வரைக்கும் அவன் ஹியூமரஸா மட்டும்தான் இருக்கான். நடக்கறது என்னவோ எல்லாம் நடக்குது.

ராஜாராம்: ஆமா, நடக்கறது எல்லாம் சீரியஸ் ஆன விஷயம். டெத்…

சு.ரா.: Death… அது… இது… எக்கச்சக்கமான குடி… ஐரிஷ்… எக்கச்சக்கமான குடிகாரர்கள். தமிழ்நாட்டு ஃபேமிலிஸ் ஞாபகம் வரக்கூடிய பல விஷயங்களை அவன் எழுதியிருக்கான். ஆனா அவன் தொடர்ந்து சட்டயராத்தான் எழுதியிருக்கான். அதுமாதிரி – நான் அப்படி பார்க்கலையே. இப்ப எனக்கு வந்து ஹார்ட் அட்டாக் வந்ததுன்னா – நான் அதை சட்டயரிகலா பாக்கலை. அது ஒரு சீரியஸான விஷயம். உடனடியா கொண்டுபோய் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும்னு பார்க்கணும். அதிலிருந்து மீண்டதுக்குப் பின்னாடி – சுஜாதா கூட ஒரு piece எழுதியிருக்கார். அந்த piece-ஐ நான் படிச்சேன். அதிலே அவர் – வேற ஒருவனுக்கு அந்த வியாதி வந்த மாதிரி பார்க்கறார். ரொம்ப முக்கியமான விஷயம்தான் அது. ஆனா, அப்போ அவர் மீண்டாச்சு. அந்தக் கணத்துல அவர் பார்க்கலை. ரொம்ப பில் போடறாங்க. நம்ம பேண்ட்டை உருவிட்டு விட்டுடுவான் ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னா – ரொம்ப மோசமான காரியம் நடக்குது – பிஸினஸ்தான் அது – இந்த மாதிரியெல்லாம் அவர் சொல்றார். ஆனா, அப்போ அவருக்கு ஹெல்த் இம்ப்ரூவ் ஆயிடுச்சி. இப்ப நீங்க எதிலும் விசுவாசமா இருக்கணும். இப்ப ஹார்ட் அட்டாக் வர்ற நேரத்துல என் மைண்ட் எப்பது ப்ளே பண்றது என்பதுதான் முக்கியம். சில ஆட்கள் டெத் சமயத்துல – டெத்தை வந்து – லீவ் எடுத்துட்டுப் போறோம் என்ற மாதிரி டெத்தைப் பார்த்திருக்காங்க. எல்லாரையும் கூப்பிட்டு போயிட்டு வரேன், குழந்தையைப் பார்த்துக்கோ. நாப்பத்து மூணு ரூபார் டிராயர்ல வெச்சிருக்கேன். அதை எடுத்துக்கோ… இப்படியெல்லாம் சொல்லிட்டுப் போனவங்க இருக்காங்க.

ராஜன் குறை: ஓ.கே. இடைவெளில வந்து இந்த பாலன்ஸ் நல்ல வந்திருக்குன்னு சொல்வாங்க. ஹியூமரும் சீரியஸ்னசும் வந்து…

சு.ரா.: எதுல வந்து…

ராஜன் குறை: சம்பத்தோட இடைவெளில. அதுல மரணத்தைப் பத்தி தொடர்ந்து யோசிச்சாலும்… ஒரு நகைச்சுவையோட…

சு.ரா.: நகைச்சுவையோட சொல்றார். ஆனா – மரணத்தை வந்து அவர் வந்து மரணம் என்பது கட்டில்ல நடக்கக் கூடிய விஷயம்தானே. ஆனா அதை அவர் ட்ரான்ஸ்பார்ம் பண்ணி வேற இடத்துக்குக் கொண்டு போறார். அப்படிக் கொண்டு போறதாலதான் நீங்க அதைத் தாங்கிக்கறீங்க. அது கட்டிலில் நடக்கக் கூடிய மரணமாக மட்டுமே இருக்குமானால், நீங்க அந்த விஷயத்தை ஏத்துக் கொள்ளவே மாட்டாங்க. அவர் என்ன பண்றார்… டெத்தை வேறொரு இடத்துக்குக் கொண்டு போயிடறார். அதுல அவருக்கு நம்பிக்கை இருக்கான்னு நமக்குத் தெரியாது. கெட்டிக்காரத்தனமா அந்த ஆள் பண்றார். டெத்தை வந்து – அவர் கொடுக்கற எக்ஸ்பிரஷன் என்னன்னா – அது ஒரு இடைவெளி என்கிறார். டெத் என்பது ஒரு இடைவெளி அப்படான்னு அவர் நம்பறார். அதுக்கு exact-ஆ எனக்கு என்னன்னு தெரியலை. டெத் டெத்தான் அப்படாங்கறதுதான் என்னோட எண்ணம்.

ராஜாராம்: டெத் ஒரு இடைவெளி என்று நம்புவது – ஒரு belief system. அதாவது, its a kind of denial of death. நாம இன்னும் வாழ்ந்துட்டு இருக்கோம், மறுபிறவி எடுப்போம்… இன்னொரு…

சு.ரா.: அந்த இடத்துக்குத்தான் – அவர் போறார். ஒரு பிலாஸபிகலா சொல்லணுமேனு சொல்றார்.

டெக்ஸன்: நான் நீங்க ஜே.ஜே. பத்தி எழுதின கட்டுரைகளைப் படிச்சதில்லை. புக் படிச்சிருக்கேன். JJ was inspired by James Joyce-னு எல்லாம் சொல்லியிருக்காங்களே. அது எல்லாம் ஏதாவது…

சு.ரா.: இல்ல இல்ல. கேரளால C.J. தாமஸ்னு ஒருத்தர் இருந்தார். C.J. தாமஸுடைய இன்ப்ளுயன்ஸ்லதான் அந்தக் கேரக்டர் ஃபார்ம் ஆயிருக்கு. ஆனா, அப்படியே C.J. தாமஸைப் பண்ணலை. C.J. தாமஸுடைய ரொம்ப க்ளோஸ் பிரண்டாக்கும் எம். கோவிந்தன் என்பவர். எம். கோவிந்தன் என்ற ஸ்காலர் வந்து outstanding-ஆன intellectual கேரளாவுல. அவர் வந்து ரொம்பக் க்ளோஸ் பிரெண்ட். அவருக்கு வந்து இந்த நாவலைக் கொண்டுபோய் ராமகிருஷ்ணன் படிச்சிக் காட்டறார் தமிழில். அவருக்குத் தமிழ் நல்லா புரியும். ஆனா படிக்க முடியாது. பெரியாரோட பிரெண்ட். நெடுஞ்செழியனோட பிரெண்ட். DK மூவ்மெண்ட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட் உள்ளவர். (ராஜாராமைப் பார்த்து உங்களுக்குத் தெரியுமே என்கிறார். ஆமாம் என்கிறார் ராஜாராம்.) அவர்கிட்ட படிச்சுக் காட்டினதுல – ரெண்டு விஷயங்கள். கிட்டத்தட்ட பாதி ஆனதுக்கு அப்புறம்தான் C.J. தாமஸ்னு புரியுது என்கிறார். பாதி ஆனதுக்கு அப்புறம் C.J. தாமஸ் ஞாபகம் வரலைன்னு சொன்னார். இந்த ரெண்டு விஷயமும் முக்கியமானது. அப்ப எந்த அளவுக்கு அவரை ட்ரான்ஸ்பார்ம் பண்ணியிருக்கேன் என்பதும், எந்த அளவுக்கு அவர் காரணமா இருந்திருக்கிறார் என்பதும் அவர் பேச்சிலிருந்து வெளிப்படுது. அது உண்மைதான். அதே நேரத்துல … அந்த… அவர் (C.J. தாமஸ்) வைஃப் இந்த நாவலைப் படிச்சார். அவர் சொன்னார். C.J.க்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னு. அவர் இன்ப்ளூயன்ஸ் பண்ணியிருக்கலாம். ஆனா நிஜ C.J.க்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னு அவர் எழுதிக் கொடுத்துட்டார். அதெல்லாம் இமாஜினேஷன். ஏன்னா, அவரை ஒரு இடத்துல பார்த்தேன். அதுக்கு முன்னாடி அவரோட புக்ஸ் வந்து என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணியிருக்கு.

ராஜாராம்: அவர் கிரிடிக்தானே…

சு.ரா.: ஆமா, கிரிடிக்தான். ஆனா, அவர் டிராமா வந்து சார்…ரொம்ப வேடிக்கையான டிராமா இருக்கு. பதினொன்ணு – இருபத்தேழு – அவர் லாயரும் கூட ஆனா ப்ராக்டிஸ் பண்ணல – பதினொன்ணு இருபத்தெட்டில் கைதி நம்பர் நாலுன்னு போட்டு ஒரு நாவல் எழுதியிருக்கார். அந்த நாவல் வந்து – Absurdist Movement இருக்கு இல்ல, அது இன்டர்நேஷனலா வரதுக்கு முன்னால, க்ளியரா absurdistதான் அவர். க்ளியரா அவர் absurdistதான். அப்ப அந்த மூவ்மெண்ட் இன்டர்நேஷனலா இல்ல அல்லது நமக்குத் தெரியாத பாஷைகள்ல முளைச்சு இருக்கலாம். இவருக்குத் தெரிந்திருக்க சான்ஸே கிடையாது. அவர் டிராமாவிலும் ரொம்ப இன்ட்ரஸ்ட் உள்ளவர். ஆர்ட்ல இன்ட்ரஸ்ட் உள்ளவர். இந்த ஷார்ட் ஸ்டோரி, பொயட்ரி எல்லாம் அவர் எழுதினதே இல்லை. பின்னால ஒரு பெரிய blind anti-communist ஆயிட்டார். அந்த டைம்ல – anti-communist-ஆ வர்ற புத்தகங்களை ட்ரான்ஸ்லேட் பண்ணியிருக்கார். அந்த ட்ரான்ஸ்லேஷன்ஸ் ரொம்ப நல்ல ட்ரான்ஸ்லேஷன்ஸ். சில புக்ஸ் நல்லா பண்ணியிருக்கார். உதாரணமா, darkness at noon – அதை ரொம்ப நல்லா பண்ணியிருக்கார்.

ராஜாராம்: அந்த anti-communist புக்ஸுக்கு மலையாளத்துல எது மாதிரியான வரவேற்பு இருக்கு ?

சு.ரா.: ஒரு க்ரூப் இருக்கு இல்ல… இதுக்கே ஒரு க்ரூப் இருக்கு.

ராஜாராம்: அது என்ன இண்டலக்சுவலா தெரிவிக்கிற எதிர்ப்பா… இல்லை…

சு.ரா.: ஆமா, இன்டலக்சுவலா தெரிவிக்கிற எதிர்ப்புதான். முக்கியமா வந்து anti-communistனு சொல்றதைப் பார்த்தா – நான் எல்லாம் anti-communist இல்லை. நான் ஒரு anti-communistனு பிராண்ட் பண்ணிடாங்க. நான் anti-communist-ஏ இல்லை. நான் anti-stalinist. நீங்க சொல்றீங்க – நான் பேசுவேன் நீங்க பேசாதேன்னு சொன்னேள்னா, எனக்குக் கோவம் வருமா வராதா ? இந்த விஷயம் தவிர ஒண்ணுமே கிடையாது. வேற ஒரு பிலாசபிகல்… அதை நீங்க promote பண்றீங்க. So, மார்க்ஸிஸம் என்ன என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்க ஒரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றீங்க.. உங்க வைஃபை கொண்டு போய் அட்மிட் பண்றீங்க. டாக்டர்ஸ் ரொம்ப மோசமா ட்ரீட் பண்றாங்க. மோசமான காரியங்கள் அவ்வளவும் பண்றாங்க. அதுல அவங்க ரொம்ப suffer பண்றாங்க – உங்க வைஃப். அதுக்கு அப்புறம் நீங்க மெடிகல் சயின்ஸஸ்ல இது எல்லாம் சொல்லப்பட்டதில்லை (ராஜாராம் சிரிக்கிறார்) அப்படான்னு சொன்னால் என்ன அர்த்தம் ? உங்க வைஃபை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்களே! So, எது இம்பார்ட்டெண்ட் ? (Doctor was not real doctor என்கிறார் ராஜாராம்.) ஆமா, இப்போ நீங்க சொல்ல வேண்டிய விஷயம் இதுதான். இப்போ நான் மார்க்ஸிஸத்தைப் பத்திச் சொல்லவே இல்லை. இவங்க அவ்வளவு பேரும் சோவியத் யூனியனை blind-ஆ follow பண்றாங்க. இவங்களுக்குச் சொந்த… இவங்க மார்க்ஸிஸ்ட் இல்லை. மார்க்ஸிஸ்ட் ஏன் இல்லைன்னு கேட்டா, டெமாக்ரஸியை எப்படி சார் ஏத்துக் கொள்ளாம இருக்க முடியும் ? நான் உடனே ராமமூர்த்தி கிட்ட ஒரு கேள்வி கேட்டேன்.

ராஜாராம்: ஆனா, அது ஒரு contradiction இருக்கு. ஏன்னா, கம்யூனிஸ்ட்கள் எல்லாமே இதுவரை form பண்ண சொசைட்டி எல்லாமே – டோட்டாலிடேரியன் சொசைட்டியாதானே இருந்து வந்திருக்கு.

பி.கே. சிவகுமார்: ஒரு கட்சி சார்ந்த கம்யூனிஸ்டாவோ மார்க்ஸிஸ்டாவோ இல்லாமல் உங்களுடைய எழுத்துகளில் ஒரு இடதுசாரித்தன்மை இருப்பதாக நான் பார்க்கிறேன்.

சு.ரா.: ரொம்ப சந்தோஷம். ரொம்ப சந்தோஷம். நீங்க அதை வெளில நிறைய பேருக்குச் சொல்லுங்க. (கூட்டத்தில் சிரிப்பு) என்ன சொல்றாங்கன்னா – இந்த ஆள் வந்து anti-communist. Anti-communist-ஆ இருப்பதற்கு ஏதோ காரணம் இருக்குன்னு – ஏதோ பணம் கிணம் வருது அமெரிக்கால இருந்து (கூட்டத்தில் சிரிப்பு) (ராஜன் குறையைக் காட்டி) இவரோட பிரெண்ட்ஸ் எல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. (கூட்டத்தில் சிரிப்பு)

துக்காராம்: யாருங்க இவருடைய ப்ரெண்ட்ஸ்…

சு.ரா.: இவரோட பிரெண்ட்ஸ் அத்தனை பேரும் – என் பேர்ல ரொம்ப மோசமா – blind-ஆ ஏதானும் சொல்வாங்க. சார், நான் இப்ப வந்து தடயம்ம் இல்லாம சொல்றதுக்கு நீங்க திரும்பவும் பதில் சொல்ல முடியாதுன்னு சொன்னேன் இல்லையா… அது நான் சொன்னதுக்குக் காரணமே என்னுடைய வேதனைதான். எனக்குப் பதில் சொல்ல முடியலை. காரணம், அவர் தடயமே கொடுக்கலையே… நீங்க என்னன்னு பதில் சொல்வீங்க. சிம்பிளான வேர்ட்ஸ்தான். சனாதனின்னுடுவாங்க. நான் சொன்னேன். சொசைட்டில குடிக்கக் கூடாது என்ற விஷயம் முக்கியமான விஷயம். நீங்க குடிக்கறீங்க குடிக்காம போறீங்க அது உங்க இஷ்டம். ஆனா, குடியைப் பரப்ப – தயவுசெய்து செய்யாதீங்க – நம்ம சொசைட்டில குடியைப் பரப்ப தயவுசெய்து செய்யாதீங்கன்னு எழுதிட்டேன். உடனே, இவரோட பிரெண்ட் நான் சனாதனின்னு எழுதிட்டார்.

ராஜாராம்: இவரு… யமுனா ராஜேந்திரன் சொன்னார். இது மாதிரி வந்து – இந்த மாதிரி சொல்றவங்க எல்லாம் அவங்க வீட்டுல யாரையும் உள்ளே கூட்டிட்டுப் போய்க் குடிக்கறது கிடையாது. ஆனா, மத்தவங்க வீட்டுல வந்து குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்றாங்கன்னு.

சு.ரா.: சார், நான் வந்து அந்தக் காரியம் சொன்னதுக்காக சனாதனின்னா அப்புறம் பெரியார், அப்புறம் காந்தி, அம்பேத்கர் இந்த மாதிரி எத்தனையோ ஆட்கள் சனாதனிங்கதான் இந்தியால.

பி.கே. சிவகுமார்: திருவள்ளுவர்.

சு.ரா.: திருவள்ளுவர் வந்து பழைய காலத்து ஆள். (கூட்டத்தில் சிரிப்பு) இவங்க எல்லாமே கான்டெம்பரிஸ். அவங்களுடைய ஒரு பெரிய அட்மைரர் – நான் என்ன சொன்னேன்னா – குடிக்காதே குடிக்கக் கூடாதுன்னு நான் சொல்லவே இல்லை. குடிச்சிட்டுக் கூட்டங்களுக்கு வராங்க. கூட்டங்கள்ல கலாட்டா பண்ணாத வரை பிரச்னை இல்லை. அவங்களுடைய சுதந்திரம். குடிக்கறவங்களுடைய சுதந்திரம். ஆனா, ஸ்டூடண்ட்ஸ் வர மீட்டிங்ல போய், நல்ல குடிங்க.. அது ஒரு பெரிய ஆசிர்வாதம். கடவுளுடைய blessing அப்படான்னு சொன்னா – தயவுசெய்து சொல்லாதீங்க – அந்த pain-ல இவர் (ராஜன் குறை) கிட்ட நான் சொல்லலை – இவர் பிரெண்ட் மார்க்ஸ் இருக்காரே அவ்ர்ட்ட நான் சொல்லலை – பெருமாள் முருகன் கிட்ட சொன்னேன். நான் இவர்ட்ட – இவர் (ராஜன்குறை) இல்லை அவர்ட்ட (மார்க்ஸ்) – பேசக்கூடாது என்கிறதுல நான் ரொம்பத் தெளிவா இருக்கேன். அவர் என்ன நான் சொன்னாலும் காது கொடுத்துக் கேட்க மாட்டார். ஏதாவது ஒண்ணு குதர்க்கம் பண்ணிடுவார். அது அவர் பண்ண முடியும். அவருடைய குதர்க்கம் இன்னும் தமிழ் சொசைட்டில effective-ஆ இருக்கு. அந்தக் குதர்க்கத்தை என்னால பண்ண முடியலை. So, பெருமாள் முருகனுக்கு எழுதினேன். நீங்க அப்படிச் சொல்லாதீங்கன்னு. அவர் சொன்னார். நான் சப்போர்ட் பண்ணலை. மார்க்ஸ் வந்து புரட்சிகரமான ஒரு காரியத்தைச் சொல்லியிருக்கார்…

ராஜாராம்: என்ன புரட்சி அது எல்லாம் ?

சு.ரா.: அப்படான்னு சொன்னார். அப்போ நான் கேட்டேன். உங்க வைஃப்புக்கு நீங்க வழக்கமா கொடுக்கறேளா… ஸ்டூடன்ட்ஸ்க்கு Class-ல தொடர்ந்து சொல்றேளா இந்த விஷயத்தை – எப்ப அது நல்லதுன்னு நீங்க நம்பறேளோ – நீங்க தொடர்ந்து சொசைட்டில எல்லா இடத்துலயும் அதைச் சொல்லணுமே…

ராஜாராம்: குடிச்சிட்டுதான் class-க்கு வரணும்னு ஒரு ரூல் போட்டுடுங்க…

சு.ரா.: ஆமா, ரூல் போடுங்க. அந்த கண்டிஷன் உங்களுக்கு இருக்கா. ஏன்னா, குடிகளுக்கு எதிரா தமிழ்நாட்டுல பல கூட்டங்கள் நடக்குது. இப்ப, வசந்திதேவி கூட ஒரு கூட்டம் நடத்துறாங்க. அந்தக் கூட்டத்துக்கு நான் போயிருந்தேன். பெண்கள் தொடர்ந்து வந்து, தங்களுடைய ஹஸ்பெண்ட்ஸைச் சொல்லி அழறாங்க. மேடையிலேயே அழறாங்க. படிக்காத பெண்கள். அங்க போய் நீங்க சொல்லுங்க. அங்க போய் நீங்க சொல்லுங்க. வாரியலால உங்கள அடிப்பாங்க. வாரியல்னா உங்களுக்குத் தெரியுமா ? விளக்குமாறு. அங்க போய்ச் சொல்லுங்க. அதுதான் கண்டிஷன்… அப்படான்னு நான் சொன்னதுக்கு. அவர் சனாதனி அப்படாங்கறார் அவர்.

ராஜாராம்: அவங்களுக்கு வந்து…

சாமிநாதன்: சனாதனிங்களும் சோம பானம், சுரா பானம் எல்லாம் குடிச்சிருக்காங்களே… (கூட்டத்தில் சிரிப்பு)

சு.ரா.: அது ஒரு கெட்ட வார்த்தை. அது ஒரு கெட்ட வார்த்தை என்பதுக்கு மேல அதுல ஒண்ணுமில்லை.

துக்காராம்: இல்ல. இல்ல. இவர் (சாமிநாதன்) கிண்டல் பண்றார்.

சந்திரா: சாப்பிடப் போகலாமா… மணி ரெண்டுக்கு மேல ஆகுது…

ராஜாராம்: ம்… சாப்பிடலாமே..

பி.கே. சிவகுமார்: நான் சாப்பிட்டுட்டேதான் இருக்கேன்… வந்ததுல இருந்து.. (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: (பி.கே. சிவகுமார் டைனிங் டேபிள் அருகில் அமர்ந்திருப்பதைப் பார்த்து) நீங்க உட்கார்ந்து இருக்கிற இடத்தைப் பார்க்கும்போதே எனக்குத் தெரியும். (கூட்டத்தில் சிரிப்பு)

துக்காராம்: (சிரித்தபடியே ஜாலியாக) நகர மாட்டேன் என்கிறார் அங்க இருந்து…

ராஜன் குறை: இந்த நட்பு விஷயம் வந்து – ஒரு சிலரோடு மட்டும் அது நிக்கறதில்லை அது. நிறைய பேரோடு நட்பு இருக்கு பல காரணங்களால..

சு.ரா.: அது – somehow தமிழ்ல நான் மட்டும் இல்லை, எல்லாருமே உங்களை அதுமாதிரிதான் associate பண்ணிப் பார்த்திருக்காங்க.

ராஜன் குறை: அது நிறப்பிரிகைன்னு ஒரு பத்திரிகை – நல்ல பத்திரிகை – வந்தது இல்லையா… அதுல ஒரு ஈடுபாட்டோட வேலை செய்ததால அப்படி…

சு.ரா.: என்ன காரணம் தெரியுமா ? அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அவங்களுக்கு எதிரான பாயிண்ட்ஸ் ஒண்ணுமே நீங்க ரெக்கார்ட் பண்ணலை. அது சும்மா வந்தது இல்லை. இப்ப என்னுடைய நாவல் நல்ல நாவல்னாக்க – நீங்க இதுக்கு முன்னால அதை ரெக்கார்ட் பண்ணினா – உடனே அவங்களுக்குத் தெரியும். அவங்க எந்த ஆட்கள்னு. உங்களுக்கு ஒரு நாவல் பிடிச்சது குத்தமாக நீங்க feel பண்ணும்படி அவங்க செஞ்சிடுவாங்க… அது குத்தம் அல்ல…

ராஜாராம்: அது ஏன் அப்படி… எனக்குப் புரியலை…

ராஜன் குறை: முதல்லயே அவங்ககிட்டே இதையெல்லாம் பேசியிருக்கேன்.

சு.ரா.: நீங்க பேசினேள்னா – அவங்க சொல்வாங்க – நான் படிச்சேன். நல்ல நாவல்தான். அவர் ஒரு முட்டாள்தான். சனாதனிதான். ஆனா இந்த நாவலை எப்படியோ நல்ல நாவலா எழுதிட்டார் அப்படான்னுதான் அவங்க சொல்வாங்க. ஆனால், நீங்க எழுதினேள்னா, அதனுடைய விஷயமே வேற. ரெக்கார்ட் பண்ணீங்கன்னா, அந்த விஷயமே வேற. அப்படிப்பட்ட விஷயங்களை நீங்க செய்யாம, தொடர்ந்து அந்த மாதிரி விஷயங்களைச் செய்யும்போது, நேச்சுரலா உங்க இமேஜ் அப்படித்தான் வரும். நீங்க யாருமே எதிர்பார்க்கலை அந்த விஷயத்தை.

ராஜாராம்: That is correct. You have to redeem your image, if, after sometime.

(இந்த இடத்தில் பி.கே. சிவகுமார் ராஜன் குறையின் இன்னொரு நண்பர் பற்றிய உதாரணத்தைச் சொல்கிறார். ராஜன் குறை ‘அதுக்காக வந்து கவலைப்பட்டா இருக்க முடியுமா… ‘ என்கிறார். உரையாடலில் துக்காராமும் கலந்து ஓரிரு வரிகள் பேசுகிறார். அந்த உதாரணம் எல்லாம் வேண்டாமே என்கிறார் ராஜாராம். அந்த உதாரணமும், சில வரிகளும் தரப்படவில்லை.)

ராஜன் குறை: (தொடர்ந்து) தமிழ்நாட்டுல அதுவுமில்லாம – சு.ரா. நிச்சயம் ஒத்துப்பார் – இந்தமாதிரி திட்டாத ஆட்களோடதான் பழகணும்னா – யாரோடும் பழகவே முடியாது. அதுவே ஒரு பிரச்னை.

சு.ரா.: இல்லை இல்லை. நீங்க எல்லாரோடும் பழகலாம். எந்தக் கூட்டத்திலும் நீங்க போகலாம். அதுபத்திப் பிரச்னை இல்லை. அதுக்காக நீங்க அப்படான்னு நான் mean பண்ணிக்க மாட்டேன். நான் ரொம்பக் கவனமாக நீங்க முதலில் இருந்து கடைசி வரைக்கும் நீங்க எங்கத் திரும்பி வரீங்கன்னு கவனிச்சிட்டு இருக்கேன். அப்படிக் கவனிக்கும்போது நீங்க சில விஷயங்களைச் சொல்றீங்க. சில விஷயங்களைச் சொல்லாம விடறீங்க. அந்த சென்சார்ஷிப் வந்து அவங்களைச் சார்ந்தது அப்படாங்கறேன் நான்.

ராஜாராம்: அது உண்மைதான்.

துக்காராம்: Yeah. That is true.

ராஜன் குறை: அது என்னோட பிரச்னைதான்.

ராஜாராம்: உங்களோட பிரச்னை இல்லை அது. Actual-ஆ இது நிறைய பேரோட பிரச்னை. முன்னாடி உங்களுக்குத் தெரியும். ஜெயகாந்தனைப் பத்தி விமர்சனம் வந்துட்டு இருந்தப்ப – கம்யூனிஸ்ட் கட்சியிலே இருந்து – தாமரைல நிறைய பேரு விமர்சனம் எழுதினாங்க. பர்சனலா போய்க் கேட்டா ஜெயகாந்தனை அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ஜெயகாந்தனை நல்லாப் படிப்பாங்க – ஆனா, ஜெயகாந்தனுக்கு எதிர்ப்பா தாமரையிலோ செம்மலரிலோ வருவதற்கு they will not react at all. பர்சனலாப் போய் பேசினீங்கன்னா, ஜெயகாந்தனை அவங்களுக்குப் பிடிக்கும். ஜெயகாந்தன்கூட பிரண்ட்லியாவும் இருப்பாங்க. போய்ப் பழகுவாங்க..

சு.ரா.: சார், வந்து ஜெயகாந்தனை – அவங்க leftists வந்து – leftist writers leftist parties யாருமே – especially marxist and communist parties யாருமே – ஜெயகாந்தன் மேல விமர்சனம் வைக்கவே மாட்டாங்க.

