This entry is in the series 20051111_Issue

புதியமாதவி.


*
நாடக மேடையில்
அச்சம் தரும்
அய்யனார் வேடத்தில்
அரிவாளூடன் ஆடும்
உன் வேஷம்
எப்போதும்
புன்னகைத் தவழும்
உன் முகத்துடன் ஓட்டாமலேயே
அழிந்துப்போகிறது
என் விழித்திரைகளில்.

*

மழையில் ஒளிரும்
சிற்பங்கள்
தூறலில் அழியும்
ஓவியங்களுக்காய்
வருந்ததுவதில்லை.
உன்னைப் போலவே.

*

கழிப்பறைக்கும்
கட்டிலுக்கும்
நடுவில் என் பயணம்.

சன்னல் கம்பிகளில்
தொங்குத்தோட்டமாய்
என் வானம்.

எப்போதாவது
நலம் விசாரிக்கும்
உறவுகள்

எப்போதும்
எனக்காக காத்திருக்கும்
மாத்திரைகள்

செத்துப்போன கனவுகளுடன்
பாடை ஏறாமல்
படுத்திருக்கிறது
மூத்திரவாடையுடன்
என்னுடல்.
தீயாக
நீ மட்டுமே
என்னைத் தீண்ட வேண்டும்
என்பதால்.

—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation