குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ஈரானில் மதவாதிகளுக்கும், தாரளவாதிகள்,மாணவர்களுக்குமிடையே மோதல் அதிகரித்து வருகிறது. 1979க்கு பின் தோன்றிய ஒரு புதிய தலைமுறை கருத்து சுதந்திரம் உட்பட பல அடிப்படை உரிமைகள் குறித்து போராடுகிறது.தாரளவாதியான கடாமி அதிபராக இருந்தாலும் அவரால் ஒரளவிற்கு மேல் எதுவும் செய்ய முடியாத நிலை-அதிகார மையங்கள் மதவாதிகள் வசமுள்ளன. ஷாவின் ஆட்சி 1979ல் வீழ்ந்த போது அதிகாரம் மதவாதிகள் கையில் வெகுவிரைவில் கிட்டிவிட்டது.இதனால் தாரளவாதிகள் ஆட்சியை வீழ்த்த உதவிய போதிலும் மதவாதமே ஆளும் சித்தாந்தமாகிவிட்டது. ஷா நவீனத்துவவாதி- மேலிருந்து நவீனத்துவத்தை புகுத்தினார்- சமூகத்தை அதிநவீனமயமாக்க முயன்றார்.

ஆனால் பின் ஆட்சிக்கு வந்த கோமேனி ஈரானை பழமைவாத நாடாக மாற்ற முயன்றார்.இன்று கருத்து சுதந்திரம் ஒரளவே உள்ளது. ஷாவின் ஆட்சிக்காலத்தில் கொமேனியின் ஆதராளவாளர்கள் பாரிஸிலிருந்து அவர் நிகழ்த்திய உரைகளின் ஒலிநாடாக்களை வழிப்பாட்டுத்தலங்களில் ஒலிபரப்பியும், பிரதிகள் எடுத்தும் விநியோகித்தும் ஆதரவு திரட்டினர்.கருத்து சுதந்திரம் முழுமையாகத் தரப்பட்டால் தங்கள் அதிகாரம் இன்னும் அதிமாக விமர்சிக்கப்படும், தாரளவாதிகள் கை ஒங்கிவிடும் என்ற அச்சம் மதவாதிகளிடையே நிலவுகிறது.

இரும்புத்திரைகள் கூட வீழ்ந்துவிட்டன என்பதை இவர்கள் உணரவில்லை போலும்.கருத்துரிமை, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவது என்பது மேற்கத்திய நாடுகள் ஆதரவால் நடைபெறும் போராட்டமாக புரிந்துக் கொள்ளப்படுவதால் அதை மதவாதிகள் கொச்சைப்படுத்த முயல்கின்றனர். இந்தியாவில் வாலண்டைஸ் நாள் கொண்டாடுவைதை எதிர்ப்பவர்களும், ஈரானில் பெண்கள் கால்பந்து விளையாட்டைப் பார்ப்பதை தடை செய்ய விரும்பும் மதவாதிகளும் நவீனமயமாதல், மேற்கத்தியமயமாதல் இரண்டும் ஒன்று எனக் கருதி எதிர்க்கின்றனர்.தெரிவு என்பதினை மறுக்கின்றனர்,இது வெறும் தலைமுறை இடைவெளியல்ல. சமூகம் குறித்த இரண்டு முற்றிலும் வேறுபடும் புரிதல்களுக்கிடையேயான ஒரு மோதல்.

ஆறு ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பும் ஈரானிய தத்துவவாதி ஒருவர் New Scientist ற்கு அளித்துள்ள பேட்டியில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஈரானில் கருத்து சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது சமூக அறிவியல் குறித்த ஆய்வுகளுடன் தொடர்புடையது என்பதை அவர் தெளிவாக்குகிறார்.கருத்தியல் ரீதியாக மதவாதிகள் செலுத்தும் ஆதிக்கம் ஒழிந்தால்தான் ஈரானின் புதிய தலைமுறை தன் கனவுகளை நிறைவேற்றமுடியும், ஒரு நவீன சுதந்திர சமூகத்தை உருவாக்க முடியும்.


ஜான் ஸ்டின்பெய்க் என்றதும் பலருக்கும் Grapes of Wrath என்ற புகழ்பெற்ற நாவல்தான் நினைவிற்க்கு வரும்.ஸ்டின்பெய்கின் படைப்புகளும்,சிந்தனைகளும் இயற்கை-மானுடம் குறித்து அவர் முன்வைக்கும் கருத்துக்களை விளக்கி, அவரது கண்ணோட்டத்தின் சிறப்பம்சங்களை விளக்கும் கட்டுரை ஒன்றை(*) சமீபத்தில் படித்தேன்.ஸ்டின்பய்க் முழுமைவாத(holism) கண்ணோட்டத்தை முன்வைத்தார், அவரது சிந்தனைகளில் மூன்று C கள் (Connection,Complexity,Compassion) முக்கியத்துவம் பெறுகின்றன என்பதுடன், சுற்றுசூழல் சட்டம் முழுமைவாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் கட்டுரையாசிரியர் வாதிடுகிறார். மனிதன் இயற்கையிலிருந்து மேம்பட்டவன் என்ற பார்வையை ஸ்டின்பெய்க் ஏற்கவில்லை. கருணையின் தேவை குறித்தும் அவர் வலியுறுத்தினார்.அவர்து புனைவுப் படைப்புகளில் இயற்கை தனிசிறப்பிடம் பெறுகிறது. தொன்மங்களையும் அவர் மனித-இயற்கை உறவினை சித்தரிக்க பயன்படுத்தியுள்ளார் என்பதை கட்டுரை விரிவாகச் சொல்கிறது.இயற்கை குறித்து இலக்கியம் கூறுவதையும், அறிவியல் கண்ணோட்டங்களையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று வாதிடும் கட்டுரையாசிரியர் முழுமைவாத கண்ணோட்டம் சூழல் பாதுகாப்பில் முக்கியத்துவம் பெறாததால் பல விரும்பத்தாகத விளைவுகள் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். கலிபோர்னியாவில் சூழலில் உள்ள தொடர்பும்,நுட்பமும் கணக்கில் கொள்ளப்பட்டத்தால் சார்டைன்(sardine) மீன்வளம் குன்றியதை இதற்கு உதாரணமாக காட்டுகிறார். ஸ்டின்பெய்க், மெளன வசந்தம் என்ற நூலை எழுதிய ரசெல் கர்சான் இருவரையும் ஒப்பிடும் கட்டுரையாசிரியர் கூறுகிறார்