ராஜாராம்: இல்லை, தாமரைல, அந்த ரிஷிமூலம் எல்லாம் வந்தக் காலத்தில் தாக்கி எழுதியிருந்தாங்களே…

(தொடரும்…)

Visit http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VII

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

பி.கே. சிவகுமார்


சு.ரா.: ஆமா… அது வந்து – முதல்ல எனக்கு வந்து அந்த மலையாள லிட்டரேச்சர் பத்தின விஷயங்கள் தெரியும் என்கிறது ஒண்ணு. இல்லைன்னா எழுத முடியாது. அந்த பேக்கிரவுண்ட் எல்லாம் தெரியும். அது சம்பந்தமான சூட்சுமங்கள் நிறைய தெரியும். நான் ரொம்ப சூட்சுமமான விஷயங்களைக் கிரகித்துக் கொள்ள முயற்சி பண்ணுவேன். நீங்க நம்ப மாட்டாங்க – தமிழ்ல வந்து ஒரு பத்திரிகை வருதே – கவிதாசரண் (வீடியோ காம்கார்டரை நோக்கிக் கையை நீட்டி) இப்ப நான் ரெக்கார்ட் பண்றேன் – கவிதாசரண் – அதை மூணு தடவை படிப்பேன். த்ரீ டைம்ஸ் அந்தப் பத்திரிகையைப் படிப்பேன். எல்லா ஆர்ட்டிகிள்ஸையும். ஏன்னா, அதுக்குள்ள பல விஷயங்கள் இருக்கு. அது வந்து நீங்கப் பார்த்தேள்னா ரொம்ப சாதாரணமா இருக்கற மாதிரி தோணும். ஆனால், அதுக்குள்ள பலவிதமான வேவ்லெங்க்த்ஸ் வந்து இருக்கு… So. ரோடுல எல்லாம் வந்து ரொம்பத் திருட்டுப் போகற இடங்கள்ல எப்படி இருக்குதுனு வச்சுக்குங்களேன் – ஒரு சாமானைக் கொடியில போட்டா போயிடும். செருப்பை வெளியில விட்டாப் போயிடும். அப்ப நீங்க ரோடுல போறச்சே – யார் யார் வந்து போறாங்க என்பதை ரொம்ப நல்லா வாட்ச் பண்ணனும் – நீங்க மட்டும் இல்ல உங்க வைஃப்பும் வாட்ச் பண்ணனும். அப்பதான் நீங்க உங்க சாமானைக் காப்பாத்திட்டு வாழ முடியும். அந்த மாதிரி பொஸிஷன்ல நான் இருக்கறேன். அதனால, நான் வந்து என்னைச் சுத்தி இருக்கற ஆளை ரொம்ப வாட்ச் பண்ணுவேன். அதுக்கு பத்திரிகை வந்து ஒரு வென்ட்டிலேஷன். அதுல ஒரு கட்டுரை வரும். அதுல என்னைத் திட்டுவான். திட்டுறதுக்குக்கூட நான் வந்து அந்தப் பத்திரிகைல என்ன வேர்ட்ஸ் யூஸ் பண்றான் திட்டுறதுக்காகன்னு பார்ப்பேன். இந்துக்கு முந்தி என்ன வேர்ட்ஸ் யூஸ் பண்ணான். அங்க இருந்து இங்க எப்படி நகர்ந்து வந்தான். அதுக்கான காரணம் என்ன – இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணிண்டிருக்கேன். இந்த ஆராய்ச்சியை எல்லாம் வந்து ரைட்டிங்ல எழுத முடியாது. ஏன்னா – இதுக்கெல்லாம் ஒண்ணும் தடயம் கிடையாது. நான் வந்து தடயம் இல்லாத ஒரு விஷயத்தை நான் இதுவரை எழுதினதே கிடையாது. ஒரு விஷயத்தைச் சொல்ல முடியுமானால் அதுக்குக் குறைந்தபட்சம் ஒரு தடயம் வேணும். சில விஷயங்களுக்கு உங்களுக்குத் தடயம் தேவையில்லை. உதாரணமா (சில நொடிகள் யோசிக்கிறார்.) எம்.ஜி.ஆர்க்கு நடிக்க வராது. இதுக்குத் தடயம் தேவையா ? (கூட்டத்தில் சிரிப்பு) அவர் ரொம்ப பாப்புலர் நடிகர் என்கிறதுக்குத் தடயம் தேவையா ? இந்த மாதிரியான விஷயங்கள் தவிர – லிட்டரேச்சர்ல சீரியஸாப் பேசறோம்னா – நீங்கப் பத்திரிகைல வந்து இது மிக மிக முக்கியமா எடுக்க வேண்டிய விஷயம் – ஒருத்தன் தடயம் குறைந்தபட்சமும் கொடுக்கலையானால் அவனுடைய – அந்தக் கருத்தைக் கேட்கணும். ஏன் கொடுக்கலைன்னு. கேட்கவே மாட்டேன்கறீங்க. கேட்கவே நீங்க மாட்டேன்கறீங்க. அப்படித்தான் இப்ப நடைமுறைல எனக்குத் தெரிது. அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

ராஜாராம்: இல்ல, நாங்க கேட்கறோம். கேட்கற கட்டுரைகளை நாங்க போடறோம்… ஆனா, தடயத்தை அவங்க கொடுக்காதப்ப அவங்கள நம்மால கம்பெல் பண்ண முடியறது இல்ல…

சு.ரா.: அப்படிப் போட – அவனுக்குத் தகுதியில்லை சார். சொசைட்டில அவனுக்கு வந்து எந்தத் தடயமும் இல்லாம பேசுறதுக்கு அவனுக்குத் தகுதி கிடையாது. நான் அவனுடைய பேனாவைத் திருடியிருக்கலாம். அவன் பேனாவைத் திருடினேன்னு சொன்னா – நீங்கப் போட்டேள்னா – நான்தானே திருடன் இல்லைன்னு பேச வேண்டியிருக்கு சொசைட்டில போய். நான் திருடலே நான் திருடலேன்னு எத்தனை பேர் கிட்டப் போய்ச் சொல்லுவேன். அதை… இம்மீடியட்டா நம்பறவங்க இருக்காங்க… இம்மீடியட்டா நம்ப ஆசைப்படறவங்க இருக்காங்க… ரெண்டு விதமான குரூப் இருக்கு. சுந்தர ராமசாமி பேனா திருடினார் அப்படான்னு சொல்லி (கூட்டத்தில் சிரிப்பு) நம்புவோம் அப்படான்னு நினைக்கறவங்க இருக்காங்க. நான் எத்தனை பேர்கிட்டப் போய்ச் சொல்லுவேன். ஆகவே – பேனா திருடினேன்ன்னு சொல்றதுக்கான சுதந்திரம் உனக்கு இருக்கு. ஒரு எவிடென்ஸ் கொடு. உங்க வீட்டுக்கு வந்திருந்தார். அதுக்கு முன்னாடியே பலவிதமான பேனாக்கள் திருடியிருக்கார். என் நண்பர்கள் பல ஆட்கள் சொன்னார்கள். நாஞ்சில் நாடன் சொன்னார். அவர் சொன்னார். இவர் சொன்னார்னு. இவங்க எல்லாமே அவர்கிட்டப் பேனாவை இழந்து இருக்காங்கன்னு (கூட்டத்தில் சிரிப்பு) சர்க்கார்னு ஒருத்தர் இருக்கார் தெரியுமோ… கல்கத்தால – ஒரு மேஜிஷியன்…. கேள்விப்பட்டது இல்லையா ?

கூட்டத்தில் குரல்கள்: பி.சி. சர்க்கார்.

சு.ரா.: பி.சி. சர்க்கார் – அவர் இங்க வந்தார்னா – நம்ம அவ்வளவு பேர் பேனாவையும் எடுத்துண்டுடுவார். (கூட்டத்தில் சிரிப்பு) எடுத்துண்டு பக்கத்துல வச்சுட்டு இருப்பார். அப்புறம் அவங்க அவங்க உங்கப் பேனாவை எடுங்கோ என்பார். பேனா நம்ம கிட்ட இருக்காது. அப்புறம் அவர் மடில இருந்து எடுத்துத் தருவார். இதுமாதிரி பேனாவைத் திருடறார் அப்படிங்கறதுக்கான எவிடென்ஸை அவன் கொடுக்கத்தான் வேணும். கொடுக்காட்டா நான் என்ன செய்வேன். என் பேர்ல ஒரு இதை (குற்றச்சாட்டை) அவன் போட்டாச்சு. அப்புறம் நான் என்ன செய்வேன். இதுமாதிரி – இப்ப நான் உயிரோடு இருப்பதால நான் இதை உங்களுக்குச் சொல்றேன் – ஹிஸ்டாரிகலான பொஸிஷன்ஸ் மேல – அவனுக்கு எந்த சார்ஜஸும் சொல்ற ரைட் கிடையாது. அவன் வந்து சொல்ல முடியாது. கம்பன் மேல..

(கேசட் முடிந்து விடுகிறது. இடையில் சில நிமிடங்கள் ரெக்கார்ட் செய்யப்படவில்லை. கேசட் மாற்றப்பட்டு மீண்டும் ரெக்கார்டிங் ஆரம்பித்தபோது…ராஜன் குறை ‘ஒரு புளியமரத்தின் கதை ‘யில் இருந்த காலம் சம்பந்தமான குழப்பம் பற்றி தன் விமர்சனத்தில் எழுதியிருப்பதைப் பேசியபடி உரையாடல் தொடர்கிறது.)

சு.ரா.: ஏதோ காலம் சம்பந்தமா சொன்னார். இவர் சொன்னது மட்டுமில்லை. மதுரைல என் பிரெண்ட் இருக்கார். சிவராமன்னு (ராஜாராமைப் பார்த்து உங்களுக்குத் தெரியுமே என்கிறார். ஆமா தெரியும் என்கிறார் ராஜாராம்) அவங்க வைஃப் பவானின்னுட்டு… அவங்கள் நான் வந்து முப்பது வருஷமா நாப்பது வருஷமா பார்த்துண்டு இருக்கேன். ஒருநாள் கூட அவங்க புஸ்தகத்தைப் படிச்சிருக்கேன்னு சொன்னதே கிடையாது அந்த அம்மா.. சொன்னதே கிடையாது. திடார்னு அவங்க கிட்டேயிருந்து லெட்டர் வருது. இவருடைய அதே விஷயத்தை அவங்களும் பாயிண்ட் அவுட் பண்ணாங்க. காலம் சம்பந்தமா குழப்பம் இருக்குன்னு. ரெண்டு பேருக்கும் தேங்க் பண்ணி – இவர் வந்து கொஞ்சம்தான் செய்ஞ்சார். இவருடைய presence-ஐ மத்தவங்க feel பண்ற மாதிரி ஆக்கிட்ட்டார். சொன்ன விஷயங்கள் பற்றி எனக்கு ரொம்பக் கோபதாபங்கள் உண்டு. (கூட்டத்தில் சிரிப்பு) ஆனா, அது வேற விஷயம். இவங்க வேற (மோனிகா) அவரைக் கல்யாணம் பண்ணிட்டாங்க. இவங்க மேல எனக்கு ரொம்பப் பிரியம் (கூட்டத்தில் சிரிப்பு) இவங்க மேல. எனக்குக் காரணமே தெரியாது. இந்தப் பொண்ணு வந்து இவரைக் கல்யாணம் பண்ணிகிட்டது (கூட்டத்தில் சிரிப்பு) அப்ப வந்து எனக்கு freedom என்கிற ஏரியா ரொம்பக் குறைஞ்சு போயிட்டது. ஆனால், ஏன் எழுதாம இருக்கார் இப்போன்னு எனக்குத் தெரியலை. அப்படித் தள்ளிப் போட்டாங்கன்னா – பொதுவா வந்து தள்ளிப் போட்டு எழுதணும்னு நினைக்கறோம் இல்லையா – அவரை எங்கக் காணலை – என்ன சீட்டை மாத்திட்டே இருக்கீங்க (கூட்டத்தில் சிரிப்பு) அம்மா எங்கே போய்ட்டாங்க – தள்ளிப் போட்டாங்கன்னா பெரும்பாலான காரியங்கள் நடக்காமலே போயிடும். எஸ்பெஷலி, இந்த சொசைட்டில உங்களுக்கு நீங்க ஒரு டாக்டரேட் வாங்கறீங்க.. ஒரு காலேஜ்ல உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும். அப்ப உங்களுடைய திறமைகள் எல்லாம் you may prove – உங்களுக்கு நிரூபிக்கப்படும். அப்போ உங்களுக்கு அது சின்ன விஷயமாகிவிடும். தமிழன் என்ன சண்டை போட்டுட்டே இருக்கான். இந்தப் பத்திரிகைகள்ல அர்த்தமில்ல. ஒருத்தனுக்கு ஒருத்தன் மண்டையை உடைச்சிட்டே இருக்கான். இப்ப நாம என்ன பண்றதுன்னு… அவங்க என்னிக்குமே அப்படித்தான் இருப்பாங்க.

ராஜன் குறை: நான் ரொம்பத் தொடர்ந்து – சிறுபத்திரிகைல இருந்துதான் கிளம்பினேன் என்பதிலும் – அதுக்குத் திரும்பிப் போகணும் என்பதிலும் ரொம்ப conscious-ஆ இருக்கேன்.

சு.ரா.: சரி. நான் என்ன சொல்றேன்னா – சமீபத்துல ஒரு நாலு வருஷமா உங்க மேட்டர் அதிகமா இல்லை. (ராஜன் குறை நான் எழுதல என்கிறார்.) எழுதலை. அதான் சொல்றேன். நான் பார்க்கலை. நீங்க இந்தக் கன்ட்ரில இருக்கீங்கன்னு – அவர் (அண்ணாமலை) இந்தக் கன்ட்ரில இருக்கார்ன்னு நேக்குத் தெரியாது. நீங்க டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல வொர்க் பண்ணேளா. (ராஜன் குறை ஆமாம் என்கிறார்.) அது யாரோ சொன்னாங்க. அப்ப நான் கேட்டேன். ராஜன் குறைன்னு ஏன் பெயர் வெச்சிருக்கார்னு. (கூட்டத்தில் சிரிப்பு) அவருக்குத் தெரிஞ்சவங்ககிட்டே கேட்பேன். அதுக்கு ஏதாவது ஒரு ரீசன் அவங்க சொல்வாங்க (கூட்டத்தில் சிரிப்பு) Imperfect. மனுஷன் வந்து யாருமே பர்பெக்ட் இல்லை imperfect அப்படாங்கற காரணதுக்காக வெச்சிண்டிருக்கார் அப்படான்னு. அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லிட்டே இருந்தீங்க.

சு.ரா.: (சிரித்தபடியே) என்ன அது ?

ராஜாராம்: ஜேஜே சில குறிப்புகள் ஏன் வந்து தமிழ் பின்னணியில் இல்லாம மலையாளப் பின்னணியில் இருக்கு…

சு.ரா.: என்ன காரணம்னா – நான் சொல்ற எல்லா விஷயமும் தமிழ் சம்பந்தப்பட்டதுதான். அதுல – அதைப்பத்தி நான் கட்டுரையிலே எழுதிட்டேன் – ஏன் அப்படிச் சொன்னேன் என்கிறதை. ஒண்ணுக்குமேல எழுதியிருக்கேன். என்னன்னா – வந்து இவங்க சொல்ற காரியங்களைச் சொல்றதைவிட – இன்னொரு இடத்துல நடக்கறதா காரியங்களைச் சொன்னா இவங்க கவனிப்பாங்க – கொஞ்சம் ஆதரவா பார்ப்பாங்க – நம்மள antagonize பண்ணிக்க மாட்டாங்க. மத்த இன்னொரு கல்ச்சர் பத்திய விஷயம் சொல்றோம்னு கேட்பாங்கன்னு எனக்கு மனசுல ஒரு எண்ணம் இருந்தது. அப்படியெல்லாம் நடக்கலை. அந்த மாதிரி வித்தைகள் எல்லாம் தமிழ் சொசைட்டில செல்லுபடி ஆகவே செய்யாது. அவங்க உடனே அதுக்கு எதிரா வேறு விஷயங்கள் பார்ப்பாங்க. அது ஒரு எண்ணம் இருந்தது. மத்தபடி மலையாள கேரக்டர்ஸுக்குத் தமிழ்ல அதுக்குப் பேரலல்லா கிரியேட் பண்ண முடியுமான்னு சந்தேகமா இருக்கு. அந்தக் கேரக்டர்ஸுக்குத் தமிழ்ல கிரியேட் பண்ண முடியுமா என்பது…

ராஜாராம்: அதுல, இன்னொரு பிரச்னை வந்து – ஜோசப் – ஜேஜே வந்து – வாழ்க்கையைச் சொல்லிட்டே வரும்போது – திடார்னு அவன் சமரசங்கள் பண்ண வேண்டி வந்தது அப்படான்னு சொல்றீங்களே தவிர, அந்த process இதுல சொல்லப்படவே இல்லை…

சு.ரா.: (தலையசைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தவர்) ம்.. ம்.. அது வந்து நான் நினைச்சிருக்கேன். நான் இப்படி நினைச்சிருக்கலாம். தமிழ் சொசைட்டில உங்களுக்கு எவ்வளவோ examples இருக்கு. தமிழனுடைய இயற்கையிலேயே அந்த விஷயம் அவனுக்குத் தெரியும். ஏன்னா – நம்முடைய ஐடியலிஸ்ட் அவ்வளவு பேருமே கடைசிக் காலங்களில் மோசமா காம்ப்ரமைஸ் பண்ணிட்டிருக்காங்க. நீங்கப் பார்த்தீங்கன்னா பாலிட்டாஷியன்ஸ், ரைட்டர்ஸ், ஸ்காலர்ஸ் எல்லாருமே அவங்க age ஆச்சுன்னா – துட்டு வாங்காம இருக்காங்க சில கவர்ன்மென்ட் சர்வன்ட்ஸ் – அறுபது வயசுல அவனுக்கு இன்னும் நாலு நாள் கழிஞ்சா பென்ஷன் கொடுத்துடுவான். அப்புறம், கடைசிவரை காசு வாங்கலைன்னு சொல்லக்கூடிய கெளரவம் அவனுக்கு இருந்திருக்கு. ஆனால், அதைக்கூட விடாமல், ஒரு வாரத்துக்குள்ளே ஒரு லட்ச ரூபாய் அடிச்சிடறான். so, அந்தப் பெருமையை அவன் இழந்துடறான். காரணம் என்னன்னா – உங்களுக்குச் சொன்னா நீங்க நம்புவேளான்னு தெரியலை. (ராஜாராமைப் பார்த்து) நீங்க இங்கே வந்து பத்து வருஷமாச்சா – (ம் என்கிறார் ராஜாராம்) நம்ப மாட்டாங்க – எங்க வீட்டுக்கு ரைட்டர்ஸ் எல்லாமே வருவாங்க – எஸ்பெஷலி என்னோட ஜெனரேஷன்க்கு முன்ன உள்ள ரைட்டர்ஸை ரொம்ப எல்லாம் வரவழைச்சி – என் வீட்டுல தங்கும்படி வெச்சிருக்கேன். ஒவ்வொரு ரைட்டரோட வைஃபும் நம்ப மாட்டாங்க – ஒவ்வொரு தமிழ் ரைட்டரோட வைஃபும் – இந்தக் குறிப்பிட்ட ஆளைக் கல்யாணம் பண்ணிகிட்டதற்காக வருத்தப்படறாங்க.

ராஜாராம்: So, நீங்க அதுக்காகத்தான் கேட்டாங்களா அவங்களை (மோனிகாவை)…

சு.ரா.: அதுக்காகத்தான் கேட்டேன்.

மோனிகா: அதுனாலதான் ராஜன் எழுதறதே இல்லை (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: ஏன் அப்படி ?

சு.ரா.: இப்ப – ராமாமிர்தம் வைஃப் – நான் பர்சனலா சொல்றேன்னு தயவுசெய்து நினைச்சுக்காதீங்க (இல்லை, இல்லை அதெல்லாம் இல்லை என்கிறார் ராஜாராம்) சொன்னாங்க – என்னிக்காவது இவருக்கு தமிழ்வாணன் மாதிரி ஒரு பேரு வந்திருக்கா ? (அது கஷ்டம்தான் என்கிறார் ராஜாராம்) என்னிக்காவது வந்திருக்கா – ஜெயகாந்தன் எவ்ளோ பெரிய பேரோட இருக்கார் – இவரைச் சொன்னால் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கே தெரிய மாட்டேங்குது. ராமாமிருதம் ? …. நாங்க கல்கி படிச்சிட்டிருக்கோம், குமுதம் படிச்சிட்டிருக்கோம், ஆனந்த விகடன் படிச்சிட்டிருக்கோம்.. உன் புருஷன் பேரு ராமாமிருதமா ? அவர் கதையெல்லாம் எழுதியிருக்கார்னு சொல்றியே – நாங்க படிச்சதே இல்லேன்னு இந்த அம்மாகிட்டே சொல்றாங்க – சரின்னு, நானே ஒரு பொஸ்தகத்தைக் கொடுத்தேன். முதல்லே, – இவர் எந்த லாங்வேஜுல எழுதியிருக்கார்னு கேட்கறாங்க (கூட்டத்தில் சிரிப்பு) இவரோட லாங்வேஜ் என்ன தமிழா இல்லை சான்ஸ்கிரிட்டா இல்லை வேற லாங்வேஜ்ல எழுதியிருக்காரா – அந்த அளவுக்கு அவங்களுக்குச் சிக்கல் இருக்கு – எதுக்கு இப்படி எழுதற – மத்தவங்கள எதுக்காக இப்படித் துன்புறுத்தற – எளிமையா இருந்துட்டுப் போக வேண்டியதுதானே – தமிழ்வாணன் மாதிரி இருந்துட்டுப் போக வேண்டியதுதானே – அப்படிச் சொல்லக்கூடிய பிரஷர்ல அவர் போறார் சார் எடிட்டர்களைப் பார்த்துட்டு. இந்த அம்மா சொல்றது பெரிய விஷயமே இல்லை. அவர் ஒவ்வொரு எடிட்டரா போறார். நான் கதை எழுதறவன். ரொம்ப வருஷமா எழுதிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏத்தாப்ல நான் கதை எழுதித் தரேன். நீங்க போடுங்க அப்படான்னு. (கொஞ்சம் இடைவெளி விட்டு) So, என்னோட சிஸ்டத்துல அது இருக்கறதால அதைச் சொல்லணும்னு நான் எதிர்பார்க்கலை. For example, இப்ப English-ல அதை translate பண்ணேன்னா – ஒருத்தர் சொல்லலாம் எப்படி அந்த discrepancy வந்துச்சுன்னு…

ராஜன் குறை: உங்க மூணாவது நாவல் ரொம்பப் பிடிச்சிருந்தது எனக்கு…

சு.ரா.: அப்படியா… உங்க வாயால கேட்கறது இருக்கே (கூட்டத்தில் சிரிப்பு) ரொம்ப சந்தோஷம். (சு.ரா.வும் சிரிக்கிறார்.) அதைவிடச் சந்தோஷமான விஷயம் எதுவுமே இல்லை. அப்படிச் சொன்னா, உங்களை வெளில தள்ளிடுவாங்களே உங்க பிரெண்ட்ஸ் எல்லாம்…

ராஜன் குறை: அந்த மாதிரி எனக்கு ஒண்ணும் …

சு.ரா.: பயமே கிடையாது.

ராஜன் குறை: ஆமா… Actual-ஆ எல்லார் கிட்டேயும் சொல்லியிருக்கேன். எழுதியிருக்கணும். அந்த மாதிரியான ஒரு…

சு.ரா.: இல்லை… பொதுவா என்ன பேசுறாங்களோ அதை நான் எடுத்துக்கவே மாட்டேன். என்ன எழுதறாங்களோ அதைத்தான் எடுத்துக்குவேன். அப்படித்தான் எடுத்துக்கணும். இல்லை ?

ராஜன் குறை: ஆமா.

துக்காராம்: ஓ… இப்ப எனக்குப் புரியுது. ஒருவேளை குறை சொல்லிட்டே இருப்பதால குறைன்னு பெயர் வந்ததா… (கூட்டத்தில் சிரிப்பு)

மோனிகா: அவரே குறையாக இருப்பதால்….

துக்காராம்: அது நம்பற மாதிரி இல்லையே…

சு.ரா.: அப்படி வெச்சிக்க வேண்டிய அவசியமே இல்லை. யாருமே அவரைப் பர்பெக்ட் ஆள்னு யாராவது தப்பாக நினைச்சாலாவது குறைன்னு சொல்லலாம். அப்படி யாருமே நினைக்கலியே இந்த உலகத்துலே. சுந்தர ராமசாமி குறைன்னு எழுத முடியுமா ? அதை எழுத வேண்டிய அவசியமில்லை. நான் ஒரு குறையான ஆள்னு எல்லாருக்கும் தெரியும்.

மோனிகா: நான் ஜே.ஜே. சில குறிப்புகள் படிச்சதும் – ரொம்ப மிகவும் மற்ற எழுத்துகளைப் படிச்ச பிறகும் என்னைக் கவர்ந்தது – ஓமனக் குட்டியை ஜே.ஜே. குறை சொல்வது (சிரிக்கிறார்.)

சு.ரா.: ஓமனக்குட்டி வந்து அவரை ரொம்ப மோசமா ட்ரீட் பண்றார். என்ன பண்றார்னா – அவரோட third rate poems-ஐ அவர்ட்டே கொடுத்து – அதை first rate poems-னு சொல்லுங்கோ என்கிறார். ஆனா, ஓமனக்குட்டி நல்ல போயம்ஸ் எழுதலை என்பதாலேயோ, அவருக்கு ஒரு disease இருக்கு – ஸ்கின் ப்ராப்ளம் – அதுபத்தியோ அவனுக்கு (ஜே.ஜே) ஒண்ணுமே இல்லை. உண்மையிலேயே அந்த நாவலில் ஓமனக் குட்டியைப் பத்திப் பெருமையா சொல்றவன் அவன்தான். சொசைட்டி அவனை வந்து isolate பண்ணுது. ஆனா, அவர் வந்து ஒரு சின்ன trick பண்றார். இவன் மனசுக்குள்ளே இடம் பிடிக்கணும். ஆகவே, இவரை நாம நல்ல போயட்னு சொல்ல வைக்கணும்னு நினைக்கறார். அந்த எண்ணம் வந்து மோசமான எண்ணம்னு நினைக்கறான் அவன். ஏன்னா, தமிழ்ல இது நடந்திருக்கு…

ராஜாராம்: அப்படியா…

சு.ரா.: ஆமா, தமிழ்ல பெண்கள் வந்து இந்தக் காரியத்தைப் பண்ணியிருக்காங்க. ஆனா, நாவலுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு. நாவலில் அவன் தொகுதியைத் தூக்கி வெளில போட்டுட்டான். தமிழ்ல ஒசத்தியா எழுதுவான். அந்த difference தானே ஒழிய, தமிழ்ல இதுமாதிரி நடந்திருக்கு.

மோனிகா: எல்லாருமே அரவிந்தாட்ச மேனன் மாதிரி – கரெக்டா பேனாவில் மை ஊத்திட்டு – அது மாதிரியான – ஜே.ஜே. மாதிரியான – சரியான ஆளாவே இருக்க முடியுமா ?

சு.ரா.: இல்லை, நான் அப்படிச் சொல்லலை. அவன் பர்பெக்ட் ஆகணும்னு சொல்லலை. நீங்க பர்பெக்ட் ஆகறதுக்கான முயற்சியை மேற்கொண்டே இருக்கறீங்க. நீங்க – இப்ப கம்ப்யூட்டர்ல வொர்க் பண்றீங்க – உங்க job-ஏ பர்பெக்ஷனுக்குப் போறதுதான். நீங்க தத்துபித்துன்னு ஒரு ஆர்டர் கொடுத்து, கமாண்ட் கொடுத்தா – இது பண்ணேள்னா போயிடும். எப்படி நல்லா கார் ஓட்டுவது, எப்படி ஆக்ஸிடென்ஸை அவாய்ட் பண்றது, எப்படி உங்க ஹெல்த்தை நல்லா கவனிச்சிக்கறது, எப்படி மத்தவங்க முன்னாடி பிஹேவ் பண்றது, எப்படி பிஹேவ் பண்ணக் கூடாது – இதெல்லாம் என்ன – மனுஷன்கிட்டே பயங்கரமான craving இருக்கு. அந்த மாதிரியான craving தமிழ்நாட்டிலேயே இருக்கே… அப்புறம் உலகத்துல எந்தக் கன்ட்ரில இருக்காது. (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: ஆனால், எழுத்தில மட்டும் அது இல்லே…

சு.ரா.: எழுத்துல இல்ல. எழுத்துல இல்லனா கூட பரவாயில்லை. செயலில் இல்லை. அவனுடைய செயல்பாடுகளில் இல்லை.

முருகானந்தம்: எந்திரத் துடைப்பான் – எப்படி motivation உங்களுக்கு வந்தது ?

சு.ரா: எனக்கு அதை எழுதினேன்னு ஞாபகமே இல்லை.

ராஜாராம்: அது தொடர்பா – ஒரு கேள்வி என்னன்னா – உங்க கிட்டே வந்து ரெண்டு streams இருக்கு – ஒண்ணு வந்து satire. satire வந்து ரொம்ப அற்புதமா இருக்கு அது வர்ற இடங்களில். இன்னொரு stream வந்து seriousness – சீரியஸா ஒரு விஷயத்தை டச் பண்றது – ரெண்டையும் ஒரு சேரப் பண்ண புதுமைப்பித்தன் முயற்சி பண்ணி ரொம்ப நல்லா வெற்றி பெற்றவர். satire-ஐ வந்து ஒரு ரொம்ப சீரியஸான ஒரு ஆர்ட்டா கன்வர்ட் பண்ணதுல புதுமைப்பித்தனுக்கு முக்கியமான இடம் உண்டு. நீங்க அந்த satire-ஐயே முழுக்க வெச்சி – ஜேஜே சில குறிப்புகளை இரண்டாம் முறை மூணாம் முறை படிக்கும்போது – எனக்கு அதுதான் தோணிச்சு. ஏன் வந்து முதல் வரில வர்ற satire வந்து முழுநாவலிலும் வந்திருந்துச்சுன்னா – வேற ஒரு நாவலா ஆகியிருந்திருக்குமோன்னு எனக்குத் தோணுச்சு. ஆனா, அது உங்களுக்குப் பிடித்தம் இல்ல. இல்லை ?

(தொடரும்…)

Visit http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

பி.கே. சிவகுமார்


சு.ரா.: அது முக்கியமான விஷயம். அது முக்கியமான விஷயம். அவன் யாரு, எங்க இருக்கான்… சார், சில லெட்டர்ஸ் வந்து பிரில்லியண்ட்டா இருக்கு. உடனே நான் அவனுக்கு ஒரு இ-மெயில் அனுப்பறேன். இதைக் கவனிச்சுக்குங்க. ராம் என்ற பேர்ல ஒருத்தன் ஒரு லெட்டர் எழுதியிருக்கான். அந்த லெட்டர்ல இருக்கற ஐடியாஸ் எதுவும் எனக்கு ஒத்து வராது. ஆனால், அவன் ஒரு உண்மையான fellow. ரொம்ப அழகா இந்த விஷயத்தைச் சொல்றான் அப்படான்னு எனக்கு இருக்கு. நான் உண்மையாவே அவனுக்கு ஒரு லெட்டர் எழுதறேன். இ-மெயில்ல. ஏன்னா, இ-மெயில் அட்ரஸ்தானே நீங்க கொடுத்திருக்கீங்க. (ராஜாராம் ‘ஆமாம் ‘ என்கிறார்.) ரொம்ப சந்தோஷம். நான் என்ன எழுதறேன்னா – உங்களுக்கு வந்து லிட்டரேச்சர்ல நிறைய விஷயம் தெரியுது. ஏன் திண்ணைக்கு மட்டும் லெட்டர் எழுதறீங்க. மத்த பத்திரிகைங்கல எழுதலாமே, எல்லா விஷயங்களையும் எழுதலாமேன்னு எழுதினாக்க, அவன் கிட்டேயிருந்து பதிலே வராது.

