சிறு கவிதைகள்
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

01
இன்னொரு நாள்
இன்னுமொரு நாள்
இப்படியே இன்னும்
எத்தனை நாள்.
o
02
இருப்பதற்கா?
இறப்பதற்கா?
இப்படி எரியுதிந்த
மெழுகுவர்த்தி?
o
03
இருந்து இளைப்பாறி
பசையான இடம்பார்த்து
பறந்து நீ போக
இவன் முகத்திலென்ன
இளிச்சவாயன் என்றா
எழுதி ஒட்டிஇருக்கு?
o
04
சொன்னபடி
சொல்படி
சோத்துக்கு
சிங்கியடி.
SJEGADHE@tebodinme.ae
சிறு கவிதைகள்
தா.பாலகணேசன்

1
கடந்த காலத்தின்
எந்த ஒரு பாடலின்
மெட்டும்
எனக்கு ஞுாபகமில்லாத
ஒரு இரவில்
உள்ளெரியும்
நெருப்பு
இசை மூட்டுகிறது
2
இறந்து
இறந்து
பிறந்தோம்
உலகம்
புதிதாகவே
இருக்கிறது
3
எல்லா
இடமும்
தேடினேன்
எங்கும்
இருக்கிறது
4
விலங்குகளோடு
அவர்கள்
உடுக்கு
அதிர்ந்தது
தொன்மம்
சுடர
5
கவிதை
எழுதுவதற்கு
இனி
எனக்குப்
பேனா
தேவையில்லை
மெழுகுவர்த்தியைக்
கொழுத்தினேன்
6
சன்னல்த் திரை
காட்சி ஒன்று
காட்சி இரண்டு
காட்சி மூன்று
காட்சி நான்கு
திரை
தா.பாலகணேசன்
1.1.03
tharsanbalaganesan246@hotmail.com