‘Literature ‘s subjective and often idiosyncratic view of the world is often seen as a source of trobule for policy analysts.But, as we will see, it is this very subjectivity that allows literature to locate and argue for values that will enrich the human experience.As long as the literary imagination is held accountable to scientific reality and offers explanatory and exploratory insights, it should not be jettisoned.Specifically Steinbeck ‘s subjective ethic of compassion may be our best tool in approaching environmentlaism ‘s existential questions ‘

கட்டுரையாசிரியர் சூழலின் முழுமையினைக் கருத்தில் கொண்டால்தான் சூழல் குறித்த சட்டங்கள்/விதிமுறைகள் அவற்றின் குறிக்கோள்களை எட்ட முடியும் என்கிறார்.இது குறித்து சில முன்னுதாரணங்களையும் முன்வைக்கிறார்.

‘Science, in its objectivity, cannot tell us what to want.Literature , in its subjectivity, can give us

direction.Using the explanatory and exploratory powers of both science and liteature, we are ready to take a first stab at some existential issues. Steinbeck ‘s ethic of compassion, describes, in writer Don DeLillo ‘s words , ‘a geography of conscience ‘ that can suggest how to protect human health, future generations, and the nonhuman world ‘ (footnote omitted)

என எழுதும் கட்டுரையாசிரியர் ஸ்டின்பெய்க் அறிவியலில் கொண்டிருந்த ஆர்வத்தினையும் சுட்டிக்காட்டுகிறார்.அளவிற்க்கு மீறிய மீன்பிடித்தலை குற்றமாகவே அவர் கருதினார் என்பதும் கட்டுரையில் வலியுறுத்தப்படுகிறது.இயற்கை-மானுட சமூகம் குறித்த அக்கறையினை தன் எழுத்துக்களில் வெளிப்படுத்தும் ஸ்டின்பெய்க் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் எழுதினார்,இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியவை பல என வாதிகிறார் கட்டுரையாசிரியர்.இப்படி ஒரு படைப்பாளியின் படைப்புகள்,கருத்துக்களின் பன்முகப்பரிமாணங்களை விளக்கும் இக்கட்டுரை ஸ்டின்பெய்க்கின் சூழல் குறித்த அக்கறை இலக்கிய விமர்சகர்களிடையே போதிய கவனம் பெறவில்லை என்கிறது.கட்டுரையாசிரியர் சட்டத்துறையில் பேராசிரியர்.

* Steinbeck ‘s Holism: Science,Literature,and Environmental Law

Robert R.M.Verchik- Stanford Environmental Law Journal 2003-22 Stan. Envtl. L. J. 3


அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மைசமூகத்தினர் நடத்தும் உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த முக்கியமான தீர்ப்பினை கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கியது. அப்போதே அது குறித்து விளக்கத்தினை மத்திய அரசும்,மாநில அரசுகளும் கோரியிருந்தால் இந்த ஆண்டு தொழிற்கல்வி,மருத்துவக் கல்வி உள்ளிட்ட பலவற்றில் மாணவர் சேர்க்கை குறித்து குழப்பம் எழுந்திராது.இப்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல் குறிப்பு பல முக்கியமான விஷயங்களை தெளிவாக்கியுள்ளது. உயர்கல்வி என்ற பெயரில் தனியார் கொள்ளையடிப்பதை அரசு தடுக்க இது வகை செய்வதுடன், முன்பு உன்னிகிருஷ்ணன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் பல அம்சங்களை இது உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப உயர்கல்வி என்பது தகுதியுள்ள பலருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.தமிழ் நாட்டில் மட்டும் 21000 இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் நிரப்பபடாமல் உள்ளன.பல்லாயிரக்கணக்கான மாணவர்களால் ஆண்டுதோறும் 30,000-40,000 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாத போது எதற்கு இத்தனை கல்லூரிகள், இவற்றில் எத்தனை கல்லூரிகள் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் தாக்குபிடிக்கும். இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதா -இது போல் பல கேள்விகள்.இத்தீர்ப்பு இவற்றில் சிலவற்றிற்கு விடை காண உதவும்.


ravisrinivas@rediffmail.com

Series Navigation