ராஜாராம்: சிலபேரு வந்து திண்ணைல மட்டும் எழுதறவங்க இருக்காங்க because அவங்க வந்து என்ன சொல்றாங்கன்னா…

சு.ரா.: நான் வந்து… எனக்குப் புடிச்சி இருக்கக் கூடிய ரைட்டர்ஸை வந்து வெல்கம் பண்றேன்… உள்ளே வான்னு…

ராஜாராம்: பிரிண்ட் மேகசைன்ஸ்க்கு ஏன் அவங்க அனுப்ப மாட்டேங்கறாங்கன்னா – they think that they are not upto that standard-ன்னு சிலபேரு நினைக்கறாங்க. இப்போ – பிரிண்ட் மேகசைன்ஸ்ல என்ன பிராப்ளம்னா – they have a limit on their resources. இப்போ எங்களுக்கு அந்த resources constraints கிடையாது. அதனாலதான் நீங்க பார்த்தீங்கன்னா…

சாமிநாதன்: ஒரு எண்ணூறு வார்த்தைகளில் அனுப்புங்கன்னு சொல்வாங்க. (கூட்டத்தில் மெலிதான சிரிப்பு.)

ராஜாராம்: எண்ணூறு வார்த்தைகளில் அனுப்பணும். ஒரு நாற்பது பக்கத்துக்கு மேல எல்லாரும் – இப்போ திண்ணை மாதிரி ஒரு இது வரதுன்னா – காலச்சுவடு வந்து ஐநூறு பக்கம் வரணும் – மூணுமாசத்துக்கு ஒருமுறை. It is not possible. So, அதனால வந்து – பலபேரு வந்து திண்ணைல மட்டும் எழுதறோம் நாங்கன்னு இருக்கறவங்க இருக்காங்க.

சு.ரா.: நான் வந்து – அந்த குரூப்ஸை எல்லாம் question-ஏ பண்ணலை நான் வந்து. ஆனா வரது – எல்லா இண்டியன் மேகசைன்ஸ்லயும் லெட்டர்ஸ் போடுறா. அவா differ பன்ற லெட்டர்சும் போட்டுண்டுதான் இருக்கா. அப்படி இல்லேன்னு சொல்ல முடியாது. இப்போ திண்ணைல எழுதக்கூடிய ஒரு ஆள் இருக்காரே – அவருடைய potentiality-க்கு – அவர் தமிழ்நாட்ல இருக்கக்கூடிய சிறுபத்திரிகைகள் எதுல வேணும்னாலும் லெட்டர் எழுதலாம். லெட்டர் மட்டும் இல்லை. ஆர்டிகளும் எழுதலாம். அதுக்கான potentiality அவர்கிட்டே இருக்கு. பல லெட்டர்ஸ் நான் பார்த்து இருக்கேன். அதுல அட்லீஸ்ட் ஒரு பிப்டி பர்சண்ட் ஆட்களுக்காவது – எல்லாம் நான் பார்க்க முடியாது – பிப்டி பர்சண்ட்டுக்காவது நான் உடனே இ-மெயில் போடுவேன். ஒருத்தன் வந்து புளிய மரத்தின் கதையை third rate novel-னு உங்க பத்திரிகைல இல்ல இன்னொரு பத்திரிகைல போட்டு இருந்தான். உடனே நான் எழுதினேன். உன்னுடைய பாயிண்ட்டை நான் ஒத்துக் கொள்ளலை. ஆனா, நீ புளிய மரத்தின் கதையைப் பத்திப் பேசறியே, அது நேக்கு சந்தோஷமா இருக்கு. எனவே, புளிய மரத்தின் கதையைப் பத்திப் பேசினதோட நிப்பாட்டிக்காம, மத்த நாவல்கள் பத்தியும் நீங்க பேசணும் அப்படான்னு போட்டிருந்தேன். பதிலே கிடையாது. (கொஞ்சம் இடைவெளிவிட்டு) என்னோட லெட்டர் அவனுக்குக் கிடைச்சதுல ஒரு சின்ன சந்தோஷம் இருந்தாலும், அவன் பதில் போடாம இருப்பானா ? யோசிச்சிப் பாருங்க.

ராஜாராம்: So, you mean to say – இது எல்லாம் ghost writing மாதிரி பண்றாங்க அப்படான்னு…

சு.ரா.: அப்படித்தான் நான் நினைக்கறேன். நான் சந்தேகப்படுறேன். நான் உண்மைன்னு சொல்லலை. நான் சந்தேகப்படுறேன். அந்த சந்தேகம் ஒரு எழுத்துல இருக்கு…

ராஜாராம்: அந்தச் சந்தேகம் சிலசமயம் எங்களுக்கே வந்து – சிலதை ரிஜக்ட் பண்ணியிருக்கோம் நாங்க.

சு.ரா.: சார், நாம திட்டவட்டமா ஒரு காரியத்தை சிலசமயம் நாம மறுக்க முடியாது. இப்ப நாம ஒரு கூட்டம் போடுறோம். ஒரு third rate ஆள் – இந்தக் கருணாநிதி மீட்டிங்ல பேசக் கூடியவன் – நானும் வரேன் என்கிறான். நீங்க அவனை அவாய்ட் பண்ணுவீங்களா மாட்டேளா ? அவன் வந்தா – நம்ம யாரையுமே பேச விடமாட்டான். ரெண்டு ரெண்டு நிமிஷத்துக்கு ஏதாவது ஹியூமர் சொல்லிட்டே இருப்பான். ஏதாவது ஒண்ணு wit அவன் சொல்லிண்டே இருப்பான். அவ்வளவு பேரும் சிரிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அவனை நீங்க அவாய்ட் பண்ணலேன்னா – இந்தக் கூட்டத்திலே எந்த டிஸ்கசனும் நடக்காது. (ராஜாராம் ‘That is true ‘ என்கிறார்.) அதுக்கு எந்த ரீசன் சொல்லுவீங்க ? அவருக்குத் தமிழ்ல பற்று இல்லை என்பேளா ? அவருக்குப் பேசத் தெரியலை என்பேளா ? சுந்தர ராமசாமிக்குத்தான் ஹியூமர் இருக்கு, உனக்கு ஹியூமர் இல்லை என்பேளா ? என்னுடைய ஹியூமர் எல்லாம் தூக்கித் தூரப் போட்டுடுவான். வந்து அரை நிமிஷத்துல என்னை ஜன்னல் வழியா வெளியே போட்டுடுவான். அவ்ளோ ஹியூமரஸா பேசுவான். பிரபஞ்சன்கூட ஒருத்தர் வந்திருந்தார். கேட்டேளா ? (கூட்டத்தில் சிரிப்பு) பிரபஞ்சன்கூட ஒருத்தர் வந்திருந்தார். கேட்டிருக்கீங்களா ?

பி.கே. சிவகுமார்: இந்த… ரேடியோ ஸ்டேஷன்ல வொர்க் பண்றார். பேரு மறந்து போச்சி.. (சற்று யோசித்தபின்) ஆவுடையப்பன் (இன்னும் சிலரும் ஆவுடையப்பன் என்கிறார்கள்.)

சு.ரா.: சார், ஒரு செகண்டுக்கு ஒரு ஹியூமர் சொல்றார். நானே சிரிக்கறேன்.

முருகானந்தம்: அடுத்த மீட்டிங்லயும் அதே ஹியூமர்தான் சொல்லுவார்.

சு.ரா.: சொல்லிட்டுப் போகட்டும். நான் பல்லைக் கடிச்சிண்டு சிரிக்கக் கூடாதுன்னு இருக்கறேன். (கூட்டத்தில் சிரிப்பு) இவர் பேசறதுக்கு சிரிக்கக் கூடாதுன்னு. ஆனா, within five minutes சிரிக்க ஆரம்பிச்சாச்சி. சொல்றார் அவர். ஆனா, அவர் வந்தார்னா, இந்தக் கூட்டத்துல நாம இவ்ளோ பேசறோம் இல்லை, இதுல எதுவுமே பேச முடியாம ஆயிடும். அப்படி ஆக்குறவங்கள நமக்குத் தெரியாது.

ராஜாராம்: அது, அவர் இயல்பா இருக்கற மாதிரி இருக்கார் அவர்.

சு.ரா.: இருக்கார் மட்டுமில்லை. அந்தக் கூட்டத்திலே அவ்வளவுமே சிடுமூஞ்சிகள். அவ்வளவுமே சிடுமூஞ்சிகள். படிச்ச சிடுமூஞ்சிகள் வந்திருக்கு. அவர் போயி கொஞ்சம் கலகலப்பா ஆக்கிட்டேன்னு சொல்லுவார். So, எல்லாத்துக்கும் நீங்க ரீசன் சொல்ல முடியாது. எவ்வளவோ தந்திரங்கள் இருக்கு. மொதல்ல தமிழ்நாட்ல இருக்கக் கூடிய தந்திரங்கள் அளவுக்கு – எனக்குத் தெரிஞ்சி – மத்த லிட்டரேச்சர்ல… வேர்ல்ட்ல எதுவுமே கிடையாது. ஒரிஜினல். தந்திரங்கள் இருக்கு இல்லையா ? தமிழ்ல இவன்தான் முதல்ல கிரியேட் பண்றான். அது கொஞ்சம் கொஞ்சமா மத்த தேசங்களுக்குப் பரவுது. (கூட்டத்தில் சிரிப்பு) விளையாட்டுக்குச் சொல்லல சார்.

துக்காராம்: (சிரித்தபடியே) எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்றோம்.

சு.ரா.: ஆமா… நீங்க பண்ணுங்கோ… அதுதான் எனக்குப் பயமாயிருக்கு. (சிரிக்கிறார். கூட்டத்திலும் சிரிப்பு.)

ராஜாராம்: (சிரித்தபடியே) கேசட்டை உங்ககிட்டேயே கொடுத்துடறேன் நான்.

சு.ரா.: (சிரித்தபடியே) இல்ல இல்ல. சும்மா சொல்றேன். (சிரிக்கிறார்.) நீங்க அப்படி மிஸ்யூஸ் பண்ணுவீங்க என்ற எண்ணம் எல்லாம் எனக்கு அறவே இல்லை.

மோனிகா: எனக்கு வந்து ரெண்டு கேள்விகள் இருக்கு.

சு.ரா.: உங்களைப் பத்தியா ? (சிரிக்கிறார்.)

மோனிகா: என்னைப் பத்தி நிறைய கேள்விகள் இருக்கு. (சிரிக்கிறார்.)

சு.ரா.: (ராஜன் குறையைக் காட்டி) இவரைப் பத்தி ஏதாவது கேள்விகள் இருக்கா ? criticism அல்லது appreciation ஏதாவது இருக்கா ?

மோனிகா: இன்னும் கொஞ்ச நாள்ல புக்கா போடலாம்னு இருக்கேன் (சிரிக்கிறார். கூட்டத்தில் சிரிப்பு.) அதுக்கு முன்னாடி..

சு.ரா.: சொல்லி முடியாது… சொல்லி முடியாது…

மோனிகா: அப்பதான் வந்து யாரும்…

ராஜாராம்: திண்ணைக்கு அனுப்புங்க (சிரிக்கிறார்.)

மோனிகா: இப்ப வந்து யார்கிட்டயாவது கருத்து வேறுபாடுன்னா யாரும் பேசித் தீர்த்துக்கறதே இல்லை. புத்தகமா போட்டுடறாங்க. So, வாசகர்களுக்கும் – சண்டைகளையே படிச்சி – இலக்கியங்களை விலக்கி வெச்சிட்டு – சண்டைகளை அதிகமாகப் படிக்கறாங்க (சிரிக்கிறார்.)

ராஜாராம்: அதானே சுவாரஸ்யமா இருக்கு. இவர் (சு.ரா.) சொல்ற மாதிரி – கலகலப்பு ஊட்டறவங்கதானே – பெரும்புகழ் இருக்கு அவங்களுக்கு.

சு.ரா.: ரொம்பக் கஷ்டமா இருந்தது எனக்கு. ஏன்னா, நான் இருந்து இருந்து ஒரு கூட்டத்துக்குப் போய் இருக்கேன். ரொம்ப பேர் இன்ஸிஸ்ட் பண்ணியிருக்காங்க. இந்தப் பத்து வருஷமா – எந்த பப்ளிக் மீட்டிங்குக்கும் நான் போனதில்லை. போகக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன்.

ராஜாராம்: பிரபஞ்சன் வந்திருக்காரேன்னு போயிருக்கீங்க.

சு.ரா.: ஸ்டேட்ஸ்க்கு வந்ததே – போகக்கூடாதுன்னு (கூட்டத்தில் சிரிப்பு) கூட்டங்களுக்குப் போகக் கூடாதுன்னு தெளிவாதான் வந்தேன். எனக்கு உங்களுடைய ஆடியன்ஸ் எல்லாம் என்டர்டெயின் பண்ண முடியாது. சிலசமயம் – நான் நல்ல பேசிடுவேன். என்னை அறியாமலே நல்லா பேசிடுவேன். அது உண்மைதான். ஆனால், நான் வந்து உங்க ஆடியன்ஸை என்டர்டெயின் பண்ணுவேன் என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லே. எனக்கு நீங்க பணம் கொடுத்து வரவழைச்சதுக்கு அப்புறம் – இந்த ஆள் ஒரு அரைமணி நேரம், முக்கால் மணி நேரம் பேசினான் – ஒரு wit கூட சொல்லலையே அப்படான்னு நீங்க சொல்லும்படியான கஷ்டம் உங்களுக்கு வர வேணாம். நான் வரலை. அப்படான்னு சொல்லிட்டேன். அப்புறம் அவங்க யாருமே கூப்பிடுறதையும் விட்டுட்டாங்க. இப்ப இருந்து இருந்து பிரபஞ்சன் மீட்டிங்குக்குப் போனேன் – அங்க இருக்கக் கூடிய எல்லாருக்கும் – பத்து பன்னிரண்டு பேர் இருக்காங்க – பன்னிரண்டு பேருக்கும் தமிழ் லிட்டரேச்சர் பத்தி எதுவுமே தெரியாது. எதுவுமே தெரியாது.

சாமிநாதன்: தெரிஞ்சிருந்தாதான் ஆச்சரியம்.

சு.ரா.: அந்த ஆட்கள் நினைக்கறாங்க – இந்த ரேடியோ ஸ்டேஷன்காரர் இருக்காரு இல்லையா… அவரோட இவர் (பிரபஞ்சன்) தொத்திண்டு இருக்காருன்னு. அவர்தான் முக்கியமான ஆள். இந்த தேசத்திற்கு வரவேண்டியவர். அதற்கானத் தகுதி உடையவர். இவர் எப்படியோ உள்ளே நுழைஞ்சிட்டார். இவரும் சும்மா ரெண்டு வார்த்தை பேசுவார்னு….

ராஜாராம்: பிரபஞ்சன் சும்மா கூட வந்திருக்கார்னு நினைக்கறாங்க.

சு.ரா.: அன்னிக்கு அவர் ரொம்ப உருக்கமா பேசினார். தமிழை நீங்க வந்து கவனிக்க வேண்டிய அவசியம் என்ன ? ஏன் கவனிக்கனும்னு நான் நினைக்கறேன்னு ரொம்ப வேதனையாப் பேசினார்.

சாமிநாதன்: யாரு பிரபஞ்சனா ?

சு.ரா.: ஆமா, அன்னிக்குப் பேசினார். சொல்றேன் நான். அவர் சொன்னார். எனக்கு ஹெல்த் கொஞ்சம் மோசமா ஆயிட்டு இருக்குன்னார் அவர். நான் சொன்னேன். இந்த மாதிரி ஆட்களோட நீங்க மீட்டிங்குக்குப் போனீங்கன்னா, உங்க ஹெல்த் மோசமாத்தான் செய்யும்னு. (கூட்டத்தில் சிரிப்பு.) ஏன்னா, நீங்க மீட்டிங்கை அவாய்ட் பண்றதுக்காக – வெளில சிகரெட் பிடிக்கப் போறீங்க. அப்படிப் போய் முடியுமா ? போயிண்டே இருக்க வேண்டியதுதான். ஒரு பாக்கெட் சிகரெட் அதுக்கே போயிடும்.

முருகானந்தம்: இப்படி வருஷா வருஷம் ஒரு செட் வந்துட்டு இருக்கு.

சு.ரா.: தெரியும்… தெரியும்..

முருகானந்தம்: அந்த… லியோனில இருந்து ஆரம்பிச்சது…

சு.ரா.: ஆமா… ஆமா… அது.. வரதைப் பத்தி இல்லை சார். அவங்கதான் தமிழ்நாட்டுல முக்கியமான ஆட்கள்னு நீங்க நினைக்காம இருக்கணும்.

ராஜாராம்: அப்படித்தான் நினைக்கறாங்க. அப்படித்தான ஆகுது. இல்லையா ?

சு.ரா.: அதானே விஷயம்.

மோனிகா: நான் உங்ககிட்டே கேள்வி கேட்கணும்னு… நீங்க என்கிட்டே கேள்வி… (சிரிக்கிறார்.)

சு.ரா.: சொல்லுங்கோ. சொல்லுங்கோ. Sorry. sorry. நீங்க இந்த chair-க்கு வந்திடுங்க. (அருகில் உள்ள சேருக்கு அழைக்கிறார். மோனிகா இடம் மாறுகிறார்.)

மோனிகா: முதல்ல பேசும்போது சொன்னீங்க. ஒரு ரைட்டர் என்ற ஆள் வந்து – என்னென்ன emotionally-ஆ feel பண்றாரோ எல்லாமே எழுதணும். ரொம்ப ஹானஸ்ட்டா இருக்கணும்னு. So, அப்படி இருக்கும்போது – writers பத்திய ஒரு value judgement-க்கு நீங்க எப்படி வரீங்க – இந்த ரைட்டர் நல்லவர், இந்த ரைட்டர் மோசமானவர்னு. Because ஒரு ஆள் உணர்ச்சிவசப்படும்போது இது நல்ல உணர்ச்சி, இது கெட்ட உணர்ச்சினுதானே சொல்ல முடியும் (சு.ரா. ‘ஆமா ஆமா ‘ என்கிறார்). So, இப்ப வந்து – how do you judge a literature.

சு.ரா.: மோனிகா, நான் படிக்கற சமயத்துல – எனக்கு வந்து – நான் ஏற்கனவே இந்த இடத்துலதான் உட்கார்ந்திருக்கேன். என்னை அவன் வாசல் வழியாக் கூட்டிண்டு போக வேண்டாம் அந்த ரைட்டர். ரொம்பக் கொண்டு போக வெண்டாம் அவன். அப்படான்னு நான் பாக்கறேன். ஆனா, கதையைப் படிக்கும் முன் நான் இங்கே உட்கார்ந்திருக்கேன். கதையைப் படிச்ச பின்னும் இங்கதான் உட்கார்ந்திருக்கேன்னா – எனக்கு அவனைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. அவன் லிட்டரேச்சரை கிரியேட் பண்ணலை அப்படான்னுதான் நான் feel பண்றேன். அதை நான் சொல்றேன். வேற ஒண்ணும் இல்லை.

ராஜாராம்: So, அதுவந்து ஒரு subjective ஒண்ணுதான் ?

சு.ரா.: subjective தான். சார், லிட்டரேச்சர்ல சிலது, சார் (அண்ணாமலை) கூட ஒரு எட்டு வருஷம் ஒன்பது வருஷம் முன்னால – ராமகிருஷ்ணன் வீட்டுல பேசிண்டு இருக்கும்போது சார் சொன்னார். (அண்னாமலையைப் பார்த்து) உங்களுக்கு ஞாபகம் இருக்கா தெரியலை – சார் சொன்னார். இந்த சயின்ஸ் மாதிரி லிட்டரேச்சர் ஏன் ஆகக் கூடாது. ஏன் அது subjective-ஆ இருக்கணும் அப்படாங்கற விஷயத்தைச் சார் சொன்னார். வாழ்க்கைல ஒரு ரைட்டர் எதைப் பத்தியும் சொல்றதுக்கு யோசிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் இருக்கு. ஒரு Physicist அப்படி இல்லையே – ஒரு விதி சொன்னீங்கன்னா – அது எல்லாருக்கும் அப்ளை ஆகுமெ. அதை நீங்க இங்க ப்ரூவ் பண்ணிக் காட்டலாமே. லிட்டரேச்சர் அப்படி இல்லையே. நான் ஒரு மிகச் சிறந்த புத்தகம் என்கிறேன். உடனே சார் சொல்றார். அதுமாதிரி third rate book-ஐ நான் படிச்சதே இல்லைன்னு. அவர் என்ன முட்டாளா ? நான் என்ன புத்திசாலியா ? So, இந்த மாதிரியான ஒரு இதுவந்து பாஸிபிள் இல்லைன்னு நான் நினைக்கறேன். பின்னால, ஒரு அம்பது வருஷத்துக்கு அப்புறம், நூறு வருஷத்துக்கு அப்புறம் – பாஸிபிளா இருக்கலாம். எனக்குத் தெரியாது. நிறைய common qualities வந்து – லிட்டரேச்சர்ல ஒண்ணா கொண்டு வந்து – அடிப்படைல என்ன – நீங்க அவர் இவர் எல்லாருக்குமே – எது பிடிக்கறதுன்னு பார்த்து – அப்படித்தான் சயின்ஸ் இணைச்சிருக்கு. அப்படி ஒண்ணா இணைச்சி – இந்த விஷயதை நாம திருப்பிக் கிரியேட் பண்ணினோம்னா – நிறைய பேருக்குப் பிடிக்கும். இதை சயின்ஸ்ல ப்ரூவ் பண்ண முடியாது. ஆனா, சயின்ஸ்ல ப்ரூவ் பண்ணது எல்லாமே – நூத்துக்குப் பாதி அபத்தம். சயின்டிஸ்ட்ஸ் ரொம்ப வருத்தப்படறாங்க. சயின்டிஸ்ட்ஸ் வந்து சந்தோஷமான நிலைமைல இல்ல. அது உங்களுக்குத் தெரியுமோ ? சயின்டிஸ்ட்ஸ் வந்து போயட்ஸைப் பார்த்துப் பொறாமைப்படறாங்க. தத்துபித்துனு உளறுற போயட்ஸ்னு நாம நினைக்கறோம் இல்லையா. அவன் ஒரு சாதாரண ஆளு. ஒண்ணுமே தெரியாதவன். சயின்டிஸ்ட் ஒரு மகா பெரியவன். அப்படான்னு நாம நினைக்கறோம் இல்லையா. நாங்க வந்து போயட்ஸைதான் படிக்கணும்கறாங்க. போயட்ஸை எங்களுக்கு ஆழ்ந்து படிக்க வேண்டிய அவசியமிருக்கு. எங்களுடைய இமாஜினேஷன் ரொம்ப அளவு மோசமாயிடுச்சி. ஆனா, ரொம்ப அபத்தமான விஷயம் – சமீபத்துலகூட இவர் சொல்லியிருக்கார்… புத்தகம் எழுதியிருக்காரே.. சயின்டிஸ்ட்… பிரிட்டிஷ் சயிண்டிஸ்ட்… (சில நொடிகள் யோசிக்கிறார்.) black hole-ஐப் பத்திச் சொன்னவர். அவன் சொல்றான். நான் black hole-ஐப் பத்திச் சொன்னது எல்லாமே தப்புன்னு. நான் பத்து வருஷமா அதை நம்பிண்டு இருக்கேன். இப்ப திடார்னு வந்து அதைத் தப்புங்கறான். அதற்காக நான் நிறைய புஸ்தகங்கள் படிச்சித் தெரிஞ்சிருக்கேன். கஷ்டமான விஷயம் அது. ஏறக்குறைய அந்த விஷயங்களை நான் தெரிஞ்சிக்கக்கூடிய நிலைமைல அவன் சொல்றான். நான் சொன்னது எல்லாமே தப்புன்னு. So, சயின்டிஸ்ட் வந்து நாம நினைக்கற மாதிரி ஒரு தெளிவான நிலைல இருக்காங்க – ஆனா அதுனால அவங்களுடையது பாஸிடிவ் கான்ட்ரிபியூஷன் இல்லைன்னோ – சொசைட்டி மாற்றத்துல அவங்களுக்குப் பங்கில்லைன்னோ நான் சொல்லவே இல்லை – அந்த மாதிரி நான் நினைக்கவே இல்லை. எனக்கு சயின்டிஸ்ட்ஸ் மேல ரொம்ப ரெஸ்பெக்ட் உண்டு – சின்ன வயசிலேயும் உண்டு. இப்பவும் உண்டு. ஆனா, நாம நினைக்கற அளவுக்கு அவன் தெளிவா இல்லை. நாம நினைக்கறோம். ரைட்டர் confused-ஆ இருக்கான். சயின்டிஸ்ட் தெளிவா இருக்கான்னு. அப்படி இல்லை. நான் எவ்வளவு confused-ஆ இருக்கேனோ – நான் confused-ஆ இருக்கேன் என்கிற எண்ணம் என்கிட்டே இருக்கு – அதன்மேல எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் இருக்கு. நான் confused-ஆ இருக்கேன். தெளிவான எண்ணங்கள் எனக்கு இல்லை. அப்பப்ப எனக்குத் தோணற விஷயங்களை நான் பேசறேன்…

சாரதா: இல்ல. science can expand. It doesn ‘t have an end. It can go further…

சு.ரா.: what about writing ?

சாரதா: Writing can go. But cannot go nowhere and anywhere. You can create things… But.. fact is a fact.

சு.ரா.: No.. No.. No. I wont admit. We are the teachers for scientists.

சாரதா: ம்… ம்… I dont think so. you may be giving some relaxation…

சு.ரா.: I will tell you… philosophers are teachers. அவங்க ஒத்துக்கறாங்க. philosophersதான் எங்களுக்கு டாச்சர்ஸ்.

ராஜாராம்: They need imagination.

சாரதா: ரைட்டர்ஸ் பிலாசபர்ஸா ? writers are supposed to be philosophers ?

சு.ரா.: No.. No.. நீங்க வந்து என்னை மடக்குறதுக்காக..

சாரதா: No.. No. I am just coming to.. மடக்கறதுக்காக இல்லை.

சு.ரா.: என்னை மடக்குறதுக்காக கேட்கறீங்கன்னு நான் நினைக்கலை (கூட்டத்தில் சிரிப்பு) அப்படான்னு நான் சொல்றேன். ஆனா, பிலாஸபியை விட்டு – அது சம்பந்தம் இல்லாம – ரைட்டிங்னு எதுவுமே கிடையாது.

மோனிகா: ரெண்டாவது கேள்வி. இதோட தொடர்ச்சிதான்.. முதல் கேள்வியோட தொடர்ச்சிதான். இப்ப ஒரு பொதுவான ஒரு ஆடியன்ஸ் – அவங்க எல்லாரையும் சேர்ந்து ரீச் ஆகற மாதிரியான – ஒரு மூவியோ ஐடியாவோ இருக்கும்போது எல்லாரும் ஒத்துக்கறாங்க. சிறுபத்திரிகைன்னு வரும்போது ஒரு ஐநூறு பேர்தான் படிக்கறாங்க. So, subjective-ஆ ஒரு ஓபனிங்கா இருக்க முடியும் என்றபோது – ஒரு big publication-ஓ, மூவியோ அப்படி இருக்க முடியும் என்னும்போது, வெகுஜன கலாசாரத்தோட போய் எப்படி எல்லாரும் விஷயங்களைத் தரமுடியும் என்பது பற்றி யோசிக்காமல் – ஒரு குறுகிய வட்டத்தில் சிறுபத்திரிகைகள் – இப்போ சேரன் படத்துல ஒருத்தர் காலச்சுவடு படிக்கிறார் – அதைப் பார்த்துட்டு அது நல்ல பத்திரிகை போலன்னு மத்தவங்க வாங்கிப் படிக்கலாம். குமுதத்தில இருந்து தீராநதி வந்தபிறகு, இளைஞர்கள் கொஞ்சம் இலக்கியத்தை சீரியஸா படிக்க ஆரம்பிச்சிருக்காங்க. So somehow we have to relax our judgements…

சு.ரா.: ஒத்துக்கறேன். இப்போ நீங்க கேட்ட கேள்வி இவரைக் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு அப்புறம் வந்த கேள்வியா, முதல்லயே இருந்த கேள்வியா ? (கூட்டத்தில் சிரிப்பு)

மோனிகா: முதல்லயே இருந்த கேள்வி.

சு.ரா.: அப்படான்னா பதில் சொல்றேன். இவரைக் கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு வந்த கேள்வின்னா, அவர்தான் அதுக்கு பதில் சொல்லணும் (கூட்டத்தில் சிரிப்பு) அப்படான்னா நான் என்ன சொல்றேன்னா – நீங்க சொல்ற process எல்லாமே நான் ஒத்துக்கறேன். ஆனா – எல்லா சமயத்திலேயும் இதுமாதிரி விஷயங்களைக் கிரியேட் பண்ணுகிற body வந்து சின்னதாகத்தான் இருக்கும். அங்க இருந்துதான் மத்த இடங்களுக்கு எல்லாம் பரவுது. Physics-ஐ எல்லாருக்கும் கொண்டு போகணும்னு சொல்லி – ரொம்ப அற்புதமா எழுதறானே அவன்கிட்ட கூட – எல்லார்கிட்டயும் ஏன்டா நீ பிஸிக்ஸைக் கொண்டு போறாய்னு கேட்கக் கூடாது. ஏன்ன, பிஸிக்ஸ் என்ற சப்ஜெக்ட் அந்தமாதிரி சப்ஜெக்ட்தான். இவன் வந்து ஈஸியா உட்கார்ந்து இருப்பான். இந்த ரைட்டர் வந்து இவனை வீட்டில் வந்து மீட் பண்ணனும். அப்படான்னு சொல்லக் கூடாது இல்லையா. நான் பாதி வரேன். நீயும் பாதி வழி வா. நீங்க சொல்லக் கூடிய எல்லா டெவலப்மெண்ட்டும், சொசைட்டில நடக்கக்கூடிய எல்லா விஷயமும் – சேரன் ஒரு காலச்சுவடைக் காட்டறார் இல்லை ஆனந்த விகடன்லயும் ஆனந்த விகடன்ல வராதுன்னு நினைச்ச ஒரு கதை வருது… புரிஞ்சதா… என் கதை ஒண்ணை ஆனந்த விகடன் பப்ளிஷ் பண்ணலாம். இந்த பாஸிபிலிட்டிஸ் எல்லாம் – சிறுபத்திரிகைகாரங்களுடைய எக்ஸிஸ்டென்ஸ்னால வந்ததேயொழிய – அவங்களுடைய மூளைல இருந்து உதிச்சது இல்ல. நாங்க காலச்சுவடு என்ற பத்திரிகையை முக்கியப்படுத்தியிருக்கோம். அதுதான் தமிழ் சொசைட்டில முக்கியமான பத்திரிகைன்னு சொல்லியதால – அதை ரிப்ளக்டிவா வாங்கிக்கறார் சேரன். அவர் வந்து – காலச்சுவடு கீழே விழுந்துடுச்சின்னா – அடுத்த நிமிஷமே – இன்னொரு பத்திரிகையைக் காட்டுவார். அவருக்குக் கான்ஷியஸ்னஸ் இல்லை. அதற்கான கான்ஷியஸ்னஸ் இல்லை. அதனால நான் வந்து அதற்குப் பெருமைப்படல. சந்தோஷப்படல.

சு.ரா.: (தொடர்ந்து) மூனாவது கேள்வி – முக்கியமான கேள்வி – நான் உங்களைக் கேட்க வேண்டியது. இவரை நீங்க கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் உங்க லைப் எப்படியிருக்கு ?

மோனிகா: கிட்டத்தட்ட கடந்த பத்து ஆண்டுகள்… உங்களை நைன்டி ஒன்ல பாத்ததுக்கு அப்புறம்…

சு.ரா.: முதல்ல படுத்தறாரா… இல்ல பெண்களுக்கு சுதந்தரம் வேணும்னு சொல்லியிருக்கார். அதை உங்களுக்குத் தந்திருக்காரா…

மோனிகா: இன்னும் நாங்க வந்து சேர்ந்து வாழறோம்னுதான் சொல்லிட்டு இருக்கோம். இவரை என் கனவர்னு நான் யாருக்கும் introduce பண்ணதே இல்லை.

சு.ரா.: இல்லை, நீங்க சொல்லவே வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. சேர்ந்து வாழ முடியறதான்னு கேட்டேன் (கூட்டத்தில் சிரிப்பு) ஆனா, உங்களுக்கு நீங்க யாரைக் கல்யாணம் பண்ணின்டாலும், நீங்க ஏதாவது ஒரு காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிதான் இருக்கும். அதுதான் உண்மை.

சாமிநாதன்: ஆம்பிளைக்கும் உண்டு அந்த காம்ப்ரமைஸ்.

சு.ரா.: ஆமா உண்டு. ஆம்பிளைக்கு நிறைய உண்டு. பெண்ணாவது அவங்க காம்ப்ரமைஸை வெளியே சொல்றாங்க. ஆம்பிளைங்க சொல்லவே முடியாது.

ராஜாராம்: உங்க (சு.ரா.) கிட்ட ஒரு கேள்வி – ஜே.ஜே. சில குறிப்புகள் – ஏன் மலையாள பின்னணியில் இருந்தது ?

(தொடரும்)

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – V

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

பி.கே. சிவகுமார்


சு.ரா.: அவர் எழுத முடியாதுன்னுட்டார்.

அண்ணாமலை: அதாவது அவருக்கே…

சு.ரா.: ஆமாமா. அவருக்கே அந்த block. ஆனா அது ஒரு தப்பான blockதான். அவர் அப்படி நினைச்சுண்டு – தனக்கு எழுத முடியாதுன்னுட்டு – அவருக்கு ஒரு block. இந்த writers block என்கிற விஷயத்த – இந்த country-ல உடைச்சு எறிஞ்சிடுவாங்க.

அண்ணாமலை: ஆமா.

(சு.ரா. தொடர்ந்து பேசுகிறார். யாரோ தொடர்ந்து பலமாக இருமுகிறார்கள். சு.ரா. பேசுகிற அடுத்த ஒன்றிரண்டு வாக்கியங்கள் தெளிவாகப் பதிவாகவில்லை.)

சு.ரா.: (தொடர்ந்து) Writers block-ஐ தீர்த்துக்கறதுக்கு courses இருக்கு. Writer-வோட block. அதையெல்லாம் இங்கே மதிக்கவே மாட்டாங்க. உட்கார்ந்து தொடர்ந்து daily அஞ்சு மணி நேரம் எழுது. என்ன வேணாலும் குப்பையானாலும் எழுது. தொடர்ந்து எழுது. அதுக்கப்புறம் விஷயங்கள் வரும். முதல்ல act பண்ணு. எழுது. உடனடியா எழுது. எதைப் பத்தியாலும் எழுது. உன் wife-ஐத் திட்டி எழுது. ரோடுல போறவனைப் பத்தி எழுது. (கூட்டத்தில் சிரிப்பு.) அல்லது இன்னைக்குக் குடிக்காம இருக்கறதுல இருக்கிற வருத்தத்தைப் பத்தி எழுது. எதை வேணும்னாலும் எழுது.

துக்காராம்: (சிரித்தபடியே) முதல்ல சொன்னீங்களே – பொண்டாட்டியைத் திட்டி எழுதறது – எல்லாரும் ஆர்வமா எழுதுவாங்க.

சு.ரா.: இந்த cretive process இருக்கே அது ஒண்ணு. Creative Process என்ற thought இருக்கே, அது ஒண்ணு. தமிழ்ல Creative Process என்ற thought-ஏ கிடையாது.

பி.கே. சிவகுமார்: நீங்க ஒருதடவை ‘எழுதும்போது கலைஞன். எழுதாமல் இருக்கும்போது இன்னும் கலைஞன் ‘ன்னு சொல்றீங்க இல்லையா. அந்த aspect-ல…

சு.ரா.: இல்லை. நான் சொன்னதில்லை. அது என்னுடைய sentence மாதிரியே இல்லை அது.

பி.கே. சிவகுமார்: ஓ… அப்படி நீங்க சொன்னதா அதை நான் படிச்சிருக்கேன்.

சு.ரா.: சொல்லியிருப்பாங்க. சொல்லியிருப்பாங்க. நான் சொன்னதா எங்கிட்டயே நிறைய பேரு பல விஷயங்களைச் சொல்றாங்க. (கூட்டத்தில் சிரிப்பு) அப்படியிருக்கும்போது உங்ககிட்டே சொல்றதிலே ஆச்சரியமில்லை.

பி.கே. சிவகுமார்: எழுத்திலேயே இதை நான் படித்தேன். இணையதளத்தில்.

சு.ரா.: (தொடர்ந்து) கூட்டங்களிலே சொல்றபோது – எனக்கு மறுக்க முடியாம ஆயிடறது. ஏன்னா நிறைய பேரு இருக்காங்க. அவன் என் close friend. அவன் சொல்றான். ஏதோ ஒண்ணு தப்பா சொல்றான் basic-ஆ. நான் சின்ன வயசுல ரொம்ப மறுத்துப் பேசுவேன். உடனே எழுந்து நான் அப்படிச் சொல்லலைன்னு. இப்ப நான் வந்து சண்டை சச்சரவுகளைத் தாங்க முடியாமல், சரி சொல்றியா சொல்லு, ஞானபீட பரிசு கிடைச்சிருக்குன்னு சொல்றியா – நான் சும்மா இருப்பேன். அப்படிங்கற ஒரு இடத்துக்கு நான் வந்துட்டேன். அந்த அளவுக்குக் கூட்டங்களிலே தப்பான விஷயங்களை நம்ம ஆட்கள் சொல்றாங்க.

ராஜாராம்: அதான், இதுமாதிரி, யாரோ ஒருத்தர் சொல்லி, யாரோ ஒருத்தர் எழுதி…

பி.கே. சிவகுமார்: சொல் புதிதுல வந்த ஜெயகாந்தன் இண்டர்வியூல ஜெயமோகன்தான் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன் – if I remember correctly.

ராஜாராம்: அதான், இது they just think that he has told.

சாரதா: ஜெயகாந்தன் எழுதாம இருக்கறதுக்குக் காரணம் – he may be thinking that he has contributed enough… and he is not in need of …

சு.ரா.: அப்படிக் கிடையாதும்மா… அப்படிக் கிடையாது.

அண்ணாமலை: He has reached the peak of creative புகழ் என்பது இருக்கட்டும். Does he think that he has reached his creative peak ?

துக்காராம்: அவர் எழுதணும்னு நினைக்கும்போது எழுதுவார்னு நினைக்கறேன்.

சு.ரா.: (சாரதாவுக்கு) அது ஒரு காரணம்னு சொல்ல முடியாதும்மா. Writers-வோட history-ஐ நீங்கப் பார்த்தேள்னா, இந்த brain disorder வருது இல்லையா, அது ஒண்ணுதான் writers-ஐ stop பண்ணும். வேற ஒண்ணுமே Paralytic attack, (இன்னொன்றின் பெயர் சொல்கிறார். சரியாகக் கேட்கவில்லை), வேற எதுவுமே – stop பண்ண முடியாது. எழுத முடியாம ஆயிட்டா, அவர் wife-கிட்டே சொல்வார். wife எழுதுவார். இதுதான் history-ல நடந்திருக்கு. ஆனா, அவனுக்குப் பயித்தியம் பிடிச்சிட்டதுன்னு வச்சிக்குங்க… நிறைய பேருக்குப் பயித்தியம் பிடிச்சும் எழுதிண்டிருக்கா. அது வேற விஷயம் (கூட்டத்தில் சிரிப்பு) ஆனா, உண்மையாகவே genuine-ஆ பயித்தியம் புடிச்சா அவனால எழுத முடியாது. வேற எதுவும், கண்ணு பாக்க முடியாதது, காது கேக்காதது எதுவும் writer-ஐ stop பண்ணவே செய்யாது.

ராஜன் குறை: ஜெயகாந்தனோட சஞ்சாரம் பத்திச் சொன்னீங்க இல்லையா. சில, I mean, அவர் நிறைய விஷயம் வந்து idea வச்சிதான் பண்ணியிருக்கார். ஆனா, ரிஷிமூலம் மாதிரி படைப்பு எல்லாம் ரொம்ப ஒரு …

சு.ரா.: (இடையில்) நான் inspiring-ஆ இல்லைன்னு சொல்லவே வரலை.

சாரதா: (இடையில்) Creative-ஆ இல்லை என்கிறார்.

சு.ரா.: (தொடர்ந்து) நன் சொல்ல வர பாயிண்ட், அவர் கடைசியா எங்கே போய்ச் சேரப் போறார்னு அவர் எழுதறதுக்கு முன்னாடியே தெரியும். நான் இங்கே வரதுக்கு முன்னே – இங்கே ராஜாராம் வீட்டுக்குத்தான் போகப் போறேன்னு – அப்படான்னு நேக்கு தெரியறது மாதிரி – கடைசியா எங்கே போய்ச் சேரப் போறார் – அதே மாதிரி – நான் என்னென்ன விஷயங்களைச் சொல்லப் போறேன் – என்னென்ன விஷயங்களைச் சொல்லாம இருக்கப் போறேன் – இந்த ரெண்டு விஷயமுமே அவருக்கு clear-ஆ தெரியுது. அப்படித் தெரியக் கூடாது writer-க்கு. writer வந்து ரொம்ப புரளணும். அவனை அறியாமலே அவன் உருச் செய்யப்பட்டு – பல விஷயங்களை அவன் சொல்ல வேணும்னு நினைக்காத விஷயங்களைச் சொல்லலாம். சொல்ல நினைக்காத விஷயங்களுக்கு வந்து சேரணும். கடைசில வந்து – அவனுக்கே அவனுடைய கதை வந்து surprise-ஆ இருக்கணும்.

சாமிநாதன்: அப்போ structural problem வராதா உங்களுக்கு ?

சு.ரா.: சீச்சீ.. அதையெல்லாம் deal பண்றதுக்கு வேற அம்சங்கள் இருக்கு. அவனை ஒரு creative writer-ஆ – அவனை guide – பண்ணிட்டுப் போறதுக்கான – இப்ப நீங்க – இப்ப நம்ம short stories ரொம்பப் பிரமாதமா இருக்குன்னு சொன்னேன் இல்லையா – தமிழ்ல உள்ள short stories-க்கு equal-ஆக நான் படிச்ச மத்த நாட்டுல உள்ள short stories-கூட ரொம்ப favorable-ஆ compare பண்ணக் கூடியது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஆனா, தமிழ்ல இருக்கக்கூடிய எந்தக் கதையை translate பண்ணி – இவங்க (அண்ணாமலையை மற்றும் பார்னியைக் காட்டுகிறார்.) – professors கிட்ட கொடுங்க. அதுல ஏதாவது POV சரியில்லை – point of view சரியில்லை. இப்படி நூறு இலக்கணங்கள் வெச்சிருக்காங்க – நாம பழைய பாட்டுக்கு இலக்கணம் வெச்சிருக்கோம் இல்லையா – அதேமாதிரி வெச்சிருக்காங்க. வெச்சிண்டு இது structure சரியில்லை என்பாங்க. ஆனா, கதை எப்படியிருக்கு. கதை effective-ஆ இருக்கு. structure சரியில்லை. இன்னொரு கதை, structure நூறு பர்சண்ட் கரெக்ட். கதையை மனுஷன் படிக்க முடியாது. இந்த ரெண்டு example-ம் இருக்கு. ஆனா – அப்படி இருந்தாலும் கூட – மனுஷன் வந்து இந்த creative இதைத் தெரிஞ்சு கொள்வதன்மூலம் – தன்னுடைய quality improve பண்ண முடியுது. Final point-க்கு அவனைக் கொண்டுவிடும்படி முடியாவிட்டாலும்கூட – அதை அவங்களே சொல்றாங்க – இந்த teachers-ஏ சொல்றாங்க – வரமுடியும்னு சொல்றாங்க. நம்ம short stories ஒண்ணுமே இவங்க சொல்லிக் கொடுக்கறபடி இல்லை. இஷ்டத்துக்குத்தான் இருக்கு. இஷ்டத்துக்குத்தான் இருக்கு. இவங்க எக்கச்சக்கமா மார்க் பண்ணுவாங்க. Teachers. பர்ஸ்ட் பாரால வந்து author-வோட POV எப்படி இருக்கு. செகண்ட் பாரால வந்து கேரக்டரோட POV எப்படி இருக்கு – இப்படி மார்க் பண்ணுவாங்க. நான் வந்து இந்த விஷயத்தைக் கொஞ்சம் படிச்ச பின்னாடி – என்னுடைய கதைகளைத் திரும்பப் படிச்சபிறகு – இவங்களுடைய பாயிண்ட் ஆஃப் வியூவிலே – flaw இல்லாம ஒரு கதைகூட தமிழ்ல எழுதினது இல்ல – என்னுடைய கதைகள் அம்புட்டுலயும் flaw-தான்.

அண்ணாமலை: அதாவது, அவங்க பாயிண்ட் ஆஃப் வியூவில இருந்து… எல்லா இலக்கியமும் அதேமாதிரி இருக்கணும்னு அவசியம் இல்லே.

சு.ரா.: ஆமா. அவங்க பாயிண்ட் ஆஃப் வியூவில இருந்து. இல்லை அவசியம் இல்லைன்னு நானே சொல்றேன். ஆனா, இவர் (சாமிநாதன்) கேட்கிறார். உங்களுக்கு வந்து – இந்த மாதிரி இங்க வந்து சுதந்தரமான பிரயாணம் மேற்கொண்டார்களேயானால், எங்க வேணும்னாலும் போயிடலாமே – இப்ப form-ஐயே கவனிக்காம போயிடலாமேன்னு. ஆனா, அதுக்கான guidance creative writer-க்கு இருக்குன்னு சொல்றேன். எந்தவிதமான சட்டதிட்டங்களுக்கும் ஆட்படாமலேயே அவன் எழுதியும்கூட – ரொம்ப epic-ஆன ஸ்டோரிஸை எழுதியிருக்காங்கன்னு சொல்றேன்.

அண்ணாமலை: அதாவது உள்ளுக்குள்ளே இருந்து வருதுன்னு… வெளியே இருந்து வராம…

ராஜாராம்: அதுல ஒரு சின்னப் பிரச்னை என்னன்னா – நீங்க சொல்றத நான் ஒத்துக்கறேன். ஆனா இது வந்து – நவீன காலம் என்கிற பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு அப்புறம்தான் – இதுமாதிரி form பத்தி, ஒரு creative process பத்தி, ஒரு ஐடியாஸ் form ஆகும். அதுக்கு முன்னால வந்து – we have been just talking. நினைச்சா எழுதறோம். நினைச்சா பேசறோம். அது ஒரு கலை உருவம் என்ற உணர்ச்சி இல்லாமலே, கலையும் இலக்கியமும் வேற வேற விதமா நீங்க சொல்ற மாதிரி வந்துட்டு இருந்திருக்கு. ஒரு தமிழ்நாடு – இந்தியக் கலாசாரத்துல வந்து – நீங்க சொல்ற இந்த வடிவ நேர்த்தில வந்து…

சு.ரா.: (இடையில்) வடிவ நேர்த்தியைச் சொல்லவே இல்லை.

ராஜாராம்: (தொடர்ந்து) இல்ல, கிரியேட்டிவ் ப்ராஸஸ் அப்படாங்கறது வந்து

சு.ரா.: (இடையில்) கிரியேட்டிவ் ப்ராஸஸ்ல தன்னை அறியாமலே dissolve ஆவது…

ராஜாராம்: (தொடர்ந்து) அது வந்து – அதுவந்து ரொம்ப ஆன்மீக லெவல்லே நம்ம இந்திய ப்ராஸஸ்லே இருக்கே தவிர, கதை சொல்றதுக்கு அதுமாதிரி இல்லை. கதை சொல்றது ஒரு சஞ்சாரம். கதை சொல்றது வந்து – ஒரு ecstacy மாதிரி. ஒரு சந்தோஷம் மாதிரி. நான் எது எல்லாம் தோணுதோ அதையெல்லாம் பண்ணுவேன்.. திடார்னு வந்து…

சு.ரா.: (வீடியோ காம்கார்டரைக் காட்டி) இதை வந்து ஆன் பண்ணி வெச்சிருக்கேளா. நான் எக்கச்சக்கமா உளறிண்டிருக்கேன். அதையெல்லாம் record பண்றேளா… (கூட்டத்தில் சிரிப்பு.)

ராஜாராம்: ஆமாம். ரெக்கார்ட்தான் பண்றேன். அழிச்சிடலாம்… அழிக்கறதா இருந்தா. (சு.ரா. சிரிக்கிறார்.)

ராஜாராம்: (தொடர்ந்து) நான் என்ன சொல்றேன்னா – அதுதான் நம்ம கதை கலாசாரம். எனக்குப் பிரச்னை வந்து என்னன்னா – வெங்கடாசலபதி ‘நாவலும் வாசிப்பும் ‘னு ஒண்ணு எழுதியிருக்கார். அதுல கூட மறுபடியும் எனக்கு என்ன பிரச்னைன்னா – மறுபடியும் அவர் நாவலை வந்து – ஐரோப்பிய நாவல்கூட கம்பைன் பண்றாரே தவிர – நம்மகிட்டயும் ஒரு கல்ச்சர் இருக்கு – நம்மகிட்ட கதை இல்லாம ஒரு கல்ச்சர் கிடையாது. எல்லாக் கல்ச்சரிலும் கதை இருக்கு – அதோட ஒரு தொடர்ச்சியா நம்ம நாவலைப் பார்க்க முடியாம, அவரோட ஐரோப்பியப் படிப்பு அவரைப் பண்ணிடுது. நீங்க சொல்ற இந்த நவீன கால உத்வேகம் இது எல்லாம் – முன்னாடி வந்து – பஞ்சதந்திரக் கதைகளை உதாரணமா எடுத்துப்போம் – அருமையான கதைகள் எல்லாமே – ஆனா அந்தக் கதைகள் எல்லாமே இப்படித்தான் எழுதப்பட்டிருக்கு கடைசியில் என்னவா முடியப் போகுதுன்னு – நீதி சொல்றதுக்காகத்தான் எழுதப்பட்டிருக்கு. அந்த நீதியைத் தூக்கி ஒரு ஓரத்துல போட்டுட்டா கூட – அந்தக் கதைகள் அருமையாத்தான் இருக்கு. அந்தக் கதைகள்ல வந்து கதைகளா ஓர் அர்த்தம் இருக்கு. அந்த மாதிரி – ஜெயகாந்தன் வந்து ஒரு நீதியைச் சொல்றார் என்றாலும் – அந்த நீதி வந்து எனக்கு உடன்பாடில்லை – நீதி சொல்றது எனக்கு ரொம்ப உறுத்துது என்றாலும் – அந்த நீதியை – உறுத்தலைத் தூக்கிப் போட்டுட்டா, பல கதைகள் நல்லாத்தானே இருக்கு.

சு.ரா.: (சில நொடிகள் யோசிக்கிறார். பின்னர்) இப்போ ஜெயகாந்தன் வந்து – பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.. ம்ம். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் சிறுகதைகள் எழுதல. கதைகள்தான் எழுதியிருக்கிறார் அப்படான்னு சொன்னால், எனக்கு அது பிரச்னையே இல்லை. ஆனா, அவர் வந்து…

ராஜாராம்: (இடையில்) அப்படியும் வெச்சிக்கலாம். அது…

சு.ரா.: அப்படி வெச்சிக்கிட்டாதான், அந்த writer-க்கு -அது ஒரு பெரிய disqualification.

ராஜாராம்: இல்ல. அது பெரிய disqualification-னு நான் நினைக்கலை.

சு.ரா.: என்னை ஒரு வருஷம் பின்னாடி தள்ளினாகூட நான் கோபப்படுவேன்.

ராஜாராம்: இல்ல. Actual-ஆ, I would think பின்னாடி முன்னாடி என்பது question-ஏ கிடையாது. மறுபடியும் நாம வந்து பழைய விஷயத்துக்கே போயிட்டு இருக்கோம். இப்போ சார்லஸ் டிக்கன்ஸ் வந்து – nineteenth century-ல வந்து he was the greatest writer. Twentieth century-ல ஒரு first fifty to sixty years வரைக்கும் he was discredited. அவர் வந்து என்ன serialதானே எழுதினார். தொடர்கதை எழுதினவர் அவர்னு. I think you can relate to what I am saying. இப்ப வந்து they are rehabilitating him. அவர் வந்து – he is the greatest star story teller. He is the greatest story teller-ன்னு இப்ப வந்து அவரை rehabilitate பண்றாங்க. So, இந்த முன்ன பின்ன என்கிறது வந்து நாம சொல்ல முடியாது. Because its like going back and forth.

பி.கே. சிவகுமார்: பழந்தமிழ் இலக்கியத்தில்கூட அந்த மாதிரி – ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு இலக்கியம் famous ஆகியிருக்கு.

சு.ரா.: ராஜாராம், ஒரு விஷயம் வந்து நான் உங்களுக்குச் சொல்றேன். நீங்க அதைக் கவனிச்சுக்குங்க. அதாவது வந்து – வாழ்க்கையை வந்து எளிமையாப் பார்க்கறது ஒண்ணு. வாழ்க்கையை complex-ஆ பார்க்கறது ஒண்ணு. வாழ்க்கையை எளிமையா பார்க்கவே முடியாது. எளிமையா வாழ்க்கையைப் பார்த்தார்னா – அவரை வந்து – என்னைப் பொருத்தவரை – ரைட்டர் என்று ஒத்துக் கொள்ளவே மாட்டேன். அவர் அம்மா சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கெதுக்கு அது வேணும். அதுதான் எங்க அம்மாவே சொல்லிக் கொடுத்து இருக்காங்களே. வாழ்க்கைதான் வந்து ரொம்ப complex ஆன விஷயம் அப்படாங்கற உணர்வு வந்து தமிழனுக்கு எப்ப வந்தது. எதன் மூலம் வந்தது ? short story-க்கும் story-க்கும் சொல்லப் போனேள்னா, சம்பந்தமே இல்லை. short story வேற, story வேற அப்படான்னு நான் feel பண்றேன்.

ராஜாராம்: இல்ல, தமிழைப் பொருத்தவரைக்கும் – வாழ்க்கையின் சிக்கலை வந்து ஜெயகாந்தன் – எந்தப் பரந்த தளத்தில் (பரந்த தளத்தில் என்பதை அழுத்திச் சொல்கிறார்) deal பண்ணியிருக்காரோ, அந்த அளவுக்கு மத்தவங்க deal பண்ண மாதிரி எனக்குத் தெரியலை. நீங்க ஏன் இப்படிச் சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை.

அண்ணாமலை: நான் புரிஞ்சிகிட்டது – இவர் (சு.ரா.) நினைக்கறது – ஜெயகாந்தன்…

சு.ரா.: சரி, இப்ப கொஞ்சம் intoxicate பண்ணிக்குவோமா ? (கூட்டத்தில் சிரிப்பு)

(கொஞ்சம் சீரியஸாகப் போய்க் கொண்டிருந்த விவாதம் நின்று, சூழல் கலகலப்பாகிறது. உரையாடல் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே, ‘என்ன சாப்பிடுகிறீர்கள் ‘ என்று சு.ரா. உபசரிக்கப்பட்டார். அதற்கு இப்போது அவர் மேற்கண்டவாறு பதில் சொல்கிறார். ‘என்ன சாப்பிடுகிறீர்கள் ‘ என்றபடியே எழுகிறார் ராஜாராம். சூழல் அன்னோன்னியமாக மாறுகிறது. சாரதா எழுந்து போவதைப் பார்த்த சு.ரா., ‘அம்மா, நீங்க எங்க போறீங்க. நீங்கதானே இவ்ளோ நேரம் preside பண்ணிட்டிருந்தீங்க ‘ என்கிறார். கூட்டத்தில் சிரிப்பு. ஓர் இரண்டு நிமிடம் ஆளுக்கு ஆள் பேசிக் கொள்கிறார்கள். கொஞ்சம் இரைச்சல். சு.ரா. தனக்கு என்ன வேண்டும் என்று சொல்கிறார். திடாரென்று யாரோ ஏதோ கேட்கிறார்கள். கேள்வியும் கேட்டவரும் சரியாகப் பதிவாகவில்லை.)

சு.ரா.: நான் வருஷத்துக்கு ஒரு ஒண்ணேகால் கதை எழுதியிருக்கேன். ஒண்ணேகால். அதிலிருந்து பார்த்தீங்கன்னா நான் எவ்வளவு எழுதியிருக்கேன்னு…

சாமிநாதன்: இல்ல சார், டோட்டலா எவ்வளவு எழுதியிருக்கீங்கன்னு கேட்கறார் சார்.

சு.ரா.: டோட்டலா வந்து நான் ஒரு அம்பது வருஷமா எழுதிட்டு இருக்கேன். அறுபது கதைகள் கிட்டே எழுதியிருக்கேன்.

(ராஜன் குறையின் துணைவியாரைச் சு.ரா. யாரென்று விசாரிக்கிறார். அவர் தன் பெயர் சொல்கிறார். சு.ரா. சட்டென்று புரிந்து கொண்டு அடையாளம் தெரிந்து கொள்கிறார். உங்களை எனக்கு நல்லாத் தெரியுமே என்கிறார். ‘எல்லாரும் தெரிஞ்ச ஆட்களா வந்து உட்கார்ந்திருக்கீங்க. நான் எல்லாரும் புதுசுன்னு நினைச்சு வந்திருக்கேன் ‘ என்கிறார். ராஜன் குறை பக்கம் திரும்பி, ‘அப்ப நீங்க ராஜன் குறையா ? நீங்க இங்கே வந்துட்டேளா ? ‘ என்கிறார். ராஜன் குறை ‘ஆமாம் ‘ என்கிறார். அன்னோன்னியமான தொனியுடன், ‘நீங்க அங்கதானே கலாட்டா பண்ணிட்டிருந்தேள் ‘ என்கிறார் சு.ரா. ராஜன் குறையப் பார்த்து. கூட்டத்தில் சிரிப்பு. ராஜன் குறை தான் அமெரிக்கா வந்தது பற்றி, தான் இங்கே செய்து கொண்டிருப்பது பற்றியெல்லாம் சு.ரா.வுக்குச் சொல்கிறார். )

சு.ரா.: இந்த அம்மாவை (மோனிகாவை) – இவங்க வந்து இவரை (ராஜன் குறையை) – marry பண்ணிக்கறதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். இவரை (ராஜன் குறையை) நான் வந்து – இவரைப் பார்த்துப் பேசியதில்லைன்னு நினைக்கிறேன். ஆனா, இவர் பண்ண கலாட்டா எல்லாம் எனக்குத் தெரியும். (ராஜன் குறையிடம் தொடர்ந்து அவரைப் பற்றி, அவர் வசிக்கும் இடம் பற்றியெல்லாம் உரையாடுகிறார். யாரோ சு.ரா.வின் குடும்பம், மகள்கள் பற்றிக் கேட்கிறார்கள். அவற்றுக்குப் பதில் சொல்கிறார்.)

சு.ரா.: (ராஜன் குறையிடம்) நீங்க இப்போ தமிழ்ல எழுதறதே இல்லையா ?

ராஜன் குறை: ரொம்ப இல்லை. இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன் மறுபடியும்.

சு.ரா.: நீங்க எழுதாதது ஒரு பெரிய இதுவா இருக்கு சார். உண்மையைச் சொல்றேன். exaggerate பண்ணலை. நீங்க எழுதாதது ஒரு பெரிய இதை (இடத்தை) create பண்ணியிருக்கு. அப்பப்ப உங்க articles படிச்சிருக்கேன். நீங்க அப்பப்ப எழுதினது ஒரு controversy-ஐ கிரியேட் பண்ணியிருக்கு. அது வந்து தமிழுக்குத் தேவை.

(நண்பர்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றனர். ஒரு இரண்டு நிமிடங்கள் இப்படிப் போகின்றன.)

துக்காராம்: (ராஜன் குறையிடம் ஜாலியாக) …. என்ற பெயரில் (பெயர் தரப்படவில்லை) எழுதுவது நீங்கதானா ?

ராஜன் குறை: இல்லை. அவர் என் பிரெண்ட்தான்.

சு.ரா.: (துக்காராமிடம்) இந்த question-ஐ நீங்க அவர்கிட்டே கேட்கறீங்களே – அதை நான் object பண்றேன். நீங்க ஒரு ரைட்டர் உயிரோட இருக்காரா இல்லையான்னு தெரியாம ஒரு மேட்டரைப் போடவே கூடாது. யாருன்னு தெரியாம போடவே கூடாது. அது ரொம்ப அளவுக்குப் பத்திரிகையைக் கெடுக்கக் கூடிய விஷயம்.

துக்காராம்: அப்படியா!

சு.ரா.: எல்லா விஷயத்தையும் நீங்க போடுங்க. லிபரலா என்ன வேணும்னாலும் போடுங்க. ராஜாராம்கிட்ட இந்த விஷயத்தை இந்தக் கூட்டத்திலே சொல்லணும்னு நினைச்சுட்டு வந்தேன். ஆனா, அந்த ஆள் யார், அவர் எதற்காக எழுதுகிறார், அவர் நோக்கம் என்னன்னு தெரிஞ்சுண்டு…

துக்காராம்: சரிங்க.

சாமிநாதன்: இணையத்திலே அது அந்த அளவு possible இல்லை சார்.

சு.ரா.: possible இல்லைன்னா, possible-ஆ இல்லையான்னு எனக்குத் தெரியாஅது. ஆனா சந்தேகம் வர மாதிரி இருக்கக் கூடாது.

(நாலைந்து பேர் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். ஒன்றும் சரியாகப் பதிவாகவில்லை.)

சு.ரா.: இன்னிக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸஸ். (மோனிகாவைப் பார்த்து) நீங்க இங்க வந்து எத்தனை வருஷமாச்சு ? (மோனிகா பதிலளிக்கிறார்.)

சு.ரா.: (ராஜன் குறையைப் பார்த்து நட்புடன்) உங்களுக்கு அவங்களைத் தெரிஞ்சதைவிடக் கூடுதலா number of years எனக்குத் தெரியும். அதை ஞாபகம் வெச்சுக்குங்க. உங்க wife-தான் ஆனா எனக்கு number of years கூடுதலாத் தெரியும். (ராஜன் குறை சிரிக்கிறார்.)

ராஜன் குறை: அவங்க பிறக்கும்போதே, ஆஸ்பத்திரிக்குப் போய் நான் பார்த்திருக்கேன். (கூட்டத்தில் சிரிப்பு.) ஆனா, உங்களைச் சந்தித்தது, கடிதம் எழுதியது பத்தி எல்லாம் அவங்க சொல்லியிருக்காங்க.

சு.ரா.: அப்படியா.

(ராஜாராம் திரும்ப இருக்கைக்கு வருகிறார்.)

ராஜாராம்: என்ன, திண்ணைல ஏதும் abusive-ஆ நிறைய வருதா ?

சு.ரா.: நான் அதைச் சொல்லலை. இவர் (துக்காராம்) இவர்ட்ட (ராஜன்குறையிடம்) கேட்டார். …. வந்து(பெயர் தரப்படவில்லை) நீங்கதானான்னு. ஒரு பத்திரிகை நடத்தறவங்க அப்படிக் கேட்கக் கூடாது. யாருன்னு identify பண்ண பிறகுதான் நீங்க மேட்டரே பப்ளிஷ் பண்ணனும். அப்படி identify பண்ணாம பத்திரிகை நடத்தறதன் மூலம் ரொம்ப வந்து பத்திரிகையின் status குறையுதுன்னு நான் பர்சனலா feel பண்றேன்.

ராஜாராம்: ப்ராப்ளம் என்னன்னா – இன்டர்நெட்ல வந்து – some people dont want to give their identity. They just want to give ideas. Ideas-தான் important, we are not important-ங்கறாங்க.

சு.ரா.: நான் வந்து என் பேரு சுந்தர ராமசாமின்னு சொல்ல மாட்டேன். என்னுடையக் கதையைப் போடுங்கன்னா, நீங்க என்ன சொல்வேள். சார், தயவுசெய்து உங்கப் பேரை அதுல பொடுங்கன்னு நீங்க சொல்ல மாட்டாங்களா ?

ராஜாராம்: X-ன்னு போட்டு போட்டுடுவோம்.

சு.ரா.: அப்படி நீங்க பண்ணக் கூடாது. அப்படி நீங்க பண்றதாலே, நீங்க பலவிதமான விஷயங்களுக்கு opportunities open பண்ணித் தரீங்க. நான் உங்ககிட்ட சொல்லணும்னு முக்கியமா நினைச்சுட்டு வந்த விஷயம் இதுதான். திண்ணையைப் பற்றிய என் impressions. நான் ரொம்ப deep-ஆ படிக்கறதில்லை. கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து எனக்குப் படிக்கறது கஷ்டம். எல்லாம் எனக்குப் பிரிண்ட்-அவுட் எடுக்கவும் முடியாது. கம்ப்யூட்டரே நான் ரொம்ப லேட்டாக் கத்துண்டவன் நான். எனக்கு என்ன தோணறதுன்னா – நடக்கக் கூடாத சில காரியங்கள் – நடந்திருக்கக் கூடாத சில காரியங்கள் – திண்ணைல நடந்திருக்கு. (இவ்வளவு நேரம், ‘ம் ‘ கொட்டியபடி கேட்டுக் கொண்டிருந்த ராஜாராம், ‘சொல்லுங்க, திருத்திக்கலாம் ‘ என்கிறார்.) (சு.ரா. தொடர்ந்து) அது வந்து – ஆட்கள் வந்து – எனக்கு என்ன சுதந்திரம் இருக்கு – இப்போ நீங்க இந்த country வந்த பிறகு ரொம்ப லிபரலா மாறியிருக்கலாம் – தமிழ்நாட்டுல இருந்தா உங்களுக்கு அப்படி இல்ல – அது பாரதீய ஜனதாவா இருக்கட்டும், காங்கிரஸா இருக்கட்டும், டி.கே.வா இருக்கட்டும் – எல்லாமே opinism உள்ளவங்கதான். discuss பண்ணலாம். நாம திட்டவட்டமா முடிவுக்கு வரவேண்டிய ஒரு காலம் வந்து சேரல. இப்ப இந்த திசைல நாம என்ன செய்யலாம் என்கிற consciousness வந்து எனக்கு ரொம்ப உடன்பாடானது. முழுக்க நூத்துக்கு நூறு உடன்பாடானது. ஆனா, உங்க பத்திரிகையை ஒரு ஆள் வந்து பயன்படுத்திக் கொள்வது வேற. உங்களை ஏமாத்துறது வேற. ஒரு எடிட்டரானால், எந்தக் காரணம் கொண்டும் நீங்க ஏமாறக் கூடாது. அந்த அளவு conscious வேணும். நான் சும்மா வந்து, என் பேரில ஒரு மேட்டரைப் போடச் சொல்றேன். அப்புறம் இன்னொரு மேட்டரை என் friend கிட்ட போடச் சொல்றேன். அவன் என்னைப் பத்தி பிரமாதமா ஒண்ணு எழுதிப் போடுவான். இதுக்கெல்லாம் நீங்க இடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டுல வந்து ஒரு பெரிய ரைட்டரோட மேட்டரை ஒரு சின்ன ரைட்டர் திருத்தமாட்டார் அப்படான்னு நீங்க எழுதியிருந்தீங்க. அதை நான் மறுத்து எழுதினேன். திண்ணை தமிழ்ச் சூழல் பத்திய ஒரு அறியாமைல இருக்குன்னு நான் சொன்ன ஞாபகம். ஒரு பெரிய சீனியர் ரைட்டரோட இதை ஒரு ஜூனியர் ரைட்டர் திருத்த மாட்டார்ன்னு சொந்த name-ல வந்தவரைக்கும்னு சொன்னப்போ, Am I correct ? (Yes என்கிறார் ராஜாராம்), அப்ப நான் சொன்னேன். அப்படிச் சொல்லாதீங்க. அப்படிச் சொன்னீங்கன்னா, உங்களுக்குத் தமிழ்ச் சூழல் என்னன்னே தெரியாது. பெரிய ரைட்டர் மட்டுமில்லை. இருக்கறதிலேயே சாமிநாத அய்யருடைய மேட்டர் கூட நான் திருத்தியிருக்கேன். உ.வே. சாமிநாத அய்யர் மேட்டர் நான் திருத்தியிருக்கேன். தைரியமா திருத்துவேன். அதுக்கு evidence இருக்கு சார். அதுக்கு evidence இருக்கு. இப்போ காலச்சுவடுல நீங்க வரதைப் பாத்தீங்கன்னா, பப்ளிஷிங் சம்பந்தமா, என்னென்ன சரியா இருக்கு என்பது பற்றி – பெருமாள் முருகன் என்ற ஒரு தமிழ் ஸ்காலர் – ஒரு தமிழ் டிபார்ட்மெண்ட்ல head of the department-ஆ ஒரு காலேஜ்ல இருக்கக் கூடியவர் – தொடர்ந்து எழுதிட்டு இருக்கார். அவர்கிட்ட நிறைய சரக்கு இருக்கு. எனக்கு அதோட அடிப்படை தெரியும். எனக்கு அடிப்படை தெரியும்.

ராஜாராம்: இன்டர்நெட்ல பத்திரிகை நடத்துறதுல ஒரு பெரிய ப்ராப்ளம் – ஒவ்வொரு தடவை போடும்போதும் இது யார் எழுதினா – இவங்க நிஜமா – சிலசமயம் அதுக்கப்புறம் நாங்க என்ன பண்ணோம்னா, சில பேர் வந்து, இவர் அண்ணாமலை எங்களுக்கு அனுப்பச் சொன்னார்னு அனுப்பும்போது, we tell them. No, we dont do it. அண்ணாமலையையே அனுப்பச் சொல்லுங்க. இல்லீன்னா, அவர் permission அனுப்பச் சொல்லுங்கன்னு. என்ன பண்றாங்கன்னா, அண்ணாமலை அட் யாஹூ டாட் காம்னு போட்டு, we give permission-னு அனுப்பறாங்க. Then we have to take it at face value. ஏன்னா, நாம personal-ஆ போய்க் கேட்கற அளவுக்கு – நம்ம ஊரா இருந்தா, மதுரைல அண்ணாமலை மேல மாசி வீதில இருக்காரான்னு போய் பார்க்கலாம். போன் போட்டுக் கேட்கலாம். We dont have that kind of luxury here. So, we have to depend. சிலசமயம், அந்த மாதிரி we come to know it is a forgery என்றால், we removed the link to the article. அது ஒரு சவுகரியம் இதுல.

சு.ரா.: சார். உங்களுக்கு prove பண்ண முடியாது சார். நான் எப்படி prove பண்ணுவேன். எனக்கும் wife-க்கும் நடந்த conversation-ஐ ஒருத்தன் – யாருக்கும் – எனக்கும் wife-க்கும் நடந்த conversation-ஐ உங்களுக்கு லெட்டர்ல போடுறான். நான் அப்போ நினைச்சுட்டிருக்கேன். உலகத்திலே நானும் wife-ம் தவிர யாருமில்லைன்னு. நான் முட்டாள் என்பதால் அப்படி நினைச்சுட்டிருக்கேன். ஆனா அவன் ஒட்டு கேட்டிருக்கான். லெட்டர் போடறான். அதிலிருந்து நேக்கு ஒண்ணு தெரியறது. என்னோட personal life தெரிஞ்ச ஆள்தான் இவன்னு. அவனுக்கு உங்க பத்திரிகைல என் பர்சனல் லைப் சொல்றதுக்கான ஒரு பிஸினசும் அவனுக்குக் கிடையாது. நீங்க அப்படி ஒரு editorial policy வெச்சிக்கவும் இல்லை. அதுதான் உங்களோட editorial policy-ஆ இருக்குமானால் எனக்குப் பிரச்னை இல்லை.

ராஜாராம்: இல்ல இல்ல (அது எங்க பாலிஸி இல்லை என்ற அர்த்தத்தில்)

சு.ரா.: நீங்க உங்க editorial policy-ஐ வேற ஒரு level-ல வெச்சிருக்கீங்க. ஆனா, இந்த மாதிரி செய்யறது வந்து…

ராஜாராம்: ஆனா, அது மாதிரி பயன்படுத்திக் கொள்ளும்போது, the problem is we want to edit. நிறைய edit பண்ணிதான் போடறோம். முதல்ல edit பண்ணாம போட்டுட்டு இருந்தோம். ஒரே குப்பையா ஆயிடுச்சு. அப்புறம் edit பண்ணாலும், we are also human. We dont know how to do this. அப்படியெல்லாம் கட் பண்ணி – பலவற்றைப் பெரிய ரைட்டர்ஸூக்குக் கூடத் திருப்பி அனுப்பியிருக்கோம். Please correct and send-ன்னு சொல்லி. Even then வந்து, sometimes we sleep. நீங்க சொல்றதும் உண்மைதான். அதனால்தான், திண்ணைல இதுவரை வந்த authors-க்கு ஒரு பட்டியல் மாதிரி போடப் போறோம். அந்தப் பட்டியல் வந்தவுடனே, எல்லாருக்கும் எழுதி – உங்க ஈமெயில் என்ன, அட்ரஸ் என்ன, போன் நம்பர் என்ன – அதிலே போடப் போறோம் நாங்க – அப்படான்னு எழுதப் போறோம்.

சு.ரா.: இது இப்ப தெரியுது இல்லை. அது உங்களுக்குப் பத்து வருஷத்துக்கு முன்னாலே தெரிஞ்சிருக்கலாமே. ஏன் தெரியலை.

ராஜாராம்: தெரியலையே.

(தொடரும்)

Visit http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

பி.கே. சிவகுமார்


அண்ணாமலை: மிடில் க்ளாஸ்தான். மிடில் க்ளாஸ்தான் மாடலா இருக்காங்க. They think … (நாலைந்து பேர் ஒரே நேரத்தில் பேச முயல்கின்றனர். அண்ணாமலை தொடர்ந்து சொல்வது சரியாகப் பதிவாகவில்லை.)

ராஜாராம்: ஆமாம். மிடில் க்ளாஸ்தான். இப்போ சாமிநாதனை வேலைக்காரி பார்க்கும்போது இவர்மாதிரி நான் வரணும்னா என்ன பண்ணனும்னு – இவர் இங்லீஸ் பேசறார், இங்லீஸ் படிக்கறார் அப்படான்னா – தன் குழந்தைகளும் அப்படி இருக்கணும்னு நெனைக்கும் இல்லையா ?

சு.ரா.: அப்படான்னு நீங்க சொல்றீங்க. எந்தப் ப்ரோகிராமும் நடைமுறைல collapse ஆயிட்டாக்க, மனுஷாள் அதை continue பண்ண முடியாது. நான் இப்போ உங்களை நம்பி இங்கே வரேன். நீங்க எல்லாம் சேர்ந்து என்னை ஒரு மொத்து மொத்திட்டேள்னா, நான் திரும்ப உங்ககிட்டே வரமாட்டேன். (கூட்டத்தில் சிரிப்பு) அந்த அறிவு எனக்கு உண்டு சார். அந்த அறிவு எனக்கு உண்டு. அப்போ – தமிழ்நாட்டுல – குழந்தை தொடர்ந்து இங்லீஸ் மீடியத்துக்குப் போறதுன்னா, அவங்க சைடுல ஏதும் நியாயம் இருக்கான்னு நீங்க கொஞ்சம் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. கருணாநிதி தமிழ் மீடியம் கொண்டு வரணும்கறதுக்குப் பயப்படறார். ஏன்னா, அவருக்கு ஓட்டுப் போயிடுமோன்னு பயமா இருக்கு.

துக்காராம்: அதைவிடப் பெரிய விஷயம் என்ன தெரியுமா ? கருணாநிதி வந்து அப்படிப் பேசிட்டு, தன் பிள்ளைகளை இங்லீஸ் மீடியத்திலயும் ஹிந்தி மீடியத்திலயும் சேர்க்கறதாலதான், மக்கள் அதையே ஒரு tool-ஆ use பண்றாங்க. ‘கலைஞரே புள்ளையை அனுப்பறார். நாங்க மட்டும் ஏன் அனுப்பக்கூடாது ‘ன்னு.

அண்ணாமலை: கலைஞருக்கு மட்டும் இல்லை. பொதுவாகவே தமிழ்நாட்டுல our public posture is different from our private choice. (சு.ரா. சிரிக்கிறார்.) இப்போ private choice-னு வரும்போது கல்யாணமோ, ஜாதியோ எதுனாலும், public-ல ஜாதி வேணாம்னு எல்லாரும் பேசுவாங்க. ஆனா, private life-க்கு வரும்போது வேற மாதிரி. அதே மாதிரி நாங்க சர்வே எத்தனையோ பண்ணியிருக்கோம். அந்த சர்வேல தமிழ் மீடியம் வேணும்னுதான் மெஜாரிட்டி சொல்வாங்க. ஆனால், குறிப்பா உங்க பிள்ளையை எங்கே அனுப்புவீங்கன்னா, வேற மாதிரி பதில் வரும். பொதுவா – தமிழ் மீடியம் வேணுமான்னா, வேணும், வேணும், வேணும். Symbolic-ஆ சொல்லும்போது எல்லாம் ஒத்துக்குவாங்க. ஆனால், private action-னு வரும்போது we behave differently.

முருகானந்தம் & டெக்ஸன்: ஆமா, ஆமா.

சாரதா: In all, it looks like, the mental health is not right. ஒரு ஆரோக்கியமான எண்ணங்களும், ஆரோக்கியமான வாழ்க்கையும் வாழற அளவுக்கு – forget about Tamil – இல்லையோ ? mental health நல்லா இருந்தால் தமிழ்கூட அப்போ நல்லா வருமா ?

அண்ணாமலை: Mental Health-னு நான் சொல்ல மாட்டேன் because I believe every humanbeing is rational. They take rational decisions. அவங்க நினைக்கறது that is true also. English opens many doors. இல்லையா ? அவங்க நினைக்கறது – ஏன்னா அவங்க நம்மளையெல்லாம் பாக்கறாங்க – ‘இவங்க வெளிநாட்டுக்குப் போறாங்க. அங்க போய் பணம் பண்றாங்க. ‘ அதனால இங்லீஸ் இல்லாம இருக்க முடியாது. அது மாதிரி நம்ம புள்ளைகளையும் வளர்த்துடலாம்னு நினைக்கறாங்க. அத நாம மாத்தணும்னா, தமிழ்மூலம் அவங்களுக்கு என்ன economic benefit இருக்கு ? What doors Tamil opens to them-னு ஒண்ணு வரணும். When they see Tamil closes all doors and English opens all doors then they will naturally go for English. I will go, you will go, everybody will go. I mean, man is not self-destructive.

சாரதா: அப்போ நீங்க சொல்றது பார்த்தா, இதுல தப்பு இருக்கற மாதிரி தெரியலையே.

அண்ணாமலை: நான் individual-கிட்டே தப்பு இருக்குன்னு சொல்ல மாட்டேன். நம்ம society-ல தப்பு இருக்கு. Society-ல நம்ம language priority தப்பா போச்சு. அதனாலதான் ஜனங்க பண்றாங்க.

சாரதா: சரி, ஒரு language-ஐ வந்து ஒரு God மாதிரி நினைச்சுப் பயப்படணுமா ? இல்லன்னா, அது ஒரு பெரிய விஷயம்னு நினைச்சு cherish பண்ணிட்டே இருக்கணுமா ? Language is for enjoyment. Enjoyment for mind and soul. So, it touches your soul when communication is about quality issues. அப்படியிருக்க, why are we obsessed with language ?

ராஜாராம்: இல்ல, we are obsessed with language because இங்க வந்து இங்லீஸ் படிக்கறது மூலமா – நம்ம எல்லாக் கல்வியாளர்களும் என்ன சொல்றாங்கன்னா – அவங்க எந்த language-ல natural-ஆ பேசிட்டு இருக்காங்களோ – அந்த language-ல சப்ஜெக்ட் படிக்கும்போதுதான், input அதிகமாகுது, குவாலிட்டி அதிகமாகுதுனு சொல்றாங்க which is proven everywhere. O.K. ? இப்ப இங்க இருக்கறவங்களுக்கு (அமெரிக்கர்களுக்கு) ஜெர்மன்ல படிச்சாதான் புரியும்னு யாரும் ஜெர்மன்ல சொல்லித் தரது கிடையாது. And, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தப்போ எல்லாரும் சொன்னாங்க – ஹிந்தி படிச்சா நிறைய வேலை கிடைக்கும்னு. அதுமாதிரி இங்லீஸ் படிச்சா மட்டுமே எல்லாருக்கும் வேலை கிடைக்கும்னு சொல்றாங்க. This is not the truth. அதுமாதிரி, ஒரு இமேஜ் கிரியேட் ஆகியிருக்கு.

அண்ணாமலை: That is the image created.

சு.ரா.: அப்படியில்லை. ப்ராடிகலா நீங்க அங்கப் பார்த்தேள்னா, ஒருத்தனுக்குத் தமிழ்ல எவ்ளோ ஸ்காலர்ஷிப் இருக்குன்னாலும், அவன் சொஸைடில – தமிழ் சொஸைடில – மதிக்கப்படறதே இல்லை. அவனுக்கு இங்லீசும் தெரியணும். இங்லீஸ்லே எவ்வளவு தெரியும் ? தமிழ் ஸ்காலர்ஸ் அவ்வளவு பேரும், அவங்களுக்கு இங்லீஸ் தெரியலைன்னு பயங்கரமா வேதனைப்பட்டிருக்காங்க. இப்ப கருணாநிதிக்கு உள்ளூர – அவர் வந்து தமிழ்ல ஒரு பெரிய ஸ்காலரா – ரொம்பப் பாராட்டத்தகுந்த விஷயங்கள் உள்ளவர் அவர். ரொம்ப பாசிட்டிவான சைட்ஸ் உள்ளவர். இந்த அம்மாவுக்கு ஒண்ணுமே கிடையாது.

துக்காராம்: அவருக்கு என்ன பாசிட்டிவான சைட்ஸ் இருக்கு ? அப்போ இந்த அம்மாவையும் அப்படிப் பார்க்கலாம் இல்லையா ? இந்த அம்மாவுக்கும் குவாலிபிகேஷன்ஸ் இருக்கே.

சு.ரா.: கருணாநிதியின் நெகட்டிவ் சைட்ஸ் ஒண்ணுமே நான் மறுக்கலை. ஆனா – அவருக்குப் பாசிட்டிவ் சைட்ஸ் நிறைய உண்டு. இந்த அம்மாவுக்கு ஒண்ணுமே கிடையாது.

ராஜாராம்: (துக்காராமைப் பார்த்து) இல்ல, இல்ல. Political-ஆ she has not been in any political activity before MGR christined her.

சு.ரா.: ரொம்பப் பச்சையா சொல்லும்படி என்னை வற்புறுத்தாதீங்க. (சிரிக்கிறார்.) நீங்களே யோசிச்சுப் பார்த்துக்குங்க அந்த அம்மாவோட குவாலிபிகேஷன்ஸ் என்னன்னு.

ராஜாராம்: MGR இல்லைன்னா, அந்தம்மாவுக்கு லைப்பே கிடையாது – பொலிடிகல் லைப்பே கிடையாது.

சு.ரா.: MGR இல்லைன்னானு இல்லை. MGRக்கு இந்த அம்மாமேல ஒரு madness. இல்லையானால் தமிழ் ஹிஸ்டரியே வேற மாதிரி. ஒரு சினிமா ஆக்டருக்கு ஒரு பொண்ணுமேல madness – கிறுக்கு. லவ்வும் ஒண்ணுமே கிடையாது. கிறுக்கு. இந்தக் கிறுக்கு தமிழ் ஹிஸ்டரியை எந்த அளவுக்கு influence பண்ணுது பாருங்க. அப்ப, நீங்க எந்த இடத்திலே இருக்கீங்கன்னு யோசியுங்க.

துக்காராம்: இல்ல, நீங்க சொல்றதை நான் ஒத்துக்க முடியாது.

சு.ரா.: சரி, நீங்க சொல்லுங்க. (சிரிக்கிறார்.)

துக்காராம்: அந்த period-ல வந்து MGR செத்துப்போனப்புறம், ADMK ரெண்டா உடைஞ்சது. ஒண்ணுல ஜானகி சி.எம்.மா இருந்தாங்க. இன்னொன்னுக்கு ஜெயலலிதா லீட் பண்ணாங்க. வோட்டு ரெண்டு பக்கமும் ஈக்வலாத்தான் split ஆச்சி. கொஞ்சம் slight majority ஜெயலலிதாவுக்குக் கிடைச்சது.

பி.கே. சிவகுமார் & ராஜாராம்: இல்ல இல்ல.

பி.கே. சிவகுமார்: ஜானகி ஜெயிக்கவே இல்லை. She was completely washed out.

துக்காராம்: why ?

ராஜாராம்: because ஜெயலலிதா அதுக்கு முன்னாடியே தன்னோட political base-ஐ பில்ட்-அப் பண்ணிட்டாங்க.

துக்காராம்: so, she did something on her own. right ?

ராஜாராம்: No no. She did not do anything socially. Let me explain. Jayalalitha built her political career based on some attributes.

சு.ரா.: ஆமா.

துக்காராம்: அப்போ நீங்க கருணாநிதியையும் அப்படித்தானே பார்க்கணும். Karunanidhi did not build all on his own. He took over from Annadurai. அண்ணாதுரை சாவை வைத்துதானே அவர் முன்னுக்கு வந்தார்.

அண்ணாமலை: கருணாநிதி அரசியலை எடுத்தால் that is based on some ideology – அதை நீங்க ஒத்துக்கறீங்களோ இல்லையோ – it is based on ideology. தனிப்பட்ட முறையில அவர்கிட்ட எவ்வளவோ குறைகள் இருக்கு. தமிழ்நாட்டுக்குக் கவர்ச்சி அரசியலைக் கொண்டு வந்ததில் அவருக்கு முக்கியமான பங்கிருக்கு. ஆனால், இந்தம்மாவுக்கு ideology-னே ஒண்ணும் கிடையாது.

துக்காராம்: அப்படியெல்லாம் கிடையாது. MGR-வோட legacy என்பதைத் தமிழ் மக்கள் ரொம்ப நல்லாவே புரிஞ்சிக்கறாங்க. MGR-வோட கொள்கை என்ன என்பதை நல்லா புரிஞ்சிக்கறாங்க.

அண்ணாமலை: MGR-வோட கொள்கை என்ன ? சொல்லுங்க.

துக்காராம்: நான் சீரியஸா சொல்றேன். நாம வந்து இங்கே elitist-ஆ பேசறோமான்னு எனக்குத் தெரியலை. ஆனா, நான் வந்து ஒரு சாதாரண ஆசாமிகிட்ட போய் பேசினால், அவங்க சொல்றாங்க. ‘MGR-க்கா ஓட்டு விழுது. MGR டான்ஸ் ஆடியதற்காக ஓட்டு விழுதுனு நீங்க நினைச்சால் அது தப்பு என்கிறாங்க. ஏன்னு கேட்டால், கருணாநிதி இருந்திருந்தால் தமிழ்நாட்டைத் தனியாப் பிரிச்சிருப்பார். நிறைய பேருக்கு வந்து – அந்த மாதிரியான ஒரு ஒபினியன் கிடையாது. அதனாலதான் முன்னாடி காங்கிரசுக்கு ஒட்டுப் போட்டவங்ககூட – எல்லாரும் அந்தப் பக்கம்போய் MGR-க்கு ஓட்டு குத்தினாங்க ‘ என்கிறார்.

அண்ணாமலை: கிடையாது. DMK has become a party of upper-caste non-brahmins. So for the lower caste they were looking for a political platform and MGR provided it.

துக்காராம்: இது எல்லாம் இன்னும் நிறைய ரீசன்ஸ். But, MGR-க்குக் கொள்கையே இல்லைன்னு சொன்னால், வேற நான் என்ன சொல்ல முடியும் ? He represented something.

அண்ணாமலை: The question was – evaluating Jayalalitha as a politician.

சு.ரா.: ஆமா

துக்காராம்: அதான், MGRவோட legacy-ஐத்தான் அவங்க திரும்பி பில்ட்-அப் பண்ணிக்கிட்டாங்க.

அண்ணாமலை: The point is that she used it for personal gain.

துக்காராம்: ஏன் கருணாநிதி personal gain-க்குச் செய்யலையா ?

அண்ணாமலை: Karunanidhi also did that.

ராஜாராம்: ஜெயலலிதாவின் கொள்கை கருணாநிதிக்கு எதிரான கொள்கை. அவ்வளவுதான்.

துக்காராம்: இல்லை இல்லை. Thats what you think it is. It is not. கருணாநிதியை எதிர்க்கிற கொள்கை உண்மைதான். ஆனால், அதையும் தாண்டி….

ராஜாராம்: You are wrong. I dont agree. கருணாநிதி வந்து பார்ட்டியை பார்ட்டியா பில்ட்-அப் பண்ணார். இப்பவும்கூட வந்து, கருணாநிதியைத் தலைவரா தேர்ந்தெடுக்கறது தவிர மத்தபடி – there is some inner-party democracy in DMK. They hold their elections. துணைச் செயலாளர், வட்டச் செயலாளர் போஸ்ட்டுக்கு எலெக்ஷன் நடத்தறாங்க. ஜெயலலிதா கட்சியிலே ஒண்ணுமே கிடையாது. ஜெயலலிதாதான் கட்சி.

துக்காராம்: அதிலயும் ஓரளவு நடக்குது.

சு.ரா.: ஒண்ணுமே நடக்காது. இந்தியாவிலேயே பார்ட்டிக்குள்ள ஓரளவாவது டெமாக்ரஸி உள்ள ஒரே கட்சி DMK-தான்.

துக்காராம்: பி.ஜே.பி.கூட கிடையாதா ?

சு.ரா.: பி.ஜே.பி.கூட கிடையாது. பி.ஜே.பி. முன்னாடி இருந்திருக்கு. ஒரு பீரியடுல பி.ஜே.பி.யும். டி.எம்.கே.வும் இதுல ஒரே மாதிரி இருந்திருக்கு. இப்ப இல்லை.

ராஜாராம்: இதுல இன்னொரு கேள்வி. சுந்தர ராமசாமி கிட்ட என்னோட கேள்வி என்னன்னா – நாம பேசறது எல்லாம் அடிப்படையா வெச்சி ஒரு கேள்வி என்னன்னா – ஒரு ஐம்பது வருஷமா தி.மு.க நம்ம வாழ்க்கையை வந்து பாதிச்சிருக்கு. திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம் அப்படான்னு. இதை வந்து இலக்கியப்படுத்தறதுக்கு ஏன் யாருமே பண்ணலை.

சு.ரா.: (தாடியைத் தடவிக் கொண்டே யோசிக்கிறார்.)

சாமிநாதன்: அதை நீங்க glorify பண்ணிக் காமிக்கலைன்னா அடிதான் விழும். நெகட்டிவ்வா காட்டினா அடிவிழும். (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: அது எல்லாம் ரீசன் இல்லை.

ராஜாராம்: (சு.ரா.வைப் பார்த்து) நீங்க சொன்னீங்க இல்லையா disconnect. அந்த மாதிரி ஒரு disconnect நம்ம எழுத்தாளர்களுக்கும் இந்தச் சமூக இயக்கத்துக்கும் நடுவுல இருக்கா… அப்படான்னு நான் கேட்கிறேன்.

சு.ரா.: இருக்கு. நிச்சயமா இருக்கு. முக்கியமா – இந்த – commercial magazines இருக்காங்க இல்லையா – அவங்களைவிட இந்த மாதிரியான போதை சிறுபத்திரிகைகாரங்களுக்கு ஜாஸ்தி to be frank.

ராஜாராம்: ஏன் அதைவந்து, ஒரு பாசிடிவ்வாவோ, நெகட்டிவ்வாவோ அது இலக்கியப்படுத்தப்படலை.

சு.ரா.: அவங்க வந்து – பாருங்க – இந்தச் சிறுபத்திரிகைக்காரன் இருக்கானே – அவன் வந்து நிறைய விஷயங்களைக் கண்டுக்கறதே இல்லை.

ராஜாராம்: அதான் சொல்றேன். ஏன் ?

(தொடரும்)

Visit http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

பி.கே. சிவகுமார்


சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.

டெக்ஸன்: (சாமிநாதனைப் பார்த்து) ஒருவிதத்துல இவர் சொல்றதுலே நியாயம் இருக்கு. இப்போ – ஜெயமோகன் அவரை (கருணாநிதியை) இலக்கியவாதி இல்லைன்னு சொல்லிட்டு அல்மோஸ்ட் சாகப்போனாரா இல்லையா – அந்த மாதிரி. ஓபனா திராவிட இயக்கத்தைப்பத்தி விமர்சனம் பண்ண முடியுமா ? திராவிட இயக்கம் பத்தி புஸ்தகம் எழுத முடியுமா ?

ராஜாராம்: பொன்னீலன் எழுதினார் – புதிய தரிசனங்கள் என்று.

சாமிநாதன்: அவருக்கு வந்து C.P.I பேக்கிரவுண்ட் இருக்கு. பார்ட்டி லைன் பேக்கிரவுண்ட்

ராஜாராம்: ஆனா வந்து – இதுமாதிரி ஒரு இயக்கத்தை – இப்ப நவீன சரித்திர நாவல் என்றால் – அதுதானே வரணும்.

துக்காராம்: ஜெயகாந்தன் அவர் கதைகள்ல கொஞ்சம் கொஞ்சம் hint பண்ணிட்டுப் போறாரு இல்ல ?

ராஜாராம்: ஆமாம். கொஞ்சம் கொஞ்சம் hint பண்ணிட்டுப் போறார். ஆனால், அது ஒரு bloating பண்ணப்படலை.

துக்காராம்: ஜெயகாந்தன் பில்ட் பண்ணும்போதும் ஒரு லும்பன் இமேஜ்தான் பில்ட் பண்றார்.

சாமிநாதன்: ஞான. ராஜசேகரன் பாரதி படம் எடுத்தாரே. அதில் பாரதியைச் சாதாரண மனிதராகக் காட்ட முடிந்தது. பெரியாரைப் பற்றி அப்படி ஒரு படம் எடுக்க முடியுமா ? பெரியாரை ஒரு சாதாரண மனிதராகக் காட்டும்படியான படத்தை எடுக்க முடியுமா ?

துக்காராம்: ஞாநி எடுத்து இருக்காரே, எப்படி இருக்காம் ?

ராஜாராம் & சாமிநாதன்: Glorify பண்ணிதான் எடுத்திருக்கார்.

சாமிநாதன்: சாதாரணமா எடுத்தா அடிவிழும். பிலிமை எரிச்சிடுவாங்க.

டெக்ஸன்: MGR பத்தி ஒழுங்கான புக் எங்க வந்திருக்கு சொல்லுங்க. அவருடைய real history, real influence பத்தி ஏதும் வந்திருக்கா ?

ராஜாராம்: நீங்க MGR-ஐப் பத்தி மட்டும்னு சொல்ல முடியாது. ஒண்ணு தெரியுமா ? எஸ்.எஸ். வாசனைப் பத்தி ஒரு biography தான் எழுதப் போறேன்னு மணியன் announce பண்ணினார் இதயம் பேசுகிறது இதழ்ல. announce பண்ணவுடனே next issue-ல வரப்போறதில்லைன்னு வந்திடுச்சு. என்னன்னா …. (பெயர் தரப்படவில்லை) கூப்பிட்டு அவரை மிரட்டியதாகத் தகவல். Everybody has a darker side. அவர் வாழ்க்கைல என்ன நடந்துச்சு என்று தெரியாது இல்லையா ?

சு.ரா.: வாசன் லைப்ல நிறைய உண்டு.

சாமிநாதன்: ஜெமினி ஸ்டுடியோவைப் பத்தி எழுதியதால்தான் அசோகமித்ரனுக்கு வந்து ஆனந்தவிகடன்லே சான்ஸே கிடைக்காது. போட மாட்டாங்க. உண்மைதானே சார் அது ?

சு.ரா.: அது எனக்குத் தெரியாது. இருக்கலாம். தமிழ்நாட்டைப் பொருத்தவரைக்கும் நீங்க என்ன சொன்னாலும், அது உண்மையாக இருக்கலாம். (கூட்டத்தில் சிரிப்பு. சு.ரா.வும் சிரிக்கிறார்.)

அண்ணாமலை: ராஜாராம் சொன்னது – ஆட்சியைப் பற்றியோ கட்சித் தலைவர்களைப் பற்றியோ கதைகள் வரவேண்டுமென்பதில்லை. அவை மக்களுடைய வாழ்க்கையை எந்த அளவு பாதித்தது ? பலபேருடைய வாழ்க்கையைப் பாதிச்சிருக்கு. social attributes எவ்வளவோ மாறியிருக்கு. அது கதைகள்ல வரலையே.

ராஜாராம்: ஆமாம்.

சாமிநாதன்: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது – நிறைய பேரு தீக்குளிச்சாங்க இல்லையா ? தீக்குளிச்ச ஒரு family மட்டும் trace பண்றோம்னு வச்சிக்குங்க. இந்த மாதிரி bread winner செத்ததால, அவங்க என்னென்ன கஷ்டப்பட்டாங்க – இன்னைக்கு என்ன நிலையிலே இருக்காங்க என்பதை trace பண்ணி, அவர்கள் நன்றாக இல்லையென்றால் – அதைக் கதையாகவோ படமாகவோ எடுக்கிறோம் என்றால் – அதை திராவிட இயக்கம் விடுவாங்களா ?

ராஜாராம்: விடுவாங்களா என்பது கேள்வியே கிடையாது. ஏன்னா – அதைவிடவும் inflammatory – infact – திராவிட இயக்கத்தை எதிர்த்து எடுத்தீர்கள் என்றால் – அதை சப்போர்ட் பண்றதுக்கு ஜெயலலிதா மாதிரி ஆட்கள் இருக்காங்க. It was not the reason. இவர் (சு.ரா.) சொல்றமாதிரி நம்ம உலகத்தை ரொம்பக் குறுக்கிக்கிட்டு, வெளியே போகும்போது நாம என்னதான் கருணாநிதி, ஜெயலலிதா பற்றிப் பேசினாலும், அப்புறம் கருணாநிதிக்கு ஓட்டுப் போட்டாலும், சிறுபத்திரிகை உலகத்துக்குள் வரும்போது ஒரு சிறுகூட்டுக்குள் அடைஞ்சிட்டோம் அப்படாங்கறதுதான் உண்மை.

சு.ரா.: அவங்களுக்கு (சிறுபத்திரிகைகாரங்களுக்கு) ஜெயகாந்தன்னு ஒரு ரைட்டர் இருக்கார் என்பதே அவங்களுக்குத் தெரியலையே இன்னும். (கூட்டத்தில் சிரிப்பு.) இது பாருங்க. சிறுபத்திரிகைகளின் வளர்ச்சியும், அவர் வளர்ச்சியும் ஒரே காலத்தில் நிகழ்ந்தது தமிழ்ல. இவங்க கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டு வராங்க. அவரும் ஒரு பெரிய ரைட்டரா டெவலப் ஆயிட்டே வரார். ஆனா, அவரை யாரோ தீர்மானிச்சாங்க. நாம அவரை consider பண்ண வேணாம்னு. எங்க எந்தச் சதிகாரக்கூட்டம் அப்படித் தீர்மானிச்சதுன்னு தெரியலை (கூட்டத்தில் சிரிப்பு) ஆனால், அதைப் பேசக்கூடாது என்பதிலே எல்லாருக்கும் ஒரே aimதான் இருக்குது.

ராஜாராம்: அப்படியா ?

சு.ரா.: ஆமாம். எங்க சிறுபத்திரிகைல ஏதும் புக் ரிவ்யூஸ் இருக்கா. இல்ல, ஏதும் சீரியஸ் ஆர்டிகிள்ஸ் இருக்கா ?

ராஜாராம்: அதுக்கு ரீசன் சிறுபத்திரிகையுலகம் has duality. அதாவது, ரெண்டு உலகம் இருக்கு. கமர்சியல் உலகம். சிறுபத்திரிகை உலகம். ரெண்டுக்கும் நடுவுல காமன் கிரவுண்ட்ஸ் கிடையாது. ‘அவர் வந்து வர்த்தக உலகம். சிறுபத்திரிகை உன்னதமான எழுத்து ‘ன்னு நினைச்சு, விட்டுட்டாங்க.

சு.ரா.: சார், அப்படான்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க. இதைத்தான் நான் இன்டாக்ஸிகேஷன் என்கிறேன். (கூட்டத்தில் சிரிப்பு) என்னைத் தேடி ஒருத்தன் வரான்ங்க. நீ ஏன் என்னைத் தேடி வந்தாய்னு கேட்டேன் நான். கேட்பேன் நான். எதுக்காக் என்னைத் தேடி வராய்னு கேட்டா அவன் சொல்லுவான். தான் ஜெயகாந்தனைப் படிச்சேன் என்கிறான். ஜெயகாந்தனைப் படிச்ச காரணத்தினால்தான் என்னைத் தேடி வரேன் என்கிறான். ஜெயகாந்தன் வழியாத்தான் என்கிட்ட வரேன் என்கிறான். அப்புறம் நான் எப்படி அவனைக் கன்சிடர் பண்ணாம இருக்க முடியும் ?

ராஜாராம்: நீங்க சொல்றது எனக்குப் புரியுது. நான் என்ன சொல்றேன்னா – ஜெயகாந்தன் மூலமா உங்ககிட்ட வந்தவன் – அவனுக்குச் சிறுபத்திரிகைல – சுந்தர ராமசாமி தவிர – மத்தவங்க மேல – அதேமாதிரியான அபிப்பிராயம் இருக்குமான்னு எனக்குத் தெரியாது.

சு.ரா.: சார், ரொம்பப் பேரு – எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் – இந்த சீரியஸ் லிட்டரேச்சருக்கு வந்தவங்க – ரொம்ப ஆட்கள் – இந்த ஜெனரேஷன்ல – இப்ப அவங்களுக்கு ஐம்பது ஐம்பத்தைஞ்சு வயசு ஆயிடுச்சு – அவங்களுக்கெல்லாம் இன்னும் இருபது இருபத்தைஞ்சு வயசுன்னு நான் நினைச்சுட்டிருக்கேன் – அவங்க எல்லாருமே இந்த சீரியஸ் லிட்டரேச்சருக்கு வரதுக்கு முக்கியமான காரணம் ஜெயகாந்தன்தான்.

ராஜாராம்: ஆமாம். ஜெயகாந்தன்தான்.

சு.ரா.: இந்த ரெண்டுக்கும் நடுவுல (வர்த்தகப் பத்திரிகைக்கும் சிறுபத்திரிகைக்கும்) ஒண்ணை அவர் கிரியேட் பண்ணார். அப்புறம் ஒருநாள் – ஒரு டைம்ல – அவர் போட்ட சாப்பாடு இவனுக்குக் காணல. அவன் பாட்டுக்குத் தன்னால இங்க வந்துட்டான்.

சாமிநாதன்: சுஜாதா இதே மாதிரி ஒண்ணும் கிடையாதா ?

சு.ரா.: சுஜாதா ஒண்ணும் கிரியேட் பண்ணலை. சும்மா சொல்லுவார். அவருக்குத் தெரியும். அவர் மாடர்ன் இலக்கியமும் படிச்சிருக்கார். பழைய இலக்கியமும் படிச்சிருக்கார். அவர் படிக்காத எதுவுமே கிடையாது அப்படாங்கறதுக்காக அவர் சொல்லுவார். ஆனா, இவர் (ஜெயகாந்தன்) கிரியேட் பண்ணி வெச்சிருக்கார். ஒரு நூத்தம்பது கதை கிரியேட் பண்ணிருக்கார். கதையைக் கிரியேட் பண்ற நேரத்திலேயே ஒரு அஞ்சு லட்சம் ஆறு லட்சம் வாசகர்கள் அதைப் படிக்கறாங்க. அது இன்னொரு சங்கதி. அப்புறம் இன்னொன்னு – யாருமே அதைப் பொழுதுபோக்காப் படிக்கலை. உணர்ச்சிவசப்படறாங்க. ஜெயகாந்தனுக்கும் ரீடர்களுக்கும் எமோஷனலா ஒரு கான்டாக்ட் இருக்கு. சுஜாதா வந்து ஒரு என்டர்டெயினர்தான். படிப்பான். நாளைக்குத் தூக்கிப் போட்டுட்டு அவன் பாட்டுக்குப் போவான். இங்க அப்படியில்லை. உடனே, அந்த விஷயத்தோட அவன் சம்பந்தப்படறான். (கொஞ்சம் இடைவெளிவிட்டு) எப்படித் தமிழச்சிங்க வயசானதுக்கு அப்புறம் குழுந்தைங்க பெத்துக்கலாம்னு எப்படி ஜெயகாந்தன் சொல்றார் – பெத்துக்கிட்டு இருக்கா அது வேற விஷயம் – ஆனால், அவர் எப்படிச் சொல்லலாம். (சிரிக்கிறார்.)

ராஜாராம்: (சிரித்துக் கொண்டே) பெத்துக்கலாம். ஆனால் சொல்லக் கூடாது.

சு.ரா.: பெத்துக்கலாம். சொல்லக் கூடாது. (சிரிக்கிறார்.) இந்த மாதிரி அவரோட ஒவ்வொரு கதையும் ஒரு controversy-ஐ கிரியேட் பண்ணியிருக்கு. (கொஞ்சம் இடைவெளிவிட்டு) எனக்கு பர்சனலா அவர் நல்ல ரைட்டர் என்ற அபிப்ராயம் கிடையாது. நான் அதைச் சொல்லிடறேன். But, tamil society-ல யார் யாரு influence பண்றாங்க, யார் யாரு என்னென்ன காரியங்கள் செய்யறாங்க என்பதுபற்றி, சிறுபத்திரிகைக்காரங்க எந்தவிதமான இன்டாக்ஸிகேஷன்ல இருக்காங்க அப்படாங்கற விஷயத்துக்காகத்தான் இதைச் சொல்றேன்.

ராஜாராம்: இது ஏன் சொல்றீங்க. அவர் ஏன் நல்ல எழுத்தாளர் இல்லைன்னு சொல்றீங்க.

சு.ரா.: அது வந்து சார் – முதல்ல வந்து – ரொம்ப opinionated அவர். அவருக்கு வந்து – ஒரு சுதந்தரமான சஞ்சாரமே கிடையாது. கிரியேட்டிங் என்கிற ப்ராஸஸை வந்து – நீங்க ஒரு சுதந்தரமான சஞ்சாரத்துக்காக – அதுக்காக நீங்க எல்லாமே சுதந்தரமா போய்விடலாம் என்ற அர்த்தம் இல்லே – but நீங்க உங்களை டிஸ்கவர் பண்றீங்க. உங்களோட உண்மையான அபிப்ராயம் என்ன என்று நீங்க டிஸ்கவர் பண்றீங்க. அதற்கான ஒரு ப்ராஸஸை மேற்கொள்றீங்க. இந்த விஷயமே அவர்கிட்டே கிடையாது. அவர் வந்து – ஏற்கனவே society-ல இருக்கக் கூடிய பலவகையான அபிப்ராயங்களை – பல முக்கியமான ஆட்களோட அபிப்ராயங்களைக் கதையா – ஐடியாஸை கதையா transform பண்ணறது என்கிறது எனக்கு ஒத்துக்கறது இல்லே. எனக்கு எக்ஸ்பீரியன்ஸ், இமேஜினேஷன் எல்லாம் எனக்கு முக்கியமான விஷயம். அதன்மூலம் அவன் அடையக்கூடிய – அவனுக்கே தெரியாமல் அவன் அடையக்கூடிய – அவனுக்கே தெரியாமல் அவன் அடையக்கூடிய விஷயங்கள் இருக்கே – அதெல்லாம் ரொம்ப முக்கியமான விஷயம். அதுதான் கிரியேட்டிவ் ரைட்டருடைய முக்கியமான குவாலிட்டி. அந்தக் குவாலிட்டி அவர்கிட்ட இல்லை. social-ஆ அவர் ரொம்ப நல்லா function பண்றார். அதைப் பத்தி நான் question பண்ணல. அவருடைய ஐடியாஸ் எல்லாம் question பண்ண முடியாது.

சாமிநாதன்: அந்த மாதிரி தமிழ்ல எத்தனைபேர் இருக்காங்கன்னு சொல்றீங்க மாடர்ன் ரைட்டர்ஸ்ல.

சு.ரா.: அவரை மாதிரியா ?

சாமிநாதன்: இல்லை இல்லை, நீங்க சொல்ற கிரியேட்டிவ் ரைட்டர் மாதிரி.

சு.ரா.: எப்பவுமே – எல்லாத் தேசங்களிலுமே – number of writers ரொம்ப அதிகம் இருப்பாங்க. நல்ல ரைட்டர்ஸ் இருக்காங்களே, அது எல்லாத் தேசங்களிலும் குறைவுதான். இந்தக் country-ல கூட பார்க்கலாம். நல்ல ரைட்டர்ஸோட எண்ணிக்கை ரொம்பக் குறைவுதான் (பெண்கள் பக்கம் பார்த்து) அம்மா பேசிட்டு இருக்கும்போது சொன்னாங்க. தமிழர்களுக்குத் தமிழர் என்ற உணர்வு இருக்கா, தமிழ் என்ற உணர்வு இருக்கான்னு. அப்படி இருக்காது. பெரும்பாலான தேசங்களில், அவாளுக்கு அப்படி இருக்காது. ஆனா, அந்த சொஸைடில இருக்கக்கூடிய முக்கியமான குரூப்ஸ் – language கூட சம்பந்தப்பட்டவர்கள் – அவங்க எப்படி இருக்காங்க. அவங்க இது என்ன என்றுதான் நாம ஆராயணுமே ஒழிய, நீங்க சந்தைக்குப் போனா அவங்ககிட்ட தமிழைப் பத்திப் பேச முடியாது. அவங்களுக்கு அது தெரியாது. (கொஞ்சம் இடைவெளிவிட்டு) இப்ப நான் சொன்னேன். இந்தக் கன்ட்ரில ரொம்ப பிஸிக்ஸ் பத்தி அற்புதமான புக்ஸ் வருது. நீங்க மீட் பண்ற எந்த அமெரிக்கன் கிட்டயாவது கேளுங்க. அந்த ரைட்டரோட எக்ஸிஸ்டென்ஸ்-ஏ அவருக்குத் தெரியாது. அப்படி ஒருத்தர் இருக்காருன்னே அவருக்குத் தெரியாது. அது ரொம்ப நேச்சுரல்.

ராஜாராம்: ஆமாம். நேச்சுரல்.

சு.ரா.: (தொடர்ந்து) ஆனா ஒரு விஷயம் – அதை அவர்கல் பேப்பர்பேக்கா போடும்படியாகவும், அதை வந்து ரீ-பிரிண்ட் பண்ணும்படியாகவும் ஏதோ ஒரு காரியம் நடந்திட்டிருக்கு. அதை யாரு படிக்கிறான்னு தெரியாது. நான் மீட் பண்ற அவா ஆட்கள் யாருக்குமே – அமெரிக்கன்ஸ் யாருக்குமே – சயின்ஸ்லயோ லிட்டரேச்சரிலோ இன்ட்ரஸ்ட் உள்ள ஆட்களை நான் மீட் பண்ணதில்லை. (கூட்டத்தில் சிரிப்பு) ஆனால், இந்த மாதிரி புஸ்தகங்கள் தொடர்ந்து விக்கணுமானால், சொஸைடில எங்கேயோ ஒரு நீட் இருக்கு.

முருகானந்தம்: யெஸ். ரீடர்ஷிப் இருக்கு.

அண்ணாமலை: நடுவுல இருக்கிறது வந்து – அதுல கல்ச்சர்ஸ் வித்தியாசப்படற மாதிரி இருக்கு. தமிழ் கல்ச்சரிலே, சராசரி – இந்த average-ல வர்றவங்களுக்கு – they are closer to the bottom than to the top. இந்த மாதிரி சொஸைடில (அமெரிக்கா) அல்லது ஈரோப்பியன் சொஸைடில இதைவிட அதிகமா நாம் பார்க்கும்போது – அவங்க thye are little up – closer to the top. அதனாலதான், இந்த மார்க்கெட் function ஆவுது.

சு.ரா.: ஆமா கரெக்ட். நீங்க சொல்றது ரொம்ப absolutely கரெக்ட்.

அண்ணாமலை: தமிழ்நாட்டுல அது (closer to bottom than top) எப்படி வந்ததுன்னு தெரியலை. Why they have brought down rather than keeping up ?

சு.ரா.: அந்த consiciousness இருக்கு இல்லையா. நான் வந்து என் ஆர்ட்டிகள்ஸ்ல எல்லாம் இந்த விஷயத்தைத் திரும்பத் திரும்பத் திரும்ப சொல்றேன். அதாவது – தமிழ்நாட்டுல மணியனுடைய புக்ஸ் நிறைய விக்குது இல்லைன்னா கல்கியோட புக்ஸ் நிறைய விக்குது. இதைப்பத்தி questions-ஏ இல்லை. அப்படித்தான் எல்லா ப்ளேஸஸ்லயும் விக்கும். கேரளாவுல நீங்க பார்த்தீங்கன்னா – ஒரு பத்திரிகை 15 லட்சம் காபி விக்குது – கேரளாவுல maximum. மங்களம்னு. குப்பை. அதை ரேஷன் கடைலதான் போட்டு வெச்சிருப்பான். ரேஷன் கடைல அந்த ஒரு பத்திரிகை மட்டும்தான் இருக்கும். வேறெந்தப் பத்திரிகையும் ரேஷன் கடைல கிடையாது.

ராஜாராம்: (இடையில்) ஏன் அது ?

சு.ரா.: (தொடர்ந்து) ஏன்னா, அரிசி வாங்கறவங்க, உளுந்து வாங்கறவங்க அதையும் வாங்குவாங்க. அது உண்மையாகவே grocery ஐட்டத்துல ஒண்ணு. (கூட்டத்தில் சிரிப்பு) ஆனால், நீங்க சீஃப் மினிஸ்டரை பார்த்துப் பேசுங்க, ரேடியோ ஸ்டேஷன்ல இருக்கக் கூடிய ஒரு ஆபிசர் அவரைப் பார்த்துப் பேசுங்க – ஒரு காலேஜ் ப்ரொபசர் பார்த்துப் பேசுங்க – அவர் கண்ட கண்ட குப்பை எல்லாம் படிக்கக் கூடியவர் – அவர் சொல்லுவார். ‘இதையெல்லாம் நான் படிக்கறேன். ஆனா எங்க லாங்வேஜுல தகழிதான் முக்கியம், எங்க லாங்வேஜுல பஷீர் தான் முக்கியம் ‘ அப்படான்னு – சீஃப் மினிஸ்டரிலிருந்து கீழேவரை சொல்லுவான். இந்த consiciousnessதான் தமிழ்ல கிடையாது. தமிழ்ல நீங்க வந்து – ஆல் இந்தியா ரேடியோல போனீங்கன்னா – அங்க இருக்கறவங்க சொல்வாங்க – யாரெல்லாம் முக்கியமான ரைட்டர்ஸ்னு – இதே மாதிரி சீஃப் மினிஸ்டர் கிட்டப் போனாலும் – சீஃப் மினிஸ்டர்தான் உங்களுக்குத் தெரியுமே – அவங்க செலக்ஷன்ஸ் எப்படியிருக்கும்னு – ஜெயலலிதா சீஃப் மினிஸ்டரா இருந்தாலும் சரி, கருணாநிதி சீஃப் மினிஸ்டரா இருந்தாலும் சரி – அவங்களுடைய பெஸ்ட் புக்ஸ் செலக்ஷன் எப்படியிருக்கும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அங்க இருந்து ஆரம்பிச்சி கீழே வரைக்கும் வேல்யூஸ் பத்தின consiciousness-ஏ இல்லை. அதுதான் விஷயம்.

அண்ணாமலை: நான் செக்கோஸ்லேவியாவுக்குப் போயிருந்தேன். அங்கே தமிழ் சொல்லித் தராங்க. அந்த மாணவர்களைப் பார்த்து நான் பேசிட்டு இருந்தபோது – அவங்களுக்குத் தமிழ் படிக்கணும்னு ரொம்ப ஆசையிருக்கு. தமிழ்நாட்டுக்குப் போயிருந்திருக்காங்க. போயிட்டு அங்க அவங்களுக்கு இருக்கற நண்பர்கள் – யார் அவங்களுக்குத் தெரிஞ்சவங்களோ – தமிழ் ஸ்காலர்ஸ் பார்த்து – எந்த மாதிரியான புக்ஸை நாங்க படிக்கணும்னு கேட்டபோது – அங்கே பலபேர் ரெகமண்ட் பண்ணது வைரமுத்து, சுஜாதா, …

சு.ரா.: கரெக்ட்.

அண்ணாமலை: இதை வந்து அவர் பெருமையாச் சொன்னார். நான் அவங்களோட published எல்லாமே வாங்கிட்டு வந்துட்டேன்னு. So, நாம average தமிழன்கிட்டப்போய் என்ன படிக்கணும்னு கேட்டா, சொல்ற யோசனைமாதிரிதான் எல்லாரும்…

சு.ரா.: அதே நீங்க ஒரு மலையாளியைக் கேட்டாங்கன்னா, அவன் என்ன வேணா படிக்கட்டும். தகழியைச் சொல்வான். பஷீரைச் சொல்வான். அப்படித்தான் பண்ணுவான் அவன். அவனுடைய லாபிவந்து – இன்னைக்கு டெல்லில வந்து – actual-ஆ நீங்க பார்த்தீங்கன்னா – ரொம்ப ஸ்ட்ராங்க். மலையாளிஸ் லாபி ரொம்ப ஸ்ட்ராங்க். தமிழன் கிட்டயே போக முடியாது.

ராஜாராம்: ஆனா, மலையாளத்துல நான் translation-ல படிச்ச வரைக்கும் – வைக்கம் முகம்மது பஷீர் தவிர – மத்தவங்களை – ரொம்ப மிகச் சிறந்த – ஒரு மெளனி மாதிரியோ, லா.ச.ரா. மாதிரியோ, தி. ஜானகிராமன் மாதிரியோ இல்லை உங்களை மாதிரியோ (சு.ரா.வைச் சொல்கிறார்) …

சு.ரா.: கிடையவே கிடையாது. தமிழ் short stories இருக்கு இல்லையா ? தமிழ் short stories பத்தி என்னுடைய ஜட்ஜ்மெண்ட் – பர்சனல் ஜட்ஜ்மெண்ட் – world-ல best short stories create பண்ண country-ல ஒண்ணு தமிழ். தமிழ் மட்டும்தான்னு நான் சொல்லலை. அப்படிச் சொல்லக்கூடிய ஆட்கள் இருப்பாங்க. ஆனா, தமிழும் அப்படிப் பண்ணியிருக்கு. ஆனா, ஷார்ட் ஸ்டோரில நீங்க பெரிய மாஸ்டர்ஸ் என்பதை உலகத்தில கேரளால முதற்கொண்டு அக்சப்ட் பண்ண மாட்டான். கர்நாடகால பண்ண மாட்டான். தெலுகுகாரன் பண்ண மாட்டான். அப்புறம் world-la அக்சப்ட் பண்ற question-ஏ கிடையாது.

அண்ணாமலை: இதனால effects-ம் இருக்கு. இப்ப நீங்க hindi translation-ஐப் பார்த்தீங்கன்னா – எந்த மாதிரி வொர்க்கை translate பண்றாங்க – கன்னடத்துல ஒரு translation பார்த்தா – அதைத்தான் மத்தவங்க ரெகமண்ட் பண்றாங்க.

துக்காராம்: இல்லீங்க. இவங்க கொடுக்கற சாகித்ய அகாடமியையே அந்த மாதிரி ஒரு குப்பைக்குத்தான் கொடுப்பாங்க. கொடுத்ததைத்தான் அவங்க translate பண்ணுவாங்க. translate பண்ணதைப் படிச்சிட்டு அவன் என்ன சொல்லுவான். ‘இது என்ன குப்பையா இருக்கு. ஏதோ கொடுக்கணும்னு கொடுத்திட்டான் போல ‘

சு.ரா.: ஆங். இருங்க. இங்க வந்து சாகித்ய அகாடமி நிறுவின காலத்தில் இருந்து – இன்னிய வரையிலும் – ரொம்ப பெரிய மாஸ்டர்ஸ் இருக்காங்க கேரளாவுல – எல்லாரும் ஒத்துக் கொள்ளக் கூடிய – ஓரளவு பெட்டர் ரைட்டர்ஸுக்கு விருது போயிருக்கு. ஒரு தேர்ட் ரேட் ஆள் இதுவரை அந்தப் பரிசை வாங்கியதே இல்லை. ஏன் என்பதை நீங்க யோசிக்க வேணும். அதுதான் முக்கியமான விஷயம். (கொஞ்சம் இடைவெளிவிட்டு) அங்க வேல்யூஸை காப்பாத்துறாங்க.

அண்ணாமலை: அது votingதான். Its more a cultural thingதான். Not just political.

ராஜாராம்: Let me go back. Still I am not able to understand your answer about Jayakanthan. இப்போ அது வந்து – எக்ஸ்பீரியன்ஸ்னா …

சு.ரா.: நான் என்ன சொல்றேன்னா – கிரியேஷன்க்கும் ரிப்ளக்ஷனுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. You can reflect many things. அது வந்து சொஸைடியை ரொம்ப அளவுக்க்குப் பாதிக்கவும் செய்யுது. இப்போ, பாரதியாரே – நிறைய பழசு வந்து ரிப்ளக்ஷன்தான். ஏன்னா பாரதி emerge ஆன பீரியட்ல – ஜாதிக்கு எதிரா மனோபாவங்கள், equality சம்பந்தப்பட்ட – ஏன்னா கம்யூனிசம் என்கிற பிலாசபி உலகத்துல இருக்கு – இந்த மாதிரி தாட்ஸ் எல்லாம் சொஸைடில டெவலப் ஆக ஆரம்பிச்சிடுச்சு. இதுக்கெல்லாம் அவர் பல உருவங்களைக் கொடுக்கறார். ஆனா, அவருக்குச் சொந்தமான ஒரு பர்சனாலிட்டி – ஒரு பாட்டுல – குறிப்பா – குயில்லயோ அல்லது வேற ஒரு பாட்டிலயோ வரது. அதை வச்சிதான் – பாரதியை ஜட்ஜ் பண்றோம்.

ராஜாராம்: அப்படி ஒரு பர்சனாலிட்டி ஜெயகாந்தன்கிட்ட எந்தப் படைப்பிலும் வரலையா ?

சு.ரா.: எனக்கு வந்து தெரியலை. தெரியலை. அதனால வந்து நான் என்ன நினைக்கிறேன்னா – இப்போ நுஃமான் இருக்காரே.. அவர் வந்து உங்களுக்குத் தெரியும். (தெரியும் என்கிறார் ராஜாராம்). அவர் வந்து leftist. leftist-னா தமிழ்நாட்டில் லெப்ட் என்று சொல்லக்கூடிய ஆட்கள் எல்லாம் left-ஏ இல்லை. (கூட்டத்தில் சிரிப்பு) இவர் உண்மையான லெப்டிஸ்ட். இப்போ சாமிநாதனுக்கு இந்தப் பரிசு கனடால கொடுத்ததுல – உண்டு இல்லைன்னு பாத்துடணும்னு என்பதில் அவர் ரொம்ப keen-ஆ இருக்கார். அது அவரோட ஹானஸ்டியைக் காட்டுது. அவர் வந்து – he is also a Marxist. So literature வந்து – இந்த சொஸைடிக்கு என்ன contribute பண்ண முடியும்னு பத்தி அவருக்கு consciousness உண்டு. அவர் சொல்றார். என்கிட்டே இல்லை. ஒரு இண்டர்வியூவில – ‘எனக்கு அவரோட (ஜெயகாந்தனோட) எந்தக் கதையும் படிக்க முடியல. என்னால படிக்கவே முடியல ‘ன்னு. இந்த எக்ஸ்பீரியன்ஸ் வந்து எனக்கு ஏறத்தாழ இருக்கு. நாளைக்கு இந்த எண்ணிக்கை கூடுமேயொழிய குறையாது.

அண்ணாமலை: நீங்க முன்னாடி சொன்னமாதிரி – அது ஒரு படியா இருக்கலாம் இல்லையா ?

சு.ரா.: நிச்சயமா.

அண்ணாமலை: ரீடர்ஸ் வந்து கல்கில ஆரம்பிச்சு, ஜெயகாந்தன் வழியா மேல போறதுக்கு – அது ஒரு வகையிலே வழி கொடுக்குது.

சு.ரா.: ஆமாம். அதை நீங்க விட்டாக்கூட – social thoughts-ல, social சம்பந்தமா நமக்குப் பல விஷயங்களில் awareness வரதுக்கு அவருடைய பல கதைகள் பயன்பட்டிருக்கு. Students-க்குப் பயன்பட்டிருக்கு. Girls-க்குப் பயன்பட்டிருக்கு. ஏன்னா, அவர் சின்சியரா சொல்றார் அப்படான்னு ஒரு பீலிங் வருது. அதுதான் முக்கியம். இவர் சொன்ன பல விஷயத்தை இவருக்கு மேலேயே சொல்லியிருக்கார் பாலகுமாரன். பெண்களுடைய சாம்ராஜ்யம் உடனடியாத் தமிழ்நாட்டுல வரணும். அதுமாதிரி பல விஷயங்களை. பெண்கள் அதுக்கு அழுவாங்களே ஒழிய, நம்ப மாட்டாங்க. (கூட்டத்தில் சிரிப்பு) அவர் நாவலைப் படிச்சிட்டு அழுவாங்க. ஆனால், நம்ப மாட்டாங்க. ஜெயகாந்தன் என்ன சொல்றாரோ அதை ஹானஸ்ட்டா சொல்றார். அதுவும் லிட்டரேச்சர்ல சின்சியரிட்டி என்பது ரொம்ப முக்கியமான குவாலிட்டி. அந்தக் குவாலிட்டி அவர்கிட்ட இருக்கு. இன்னிய வரை இருக்கு. அவருக்கு – எனக்குத் தெரிஞ்சு – இந்த சாகித்ய அகாடமி பரிசு அவரைத் தேடி வந்தது. நான் அதை எழுதி இருக்கேன் – அவரைத் தேடி அந்தப் பரிசு வந்ததுன்னு. மத்த அத்தனை பேரும் எனக்குத் தெரிஞ்சு அந்தப் பரிசைத் தேடிப் போனவங்கதான். தேடிப் போனவங்கதான்.

சு.ரா.: (கொஞ்சம் இடைவெளி விட்டு) இப்போ அவர் இருபது வருஷமா எழுதாம இருக்காரே. Twenty years-ஆ அவருடைய காத்து – டயர்ல காத்து இறங்கும் இல்ல – கொஞ்சம்கூட இறங்கல. அணுப்பிரமாணமும் இறங்கல. இதுமாதிரி ஒரு mystery world-லயே கிடையாது எனக்குத் தெரிஞ்சு. நான் யோசிச்சிண்டே இருக்கேன். என்ன காரணம்னு எனக்குத் தெரியலை. (கொஞ்சம் இடைவெளி விட்டு) ரொம்பப் பேர் – இந்த மாதம் என் மேட்டர் வரலைன்னா, நான் செத்துப் போயிட்டேன்னு பயப்படறான். (கூட்டத்தில் சிரிப்பு) ஒரு மாசம் – அவன் அந்த இஷ்யூல அடுத்த மாசம் போடறேன்னு சொல்லிட்டான். இந்த மாசம் நான் உயிரோட இருக்கணுமே. (கூட்டத்தில் சிரிப்பு) அதுக்கு என்ன வழின்னு யோசிக்கக்கூடிய ஒரு தேசத்துல, அவர் பாட்டுக்கு இருபது வருஷமா ஒண்ணுமே எழுதாம உட்கார்ந்திருக்கார். (கொஞ்சம் இடைவெளிவிட்டு) ஒண்ணும் படிக்கறதும் கிடையாது.

அண்ணாமலை: அவர் எழுதாம இருப்பதற்கு என்ன காரணம்னு நினைக்கறீங்க ?

(தொடரும்)

Visit http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

பி.கே. சிவகுமார்


சுந்தர ராமசாமியுடன் இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. சென்ற வருடம் 2004 செப்டம்பரில் ஒன்று. இந்த வருடம் 2005 செப்டம்பரில் ஒன்று. இரண்டும் கனெக்டிகட் மாநிலத்தில் திண்ணை.காம் ஆசிரியர் கோபால் ராஜாராம் இல்லத்தில் நடைபெற்றன. இந்த இரண்டு கலந்துரையாடல்களையும் இங்கே தருகிறேன். சு.ரா.வும் பிறரும் பேசிய தனிப்பட்ட விஷயங்கள், சு.ரா. பகிர்ந்து கொண்ட அவரின் உடல்நலம் பற்றிய தகவல்கள், கலந்து கொண்ட மற்றவர்கள் தமக்குள் பேசிக் கொண்டவை, கலந்துரையாடல் பதிவானபோது தெளிவாகப் பதிவாகாத சில வாக்கியங்கள் இவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் இங்கே இடம்பெறும். முதலில் 2004 ஆம் ஆண்டு கலந்துரையாடலும் அதற்கடுத்து இந்த ஆண்டு கலந்துரையாடலும் பிரசுரமாகும். இறுதியில் இந்த இரண்டு சந்திப்புகளின் அடிப்படையில் சு.ரா. பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். இன்ஷா அல்லாஹ்!

19 செப்டம்பர் 2004 (ஞாயிறு) அன்று சுந்தர ராமசாமியுடன் நடைபெற்ற முதல் கலந்துரையாடலில் பேராசிரியர் E. அண்ணாமலை, பார்னி பெய்ட், ராஜன் குறை, மோனிகா, டெக்ஸன், முருகானந்தம், சாரதா முருகானந்தம், கோபால் ராஜாராம், துக்காராம், தஞ்சை சாமிநாதன், சந்திரா ராஜாராம், பி.கே. சிவகுமார் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டார்கள். காலை பதினொன்றரை மணி சுமாரிலிருந்து மாலை 7 மணியைத் தாண்டி நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில் இருந்து:

அண்ணாமலை: அடுத்தமுறை எப்போது கனெக்டிகட் வருவீர்கள் ?

சு.ரா.: இன்னும் ஆறுமாதத்தில் வருவேன்.

அண்ணாமலை: அடுத்த முறை வரும்போது Yale-க்கு வாங்க. மாணவர்களிடையே உங்கள் கதை வாசிப்பு மாதிரி ஒன்று வைத்துக் கொள்ளலாம்.

சு.ரா.: நீங்க அங்கே வொர்க் பண்றேளா ?

அண்ணாமலை: ஆமாம்

சு.ரா.: என்ன பண்றீங்க அங்கே ?

அண்ணாமலை: அங்கே புரபொஸரா வந்திருக்கேன்.

சு.ரா.: உங்களைப் பலமுறை க்ரியா ராமகிருஷ்ணன் வீட்டில் பார்த்திருக்கேன். ஆனால் உங்களை இங்கே பார்ப்பேன்னு எதிர்ப்பார்க்கலை. அதான்… (கொஞ்சம் நிறுத்தி) காலச்சுவடுலகூட சமீபத்துல உங்க பேட்டி வந்ததே…

அண்ணாமலை: பரவாயில்லை. நான் இங்கே இப்போதான் வந்தேன். நான் வந்தது கண்ணனுக்குத் தெரியும்.

சாமிநாதன்: இங்கே இருக்கிற மாணவர்களுக்கு நவீன தமிழில் ஆர்வம் உண்டா இல்லை கிளாசிகல் லிட்டரேச்சர் மட்டும்தானா ?

அண்ணாமலை: அது சில பேருக்கு இருக்கு. ஆரம்ப ஸ்டேஜுல இருக்கோம் தமிழ் டாச்சிங்கில்.

சாமிநாதன்: ஹார்ட் கம்பரைவிட்டு வர மாதிரி தெரியலை.

அண்ணாமலை: அவர் மொழிபெயர்ப்பில் போய்விட்டார்.

சு.ரா.: வெளியே விட்டு வரலை என்பதால் மாடர்னிடி தெரியலைன்னு இருக்கா ? அவங்களோட டேஸ்ட் அது.

சாமிநாதன்: ஒண்ணு ரெண்டு பேர் இருப்பதால் அவர் அதுலதான் போகஸ் பண்றார். அதனால சொல்றேன். அதை நான் தப்புன்னு சொல்லலே.

சு.ரா.: தப்புன்னு சொல்லலே என்பதைவிட தப்புதான்னு சொல்லணும். ஏன்னா, ஒரு தமிழ் ஸ்காலர் வந்து – அவர் தமிழ் ஸ்காலரா இருந்தார்னா – அவருக்கு எல்லா sides-ம் தெரிஞ்சிருக்கணும். அட்லீஸ்ட் முக்கியமான sides தெரிஞ்சிருக்கணும். எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க இயலாது. நம்மை மாதிரி மாடர்னிடி தெரியும்னு எதிர்பார்க்க முடியாது. ஆனால் முக்கியமானவை தெரிஞ்சிருக்கணும்.

சாமிநாதன்: நான் என்ன நினைக்கிறேன்னா – வாட் ஈஸ் செந்தமிழ் வாட் ஈஸ் சாதாரண தமிழ்னு க்ளியரா distinguish பண்ணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் classical tamil people-னுதான் சொல்ல முடியும்.

அண்ணாமலை: ஒவ்வொருவரும் ஒவ்வொண்ணுல ஸ்பெஷலைஸ் பண்றாங்க. ஆங்கிலத்திலும் இது இருக்கு. சில பேருக்கு பழையதில் ஸ்பெஷலைசேசன், சிலருக்கு மாடர்ன்.

பார்னி: The thing in our approach is to find Tamil as classical language is subordinate to other problems. It is important language to trade. So, we look into it as good citizenship. Notion of classical language is important. But it is not most important. The help of Tamil sangams is very important in taking Tamil forward here. When your kid has to choose a university, they have to say, ‘let me go to Yale. They have Tamil too which I can learn along with my major. ‘ Our objective is in 4 years, they could read Tolkapiyam.

சாமிநாதன்: நான் என்ன நினைக்கிறேன்னா, மாடர்ன் லிட்டரேச்சர் தெரிஞ்சால் போதும் அவங்களுக்கு. I am not interested in classical Tamil.

பார்னி: sure, through this programme, they can pick up newspapers and read. If they are fluent, they can read anything.

சு.ரா.: (அண்ணாமலையைப் பார்த்து) ஸாரி, உங்களை நான் வந்தவுடனே அடையாளம் கண்டு கொள்ள முடியலை.

அண்ணாமலை: பரவாயில்லை.

சாமிநாதன்: அடுத்த நாவல் எழுதறீங்களா ?

சு.ரா: ஷார்ட் ஸ்டோரி எழுதறேன். நாவல் கொஞ்சம் continuous-ஆ வொர்க் பண்ணனும். நிறைய வொர்க் பண்ணனும். ஷார்ட் ஸ்டோரியும் டிப்பிகல்ட்தான். சில நேரங்களில் நாவலைவிட டிப்பிகல்ட். பட் ஒரு ஒன் மன்த்ல ஒரு கதை முடிஞ்சிடும். அப்கோர்ஸ், இந்த கன்ட்ரிக்கு வந்தபிறகு – ஒரு டென் இயர்ஸா என் டிரீம்ஸ் எல்லாம் ஜாஸ்தியாயிடுச்சு. பட், ரொம்ப லேட்டா – எல்லாமே லேட்டா லைப்ல – இந்தியால பிறந்தததுல (பார்வையாளர்கள் சிரிப்பு) – ரொம்ப லேட்டா வருது. அறுபது வயசுல கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை வர மாதிரி (பார்வையாளர்கள் சிரிப்பு).

சாமிநாதன்: அறுபது வயசுல எத்தனையாவது கல்யாணம் ? (பார்வையாளர்கள் சிரிப்பு)

சு.ரா: ஆனா, இங்க வந்து – இங்கே இருக்கிறா ஓல்ட் புக் ஸ்டோர்ஸ் – யூஸ்ட் புக் ஸ்டோர்ஸ்ல – அலைஞ்சி – ஹவர்ஸ் ஸ்பெண்ட் பண்ணி – ரொம்ப வொண்டர்புல் புக்ஸ் – physical sciences-ல – வாங்கி வச்சிருக்கேன். எனக்கு இன்னும் அறுபது எழுபது வயசு ஆயுசு இருந்தால்தான் அதையெல்லாம் படிக்க முடியும். பார்ட்சுனேட்டா கண்ணனின் குழந்தைகள் – 2 குழந்தைகள் கண்ணனுக்கு – ரெண்டு பேரும் வொரோஷியஸ் ரீடர்ஸ். அவங்க படிப்பாங்க என்ற நம்பிக்கையில அந்த புக்ஸ் உட்கார்ந்திட்டிருக்கு. அவ்ளோ அற்புதமா எழுதறாங்க. சயின்ஸ் எனக்கு முன்னும் பின்னும் தெரியாது. எனக்குப் புரியும்படி ஒரு லீடிங் சயிண்டிஸ்ட் எழுதணும் என்றால் எவ்ளோ பெரிய எப்பர்ட் வேணும் பாருங்க. அவர் மேல எவ்வளவு மரியாதை வரும் பாருங்க. நீங்க ஒரு புக் அப்படி கிரியேட் பண்ணியிருக்கீங்களா உங்க லாங்வேஜில.

துக்காராம்: தி. ஜானகிராமன் ஒரு புக் எழுதியிருக்கார்.

சு.ரா.: எதைப் பத்தி ?

துக்காராம்: அறிவியல் பற்றி.

சு.ரா.: அறிவியல் பற்றி அவர் எழுதியிருக்கிறாரா டிரான்ஸ்லேட் பண்ணியிருக்காரா ?

துக்காராம்: இல்லையில்லை, அவர் எழுதியிருக்கிறார்.

சு.ரா.: புத்தகத்தின் தலைப்பு என்ன ?

துக்காராம்: தலைப்பு ஞாபகம் இல்லை. நியூக்ளியர் இன்ஜினியரிங் அப்புறம் நிறைய விஷயம் பற்றி எழுதியிருக்கிறார்.

சு.ரா.: ஜானகிராமன் எனக்குத் தெரிஞ்சி ஒரு சயின்ஸ் புக் ட்ரான்ஸ்லேட் பண்ணியிருக்கார். அவர் ஒரிஜினலா சயின்ஸ் புக் பண்ண விஷயம் எனக்குத் தெரியாது. அப்படி பண்ணாக்கூட குழந்தைகளுக்கு – எழுதறமாதிரி பண்ணிடுவாங்க. அதனோட complexity எல்லாம் போயிடும். இவங்க அதையெல்லாம் விடமாட்டாங்க. அந்த complexity-ஐ விடவே மாட்டாங்க. ஒருநாளும், ‘விமானம் வானத்துல பறக்கக் கூடியது ‘ அப்படிங்கற செண்டன்ஸ் இவங்க ஒருநாளும் எழுதவே மாட்டாங்க. (பார்வையாளர்கள் சிரிப்பு) நம்மாளுங்க அப்படித்தான் புத்தகத்தையே ஆரம்பிப்பாங்க (பார்வையாளர்கள் சிரிப்பு) எனவே, அதுக்குள்ளே போய், complexity-ஐயும் விடாமல் உங்களுக்கும் புரியற மாதிரியும் எழுதறது ஒரு பெரிய… ஆர்ட். அதை இந்த கன்ட்ரிலே சர்வசாதாரணமா செய்யறாங்க.

சாரதா: சிலபேரு புரியாத மாதிரி எழுதறது பெரிய இன்டலக்சுவல் திங்னு நெனைச்சிட்டு – they fool themselves.

சு.ரா: பட், இந்த மாதிரி பெரிய ரீச் இருக்குமென்றால், அவன் fool பண்றான் என்பது expose ஆயிடும். நம்ம நாட்டுல, fool பண்றான் பண்றான் என்கிறோம். அதைவிட்டா அவனுக்கு வழியே இல்லையே. இந்த நாடு மாதிரி எழுதலியே.

அண்ணாமலை: இந்த நாட்டுல science communication ஒரு துறையாவே வளர்ந்திருக்கு. நம்ம நாட்டுல political communication எவ்ளோ வளர்ந்திருக்கு. அந்த அளவு science communication அல்லது வேறு எதுவோ வரலை. பாமரர்களுக்குத் தெரியற மாதிரி ஒண்ணும் இல்லை. தமிழை எளிமைப்படுத்துவது என்றால் கொச்சைப்படுத்துவது என்று ஆகிவிட்டது. நான் linguist. ஒரு linguist எழுதற linguist புக் non-linguist-க்கும் புரியறமாதிரி இருக்கணும். MIT-லே ஒருத்தர் இருக்கார். (பெயர் சொல்கிறார். சரியாகப் பதிவாகவில்லை.சோம்ஸ்கியைச் சொல்லவில்லை.) பெரிய linguist. மத்தவங்களுக்கும் புரியற மாதிரி எழுதுவார். இந்தியாவிலே மராத்தி கொஞ்சம் பரவாயில்லை.

சு.ரா.: political communication ஸ்ட்ராங்கா இருக்குன்னு, நீங்க சொன்னாலும் என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியாது. ஏன்னா – ஒரு புக் – ஒரு பீரியடைப் படிக்க ஆரம்பிக்கறீங்கனு வச்சிக்கோங்க – காங்கிரஸோட பீரியட் போய், டி.எம்.கே.வோட பீரியட் வருது. இந்த டிரான்ஸ்பர்மேஷன் தமிழ்நாட்டின் மாடர்ன் ஹிஸ்டரில முக்கியமான விஷயம். அதை ஸடடி பண்ணப் போனிங்கனா – உங்களுக்குப் புத்தகம் கிடைக்காது. கிடைத்தாலும், ஏதாவது கூட்டங்களில் பேசியிருப்பான் இல்லையா – அந்த அளவுதான் புஸ்தகங்கள் இருக்கும். நீங்க திரும்ப என்ன பண்றீங்க – இந்த கன்ட்ரில இருந்து வந்து அதை யாரும் ரிசர்ச் பண்ணியிருக்காங்களான்னு தேடிப் போக வேண்டியிருக்கு.

அண்ணாமலை: நீங்க சொல்றது சரிதான். இந்த துறைல. மேடைப்பேச்சு மாதிரிதான் பல புக்ஸ் இருக்கு. இந்தத் துறைல எழுதறதுக்காவது ராஜதுரை மாதிரி சிலபேரு இருக்காங்க – விரல்விட்டு எண்ணற அளவு. ஆனா, சயின்ஸ் மாதிரி துறைல அப்படி யாருமே இல்லை.

சு.ரா.: யாருமே இல்லை அப்கோர்ஸ். ஏன்னா, இவ்வளவு – 7 கோடி தமிழர்கள் இருக்காங்க. டூ தவுசண்ட் இயர்ஸ் tradition இருக்குன்னா, இன்னிக்கு வேர்ல்டை பெரிய அளவு லீட் பண்ணக்கூடிய force-ஆ இருக்கணும். ஏன்னா, நமக்கு அந்த அளவு தகுதியிருக்கு. அந்த அளவு பேக்கிரவுண்ட் இருக்கு. ஆனா, நம்மோட பேர் சொன்னா உலகத்துலே யாருக்குமே தெரியாது. அப்படித்தான் நம்மோட கண்டிஷன் இருக்கு. நீங்க எந்த போயட்டை வேண்டுமானாலும் சொல்லுங்க – அங்கே சவுத் ஆப்பிரிக்காவிலே ஒருத்தரைப் பார்த்தேன். கம்பனைப் பற்றிச் சொன்னார் என்பார்கள். ஆனால், பரவலா, இன்பாக்ட் உலகத்திலே, நம்ம போயட்ஸ் பத்தி, கான்ட்ரிபியூஷன் பத்தி, டிரெடிஷன் பத்தி தெரியாது.

டெக்ஸன்: You have a point. இன்னிக்கி எங்கப் பசங்ககிட்டேயே Tamil is older than Latin or Greek-னு யாராவது ஸ்கூல்ல சொல்றாங்களா என்ன ? One of the three spoken classical languagesனு யாரும் சொல்லித் தராங்களா என்ன ?

சு.ரா.: அதுகூட பெருமை இல்லை சார். தமிழ்லே continous-ஆ லிட்டரேச்சர் இருந்துட்டு இருக்கே. பெரிய பெரிய மாஸ்டர்ஸ் இருக்காங்களே.

பார்னி: We have to explain this to language faculty community at Yale. They dont know it. We have to explain to them, Tamil is a world language.

சாரதா: What is the definition for world language ?

பார்னி: Something that goes beyond their own region. It also transcends its own time. I am making it. Trying to sell a thing. If you take the archives of India, most history is shallow. That does not go beyond few hundred years. Tamil is not like that.

சாரதா: Do you think in India everybody knows about Tamil ? Then you have not done it in your own country.

பார்னி: Instead of learning Tamil as Tamil everywhere, the rich content has to be translated in other languages and others should know about Tamil.

சு.ரா.: (சாரதாவைப் பார்த்து) இல்லைம்மா. இது இன்னும்கூட காம்ப்ளெக்ஸ் ஆன பிராப்ளமா இருக்கு. நீங்க அவுட்ஸ்டேண்டிங்கான புக் ட்ரான்ஸ்லேட் பண்றீங்க. லத்தீன் அமெரிக்கால இருக்கிற ஒரு முக்கியமான புக்கையும் ட்ரான்ஸ்லேட் பண்றாங்க. அது வேர்ல்ட் லெவல்ல ரீச் ஆகும். உங்க புக் ஆகாது. அந்தப் பாயிண்டை நீங்க யோசிச்சுப் பாருங்க.

சாரதா: It will not reach for sometime. But if we….

சு.ரா: சிலப்பதிகாரத்தைப் பார்த்தசாரதின்னு ஒருத்தர் மொழிபெயர்த்திருக்கிறார். ரொம்ப எபர்ட் போட்டுத்தான் செஞ்சிருக்கார். செவன் டூ எய்ட் இயர்ஸ் வொர்க் பண்ணியிருக்கார். ரீச் பண்ணலையே. வேர்ல்ட்ல இருக்கற முக்கியமான எத்தனை ஸ்காலர்ஸ் – இங்லீஸ் ஸ்காலர்ஸ் – அதை ரீட் பண்ணியிருக்காங்க. அது முக்கியமான கொஸ்சன்.

பார்னி: exactly this point. There are scholars here. They sometimes look at Ramayana or Mahabaratha. But not Silapathikara.

சாரதா: Silapathikara is next to only those two anyway.

சு.ரா: வேர்ல்ட்ல இருக்கிற பெஸ்ட் புக்ஸ்ல எப்பவுமே மகாபாரதத்துக்கு இடம் கிடையாது. உங்களுடைய கன்ட்ரிலே நிறைய பேரு புக்ஸ் செலக்ட் பண்றாங்க. 100 புக்ஸ் செலக்ட் பண்ணுவாங்க. எங்கிட்டே நிறைய புக்ஸ் இருக்கு. உடனடியா இப்போ ஞாபகத்துக்கு வரது – Fadiman சொல்றான் – Lifetime Reading Plan-னு ஒரு புக் எழுதியிருக்கான். அவன் சொல்றான். அவன் மகாபாரதத்தை include பண்ணலை என்பது மட்டுமில்லை. என்னால் அதை அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியலைன்னு இங்லீஸ்ல கிளியரா சொல்றான். அவ்ளோ காம்ப்ளிகேட்டடா எனக்கு இருக்குதுனு சொல்றான்.

பார்னி: மகாபாரதம் ஒரு பெரிய ஆலமரம்.

சு.ரா.: எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அட்லீஸ்ட் ஏன் include பண்ணலைன்னு ஒரு ரீஸன் சொல்றானேன்னு. மத்த authorsக்கு அதனோட existence-ஏ தெரியாதே. இப்ப நான் ரீசன்ட்டா ஒரு புக் வாங்கினேன். அதுல அமெரிக்கன் ரைட்டர்ஸ் ஒரு அறுபது எழுபது பேர் அவங்களை influence பண்ண புக்ஸ் சொல்றாங்க. அதுல ஒருத்தன்கூட மகாபாரதத்தைச் சொல்லலை. ஆனால், பாரின் லாங்க்வேஜஸ்ல உள்ள பல புக்ஸை சொல்றான்.

துக்காராம்: அது வந்து தேவையில்லைன்னு நினைக்கிறேன். இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கிற எல்லா ரைட்டர்சுமே influenced by மகாபாரதா அண்ட் ராமாயணா. இல்லையா ?

சு.ரா: அதுபத்தி நான் சொல்லலை. தமிழோட பொஸிஸன் வேர்ல்ட்ல எப்படியிருக்கு….

துக்காராம்: அது கரெக்ட். அதுக்கு நம்ம நாடு ஒரு வெல்த்தி கன்ட்ரி ஆகணும்னு நினைக்கிறேன்.

முருகானந்தம்: Economic Power.

சு.ரா.: கரெக்ட்.

சாரதா: இந்தியால இருக்கற மத்த லாங்க்வெஜஸும் இப்படித்தானா ?

சு.ரா.: எல்லாருக்கும் இருக்குனா அவங்க எல்லாம் ரொம்ப கல்ச்சுரலி ஏழைங்க. நாம பெரிய பணக்காரங்க. நம்ம கல்ச்சர் என்ன ? கேரளாக்கு என்ன இருக்கு. நம்மை கம்பேர் பண்ணும்போது, சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை. உலகத்துலே எல்லாருக்கும் பயன்படற புக் திருக்குறள். அதை உலக அளவில் கொண்டு போயிருக்கிறோமா ? திருக்குறளில் சில முடநம்பிக்கை இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் பயன்படறமாதிரியான குறள்கள் திருக்குறளில் இருக்கே.

ராஜாராம்: அதுல மெயின் ரீசன் – it has to be sold. அதை விக்கறதுக்கு ஒரு ஆள் வேண்டும். அதை நாம யாரும் பண்ண முடியலை.

சு.ரா.: அம்மா சொன்னாங்க. ட்ரான்ஸ்லேஷன் கொண்டு வரணும்னு. ட்ரான்ஸ்லேட் பண்ணனும். ஆனா இன்னிக்கு பெஸ்ட் ட்ரான்ஸ்லேஷன் கொண்டு வந்தால்கூட, அதை வேர்ல்ட் லெவல்ல கொண்டுவர முடியாது.

முருகானந்தம்: பார்ன்ஸ் அண்ட் நோபள் போனால், words of wisdom-னு நூறு புக்ஸ் இருக்கு. But we never seen Tirukural.

சு.ரா.: அந்த புக்ஸ் எல்லாம் பாத்தீங்கனா, நம்ம திருக்குறளைவிட இன்பீரியரா இருக்கு.

முருகானந்தம்: ரைட். லாட் இன்பீரியர்.

சு.ரா.: Arabian Nights இருக்கு இல்ல. இப்ப நான் சொன்ன ரைட்டர்ஸ் குறைந்தது 4 பேராவது அரேபியன் நைட்ஸைக் குறிப்பிடுகிறார்கள். அரேபியன் நைட்ஸால் influence-ஆனவன் ஏன் மகாபாரதத்தால் influence ஆகலை. இது ஒரு பெர்டினண்ட் கொஸ்சன்தான்.

துக்காராம்: இங்கே Hare Rame, Hare Krishna இயக்கத்தில் இருக்கிற ஒரு பிரிட்டிஷ்காரர் Lord of the Rings மாதிரி – ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நவீன வடிவத்தில் இங்லீசில் எழுதியிருக்கிறார்.

அண்ணாமலை: quality of text ஒண்ணு. இன்னொண்ணு, Marketing Cultural products. Its a separate area.

துக்காராம்: மார்க்கெட்டிங் சரியா இருந்தால் ரஜினி படத்தைக்கூட ஜப்பானில் விற்றுவிடலாம். இல்லிங்களா ?

அண்ணாமலை: அது ஒருவகையான மார்க்கெட்டிங். நாம நினைக்கறது இன்டலக்சுவல் மார்க்கெட். We have to make people aware of it first. அந்த மாதிரி ஒரு மார்க்கெட்டிங் தேவை. இப்போ குழந்தைகளுக்கு நிறைய ஸ்டோரிஸ் தமிழில் இருக்கு. ஆங்கிலம் நல்லாத் தெரிஞ்ச ஒருவர் இவற்றைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதலாம்.

சாரதா: மகாபாரதத்தை முழுமையா எழுதாமல் – அதிலிருக்கிற few stories எடுத்து எழுதலாம். Nobel Prize winner Chandrasekar uses to teach stories from Mahabaratha in his classes. Two of other Nobel Prize winners also started quoting it from him.

அண்ணாமலை: The children here are good readers. Now their reading is restricted to what is available in the market. So, if the content and production quality match here – those who are rich – instead of Tamils donating money to construct temple, if they give money to produce quality books, that is good.

சு.ரா.: இன்டெலக்சுவல்ஸ் இருக்காங்களே. தமிழ்நாட்டில் உள்ள இன்டெலக்சுவல்ஸ் வேர்ல்ட்ல் உள்ள இன்டெலக்சுவல்ஸ்கூட ஒப்பிடத் தகுந்தவர்களே அல்ல. (பார்வையாளர்கள் சிரிப்பு.) பர்ஸ்ட் ஆப் ஆல், ஒரு சின்ன விஷயம் சொல்றேன். தமிழ்நாட்டில் சுற்றிவரும்போது, டாக்டர்ஸ், பொலிடிசியன்ஸ், ரிலிஜியஸ் பீபள் எல்லாரையும் பார்க்கிறேன். ஒரு முக்கியமான விஷயம் என் மனசுல பட்டிருக்கு. நாம எந்தக் காலகட்டத்தில் வாழறோம் என்ற உணர்வு அவங்களுக்கு இல்லே. நான் இன்டெலக்சுவல் என்று அதைத்தான் சொல்றேன். அந்தாளு – ரஸ்ஸல் மாதிரி படிப்பாளியா இருக்கணும்னு நான் நினைக்கறது இல்லை. நீங்க வாழக்கூடிய காலம் 2004 அப்படிங்கற உணர்வு தமிழனுக்கு இல்லை. தமிழ்நாட்டுல அவ்வளவு பேரும் குடிச்சவன் மாதிரித்தான் இருக்கான். எக்கச்சக்கமா குடிச்சவன் எப்படி இருப்பான்ன். Time-க்கும் அவனுக்கும் contact போயிடும் இல்லையா ? அதேமாதிரிதான் தமிழ்நாட்டுல இருக்காங்க. இதை நான் கொஞ்சம் exaggerate பண்ணி சொல்றேன்.

துக்காராம்: ஒரு ஸ்பெசிபிக்கான உதாரணம் சொல்லுங்க.

பி.கு: இடது பக்கத்தில் மேலேயுள்ள சு.ரா.வின் புகைப்படம் செப்டம்பர் 19, 2004 அன்று இந்தக் கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்டது.

(தொடரும்)

Visit http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

பி.கே. சிவகுமார்


சு.ரா.: ஸ்பெசிபிக்கான உதாரணம் சொல்லணும்னா – அவனுக்கு அவமான உணர்ச்சி இல்லை. நான் ரொம்ப அவமானப்படறேன். இந்த பீலிங் எனக்கு எப்படி வந்தது ? நான் டைமை ரியலைஸ் பண்றதாலேதான் இந்த பீலிங் வருது. எங்க போனாலும் எனக்கு அவமானம்தான் இருக்கு. நான் என்றால் நான் இல்லை. என்னுடைய லாங்வேஜுக்கு. என்னுடைய கல்ச்சருக்கு.

(தொடர்ந்து சு.ரா. அமெரிக்காவில் தான் சந்திக்க நேர்ந்த ஒரு தமிழரைப் பற்றி உதாரணமாக விளக்குகிறார். அவரைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்று வந்திருந்தவர்களில் ஒருவர் சொல்கிறார். உடனே, சு.ரா. சிரித்தபடியே ‘நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க ‘ என்கிறார். சு.ரா.வின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த உதாரணமும், அது குறித்த உரையாடல்களும் கொடுக்கப்படவில்லை.)

ராஜாராம்: This is a bigger problem than this. If the problem is if that person mentioned is having an opinion about Tamil books, then it is ok. ஏன்னா, அவங்க தன்னோட வேலையைப் பார்த்துட்டு – கூட இந்த மாதிரி ஒரு ஒபினியன் மட்டும் வைச்சிருக்காங்க. But, அதுமாதிரி ஆட்கள்தான் – இன்னைக்கு ஒபினியன் மேக்கர்ஸா தமிழ்நாட்டுல இருக்காங்க. அதைத்தான் சு.ரா. சொல்கிறார். அவங்கள மாதிரி disconnected with the presentதான் தமிழ்நாட்டுல இருக்கு என்கிறார்.

துக்காராம்: நீங்க அப்படி பீல் பண்றதுக்கு மெயின் காரணம் – சிறுபத்திரிகை உலகத்துக்கும் இன்றைய தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிற ஒரு பெரிய gap-ஐ பீல் பண்றதாலே அப்படி சொல்றீங்கன்னு நினைக்கறேன்.

சு.ரா.: அந்த ரீசன் மட்டுமே சொல்லலை. பாலிடிசியன்ஸ்கிட்டே பேசினாலும் சரிதான், ரிலிஜியஸ் பீபுள் கிட்டே பேசினாலும் சரிதான், ஸ்காலர்ஸ் கிட்டே பேசினாலும் சரிதான். யார்கிட்டே பேசினாலும் சரிதான். கோயம்பத்தூரிலே சமீபத்திலே ஒரு சாமியாரைப் பார்த்தேன். அவர் பேரு … (யோசிக்கிறார்.) சரி, பேர் முக்கியமில்லை. ஆனா, அவர் டைம் தெரிஞ்சவரா இருக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரைப் பாத்ததுலே ஒரு வேர்ல்ட் டைம் அவருக்குத் தெரியுது. என்னோட டைம் பன்னிரண்டரை. வேர்ல்ட்ல எல்லா இடத்திலும் பன்னிரண்டரை அல்லன்னு அவருக்குத் தெரியுது. இது ஒரு சிம்பிள் விஷயம். தமிழ்நாட்டுல எனக்குத் தெரிஞ்சு ஒருத்தனுக்காவது டைமுக்கும் அவனுக்கும் உள்ள ரிலேஷன் தெரில. அந்த மாதிரி ஒரு இன்டாக்ஸிகேஷன். அந்த இன்டாக்ஸிகேஷன்ல இருந்து அவன் வெளியே வந்து – கண்ணைத் திறந்து – பார்த்தால்தான் – நாம எவ்ளோ பின்னால் இருக்கிறோம் என்று தெரியும்.

பி.கே. சிவகுமார்: இப்படிப்பட்டவங்களுக்குப் புத்தகம் எழுதும்போதுதானே, ‘விமானம் என்றால் பறக்கற விஷயம் ‘னு எழுதணும். (பார்வையாளர்கள் சிரிப்பு). அப்படி எழுதினாத்தானே அவங்களுக்குப் புரியும் ? அப்படி எழுதறது தவறு என்று எப்படிச் சொல்ல முடியும் நாம ? உதாரணமா, இந்தியாவிலே விமானத்தையே நேரில் பார்க்காதவங்க எத்தனையோ பேரு இருக்காங்களே.

சு.ரா.: நீங்க அப்படி எழுதுங்க. ஆனால், அப்படித்தான் தமிழன் என்று நீங்கள் assume பண்ணக்கூடாது. ஏனென்றால், கொஞ்சம் சங்கடப்படணும் அவன். சங்கடப்பட்டால்தான் முன்னுக்கு வரமுடியும்.

துக்காராம்: அதான், மனுஷனுக்கு அவமான உணர்வே இல்லை என்கிறார் சு.ரா.

சு.ரா.: இப்ப நான் காசு கொடுத்து வாங்கிய புத்தகம் எதுவும் முதலில் படிச்சா எனக்குப் புரியாது. அதற்கான தகுதி எனக்கு இல்லை. ஆனால் கொஞ்ச கொஞ்சமா சிரமப்பட்டு அந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கும். ரொம்ப கசங்க வேண்டியிருக்கும். இந்த மாதிரி பிரச்னை தமிழனுக்கு இல்லை இன்னைக்கு. தமிழில் வந்து – இந்த டிரெடிஷன் இருக்கே அது ஒரு பெரிய இன்டாக்ஸிகேஷன். அப்படித்தான் அவன் பாக்கிறான் தமிழை.

சாரதா: ஸ்கூல்லே தமிழ் மீடியத்திலே தமிழ் நல்லா சொல்லித்தராங்களா ?

சு.ரா.: தமிழ்நாட்டுலே யாருமே தமிழ் படிக்கறது கிடையாது.

துக்காராம்: அறிவியல் புத்தகம்பற்றிச் சொன்னீர்கள். எனக்கு என்ன குழப்பம் என்றால், நான் 12-ஆம் வகுப்புவரை முழுமையாகத் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். அதில் கணக்கு வாத்தியார் குத்துமதிப்பாகப் பாடம் நடத்துவார். அவருக்கே கால்குலஸ் புரிந்து நடத்தினாரா என்று தெரியாது. அதனால் நான் என்ன பண்ணேன்னா – காமராஜர் நூலகம்னு திருச்சில ஒண்ணு இருக்கு. அங்கே நிறைய புக்ஸ் இருக்கு. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட புத்தகங்கள். அப்போது அவற்றில் நெடுஞ்செழியன் முன்னுரையில் கையெழுத்திட்டிருப்பார். எல்லாம் தமிழ்ப் புத்தகங்கள். அதுல ரெண்டு மூணு நல்ல புக் இருந்தது. அவற்றைப் படித்துதான் கால்குலஸ் என்றால் என்னவென்று நான் தெரிந்துகொண்டேன். நீங்க அந்த புக்கெல்லாம் தமிழ் ஸ்கூல்லே சொல்லித் தரல என்னும்போது எனக்குப் புரியல. அதனால்தான் இதைச் சொல்றேன்.

பார்னி: The big problem in Tamil Nadu is the elite in Tamil Nadu is losing literacy because they are sending their kids to ‘English Matriculation ‘ schools.

ராஜாராம்: இந்தப் பிராப்ளம் எல்லாம் பெங்கால், கர்னாடகா, மகாராஷ்டிராவிலே இல்லை. அங்கெல்லாம் அம்மாநில மொழியைப் படிக்காமல் நீங்கள் பட்டம்பெற முடியாது. தமிழ்நாட்டுலே தமிழே படிக்காமல் நீங்கள் கிராஜுவேட் ஆகலாம். சில ஸ்கூல்ஸ்ல தமிழ்ல பேசினாலே fine போடறாங்க. தப்புத்தப்பா என்றாலும் இங்லீஸ்லதான் பேசணும்.

சு.ரா.: தமிழே நீங்கப் படிக்காம டாக்டரேட் வாங்கலாம். பின்ன என்ன ? மு.வ.வே இங்லீஸ்லதானே எழுதியிருக்கார். அவர் தீஸிஸை இங்லீஸ்லதான் எழுதியிருக்கார். But, அப்புறம்தான் தமிழில் ட்ரான்ஸ்லேட் பண்ணார். அவர் பீரியட் வரைக்கும் உங்க தீஸிஸை இங்லீஸில்தான் எழுதணும்னு இருந்தது. இதுக்கு நீங்க என்ன புரட்சி பண்ணீங்க.

ராஜாராம்: Now, I will propose something. Lets have a question answer session with Su.Ra. about his works and…

சு.ரா.: இதுவே நல்லா இருக்கே ராஜாராம். எனக்கும் கொஸ்சன் கேக்கறதுக்கு ஒரு opportunity இருக்கே. (சிரிக்கிறார். பார்வையாளர்களும் சிரிக்கிறார்கள்.)

ராஜாராம்: அது நீங்க கேக்கலாம். அதுல பிரச்னை இல்லை.

அண்ணாமலை: தமிழ்நாட்டுல சங்க இலக்கியத்துல ஸ்பெஷலைஸ் பண்ண ஒரு ஆளைக் கண்டுபிடிப்பது என்றால் கஷ்டம்.

சு.ரா.:: உங்களுக்கு அந்தக் கோயம்பத்தூர் சாமியாரத் தெரியலையா. இங்கே எல்லாம் வந்திருக்கார்…

சாரதா: யார் அது ? அந்த ஆதிபராசக்தி சாமியாரா ?

சு.ரா.: நோ நோ நோ. அவங்க எல்லாம் ரொம்ப out-of-date. இவர் இங்க எல்லாம் வந்து – அவாளுக்கு முக்கியமான பிஸினஸ் இங்கதானே!

ராஜாராம்: ஜக்கி வாசுதேவா ?

சு.ரா.: ஆம். அவர்தான். அவர்கிட்டே நான் பேசின உடனே – எனக்கு அவரோட ஐடியாஸ் எதுவும் ஒத்துக்க முடியாட்டாகூட, அவர் எந்தக் காலகட்டத்துலே வாழறோமோ அதுக்கேற்ப வாழ்ந்துட்டு இருக்கார். அதற்குதக்க யோசனைகள், சிந்தனைகள் எல்லாமே அவருக்கு இருக்கு.

துக்காராம்: சுவாமி சின்மயானந்தானு ஒருத்தர்… பாத்து இருப்பீங்களே.

சு.ரா.: பார்த்து இருக்கேன். அவர் ரொம்ப பழைய ஆள். காலமாயிட்டார். கேரளாகாரர். பெரிய வாயாடி (கூட்டத்தில் சிரிப்பு) இல்ல இல்ல, ரொம்ப நல்லா பேசுவார்.

துக்காராம்: நான் ஒரு இங்லீஸ் லெக்சர் கேட்டு, அது புரிந்தது அவர்கிட்டதான்.

சு.ரா.: ஆமா ஆமா.

டெக்ஸன்: பகவத் கீதைக்கு நிறைய அவர் உரை எழுதியிருக்கார்.

சு.ரா.: எக்கச்சக்கமா புஸ்தகங்க எழுதியிருக்கார். (கொஞ்சம் யோசித்துவிட்டு) நான் என்ன சொல்றேன்னா, ரியாலிட்டிவோட நமக்கு கான்டாக்ட் கொஞ்சம் வீக்கா இருக்கு.

ராஜாராம்: இருமொழி திட்டத்தினாலே என்ன பண்ணாங்கன்னா – they did not know the consequences. மும்மொழி திட்டத்திலே – you can make Tamil compulsory. இருமொழி திட்டத்திலே அதைப் பண்ண முடியாது. ஏன்னா, you can choose only two languages.

அண்ணாமலை: தமிழ்ப் படிக்க வர்றவங்களுக்கும் என்ன மாதிரி தமிழ் சொல்லித் தராங்கன்னு பார்த்தா, இந்தக் காலத்துக்கு உதவற மாதிரி தமிழைச் சொல்லிக் கொடுக்கறது இல்லே. தமிழை எப்படிச் சொல்லிக் கொடுப்பது என்பது ஒரு பெரிய பிரச்னை.

முருகானந்தம்: What Su.Ra. mentioned is a very philosophical comment. I think, if you want to modernize, the basic pre-requisite is that you have to find fault with it. Then you explore whatever field you are in.

சு.ரா.: ஆமாம்.

சு.ரா.: (சாரதாவைப் பார்த்து) அம்மா சொல்றாங்க. தமிழர்கள் மெட்டாரியலிஸ்ட் ஆயிட்டாங்களா என்று. அவங்க மெட்டாரியலிஸ்ட் ஆயிட்டாங்கன்னா, எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா, அவங்க மெட்டாரியலிஸ்ட் இல்லை. மெட்டாரியலிஸ்டா இருந்தா, இந்த ‘அம்மா ‘வோட ஆட்சியை (ஜெயலலிதாவைக் குறிப்பிடுகிறார்.) ஒருநாள் தாங்குவாங்களா ? எப்படித் தூக்கி எறிஞ்சி இருப்பாங்க. கண் முன்னாலே நடக்கற விஷயங்களைக்கூட அவங்களுக்குப் பாக்க முடியலியே. எது அவங்களைத் தடுக்குது ?

துக்காராம்: அது இல்லீங்க. கருணாநிதி ஆடுற ஆட்டம் தாங்கலைன்னுதான் எல்லாரும் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடறாங்க. ஜெயலலிதா மேல யாருக்கும் பாசம் கிடையாது. They dont have any viable alternative for Karunanidhi.

சு.ரா.: அப்படிச் சொல்ல முடியாது. கருணாநிதி ஒரு நல்ல பாலிடிஷியன் இல்லை. ஆனா, கருணாநிதியை நல்ல பாலிடிஷியன் ஆக்கக் கூடிய அளவுக்கு இந்த அம்மா மோசமானவங்க. (கூட்டத்தில் சிரிப்பு) வேற யாராலயும் அதைச் செய்ய முடியாது. இந்த அம்மா அதைச் செய்திருக்காங்க.

துக்காராம்: அதே மாதிரி, ஜெயலலிதாவை நல்ல பாலிடிஷியன் ஆக்கக் கூடிய தகுதியும் கருணாநிதிக்குதான் உண்டுன்னு நெனைக்கிறேன்.

சு.ரா.: கேரளாவுலே இது நடக்குமா ? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. உங்க பக்கத்து மாநிலத்திலே – ஜெயலலிதா மாதிரி ஒரு அம்மா வரமுடியுமா ? தூக்கி எறிஞ்சிடுவாங்க. 24 மணி நேரத்திலே தூக்கி எறிஞ்சிடுவாங்க. இந்த ஆட்டங்கள் ஏதாவது அங்க நடக்குமா பாருங்க. நம்ம ஊருக்குப் பக்கத்துல இருக்கற பல இடங்களில் இந்த மாதிரி ஆட்டம் போட முடியாது. அப்படின்னா – இங்க மட்டும் ஆட்டம் போட முடிவதற்கான காரணங்கள் என்ன ? அந்த rootsதான் மிக முக்கியமானது. அதை உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா ? அப்போதான் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

துக்காராம்: திராவிட இயக்கம்.

டெக்ஸன்: நமக்கு ஜாஸ்தி சொரணை கிடையாது.

சாமிநாதன்: தமிழ் கல்ச்சரிலேயே அது இருக்கலாம்.

சு.ரா.: ஐயோ, உங்க கல்ச்சர்லே திரும்பத் திரும்ப இந்த விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு. உங்க கல்ச்சர் மாதிரி திரும்பத் திரும்ப ஜனங்களுக்காக வாழ்ந்த, பொய் சொல்லாதே, திருடாதே, லஞ்சம் வாங்காதே அப்படான்னு இரண்டாயிரம் வருஷமா சொல்லப்பட்ட கல்ச்சர் வேற எதுவுமே கிடையாது. Continuous-ஆ சொல்லப்பட்டிருக்கு.

சாமிநாதன்: அது எல்லாம் இருந்ததாலதான், செய்யாதே அப்படான்னு இரண்டாயிரம் வருஷமா சொல்லிட்டு இருந்தாங்களோ ?

ராஜாராம்: இப்ப எல்லா கல்ச்சரிலும் லஞ்சம் இருந்தாலும், அதனுடைய attributes எப்படி இருக்கு என்பது இருக்கு இல்ல. இப்ப வந்து தமிழ்நாட்டுல இது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு நிலை ஆயிட்டது. தமிழ்நாட்டுல லஞ்சம் என்பது does not even raise an eyebrow.

சு.ரா.: லஞ்சம் தமிழ்நாட்டுல இப்ப எப்படி இருக்கு என்பது முக்கியமான விஷயம். நீங்க லஞ்சப் பணத்தைக் கையாலேயே தொட வேணாம். சாயங்காலம் அஞ்சு மணிக்கு அவங்க அவங்களுக்கு என்ன ஷேரோ, அது சுத்தமா கைக்கு வந்து சேந்திடும். நீங்க ஒண்ணுமே பண்ண வேணாம். வரவங்களுக்கு என்ன காரியம் பண்ணனுமோ அதை நீங்க பண்ணினா போதும். சாயங்காலம் அஞ்சு மணிக்கு உங்க ஷேர் உங்களுக்கு வந்திடும். நீங்க கையால லஞ்சம் வாங்கறதே கிடையாது.

அண்ணாமலை: லஞ்சத்தை நல்லா டெமாக்ரடைஸ் பண்ணிட்டாங்க.

சு.ரா.: ஆமா. அது முக்கியமான விஷயம். ஒரு ஆள் கஷ்டப்படறான். வயத்துக்கு இல்ல அல்லது பொண்டாட்டிக்குப் பொடவை வாங்கிட்டுப் போக நினைக்கிறான். அதுக்காக லஞ்சம் வாங்கறான். அப்படி எதுவும் இல்ல. இன்னொன்னு சொல்றாங்க. லஞ்சம் வந்தபிறகு காரியம் நடக்குது. முன்னாலே நடக்கவே இல்ல என்கிறாங்க. இது அடுத்த ஸ்டெப். முன்னால கவர்மென்ட் ஆபில்ஸ்ல காரியம் நடக்காதாம். அது உண்மை. efficiency வந்திருக்கு.

அண்ணாமலை: அது இந்த நாடு மாதிரி வைக்கணும். பணம் கூட இருக்கறவங்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் இந்த நாட்டுல உண்டு. but, it does not affect service for others.

ராஜாராம்: லஞ்சம் எல்லா இடத்திலும் இருக்கு. இங்கே ஒரு கவர்னர் – யாரோ ஒரு காண்ட்ராக்டர் fixed his home. அவரைப் பிடிச்சிட்ட்டாங்க.

சு.ரா.: இங்க higher level-ல எவ்ளோ வேணும்னா லஞ்சம் இருக்கலாம். ஆனா, lower level-ல கிடையாது. லஞ்சம் இருக்கா இல்லையா என்பதில்லை. ஒரு ஆபிசுக்குள்ளே நுழைஞ்சதுமே, ஒரு மனுஷன் உள்ளே வந்திருக்கான் அப்படான்ற எண்ணம் இந்த கன்ட்ரிலே இருக்கு. இந்தியாலே கிடையாது. ஸ்டூலை ஒளிச்சி வெச்சுக்கறான் சார். அங்கே உட்காரக் கூடாதுன்னு. முக்கியமான ஆளுங்க வந்தாதான் ஸ்டூலை எடுத்து வருவான்.

அண்ணாமலை: Information is money என்பது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உண்மை. ஒரு சின்ன இன்பார்மேஷன் கேட்டாலும், பணம் கொடுத்தாதான் கிடைக்கும்.

சு.ரா.: அப்புறம் நீங்க போய் நீங்களே அவன் முன்னாலே உட்கார்ந்துட்டாங்கன்னா, உங்க வேலை நடக்காது.

ராஜாராம்: ஓ! அதெல்லாம் Casteism. Hierarchy!

முருகானந்தம்: எந்த ஆபிஸ் போனாலும் அவமானப்படாம நீங்க வந்தீங்கன்னா அது பெரிசு. அன்னிக்கி நீங்க லக்கி.

சு.ரா.: கரெக்ட்

அண்ணாமலை: இந்தியாலே பணம் கொடுப்பதால் you get things faster என்பது சரியில்லை. You infact slow down what other people get by it. Thats what happens.

சு.ரா.: எனக்காக அவன் செய்ய வேண்டிய காரியத்தை, எனக்கு அவன் உபகாரம் செய்யறதா நினைக்கிறான்.

அண்ணாமலை: தமிழை ஆட்சி மொழியா கொண்டு வரோம் என்கிறோம். அதுக்கு ஒரு முக்கிய காரணம் – மக்களின் மொழியைக் கொண்டு வந்தால், government will become transparent, government will become friendly. Thats the basic point in bringing people ‘s language into the government. But nothing has changed. Only Tamil is used. But the same arrogance ets exists. Then, what is the point in making Tamil official language ?

சு.ரா.: இப்ப தமிழ் கிளாசிகல் லாங்வேஜ் ஆனவுடனே, அதை எக்ஸ்ப்ளாய்ட் பண்ற ப்ரோகிராம் எல்லாத்தையும் தமிழ்நாட்டுல யோசிச்சிட்டு இருப்பான்.

சு.ரா.: (அண்ணாமலையைப் பார்த்து) நீங்க சொன்ன ஒரு பாயிண்ட் ரொம்ப கரெக்ட். எனக்கு முதலிலேயே அந்த பாயிண்ட் இருந்தது. ஆனா, அதைச் சொல்ற தைரியமில்லை. நீங்க உங்க தமிழ் பேக்கிரவுண்டிலே அதைச் சொல்லிட்டாங்க. அதாவது, தமிழ் தமிழ்னு சொல்லிட்டு – எதுவுமே செய்யாம ஐம்பது வருஷமா இருந்த குற்றவுணர்ச்சி இருக்கே. அதைத் தீர்த்துக்கறாங்க – இந்த கிளாசிகல் லாங்வேஜ் விஷயத்துலே. தமிழுக்காக எதுவுமே செய்யலை. சி. சுப்ரமணியம் செய்ததுகூட செய்யலை. பக்தவச்சலம் செய்தது கூட செய்யலை. காமராஜ் செய்ததுகூட செய்யலை. சி. சுப்ரமணியம், பக்தவச்சலம் எல்லாம் அவங்களுக்குத் தமிழ் தொடர்பே கிடையாது. அவங்க எல்லாம் வேற பேக்கிரவுண்டிலே இருந்து வந்தவங்க. அவங்க செஞ்ச காரியம் கூட செய்யலை.

அண்ணாமலை: தமிழ் செம்மொழி ஆனதால் தமிழர்க்குப் பெருமை என்கிறார்கள். உண்மை. ஆனால், இந்தப் பெருமையினால் தமிழுக்கு என்ன வருதுன்னு நாம பார்க்கணும் இல்லையா ? தமிழ் பெருமையான மொழி என்பதால் ஒரு சதவீதமாவது தமிழ் மீடியத்துக்கு அனுப்பினார்கள் என்றால் தமிழைப் புரிந்து நடக்கிறார்கள் என்று அர்த்தம்.

முருகானந்தம்: அவங்க பசங்க எல்லாம்தான் இங்லீஸ் மீடியத்திலே முதல்லே படிக்கறாங்களே.

சு.ரா.: ஒரு விஷயம். உங்களுக்குத் தெரியுமா தெரியலை. தமிழ்நாட்டுல ரெண்டு விஷயம் நான் தெளிவாப் பாத்து இருக்கேன். ஒண்ணு, நாங்க ஜாதியை விடமாட்டோம். கடைசிவரை விட மாட்டோம். இது மேல இருந்து கீழே வரை எல்லாருக்குமே ஸ்ட்ராங்கா இருக்கு. இரண்டாவது, எங்கக் குழந்தைகள் பொழைக்கணும்னா, அதுங்க தமிழ் படிக்கக் கூடாது. (கூட்டத்தில் சிரிப்பு). இதுல வந்து ஜனங்கள் ரொம்பக் கிளியரா இருக்காங்க. எங்க வீட்டைச் சுற்றி ஒரு பத்து அம்மாக்கள் இருக்காங்க. ஒருத்தி சாப்பாடு கொண்டு வரவங்க, ஒருத்தி வீட்டுல வேலை பாக்கறவங்க, ஒருத்தி கறிகாய் விக்கறவங்க. இப்படி. நான் இவங்க எல்லார்கிட்டேயும் டாடெய்லா பேசியிருக்கேன். ஒருத்திக்காவது தன் குழந்தையை தமிழ் ஸ்கூலுக்கு அனுப்பனும் என்கிற எண்ணம் கிடையாது. செத்தாலும் சரி, நாங்க சாப்பிடாம செத்தாலும் சரி, நாங்க இங்லீஸ் மீடியம் ஸ்கூலுக்குத்தான் அனுப்புவோம். அப்போதான் எங்க குழந்தைகள் பிழைக்கும் என்கிறாங்க.

ராஜாராம்: மிடில் க்ளாஸ்தான் அந்த மாதிரி ஒரு வேல்யூவை உண்டு பண்ணியிருக்கு.

(தொடரும்)

Visit http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்