கிருகஸ்தம்

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

ப.மதியழகன்



சம்பள நாளை எதிர்பார்த்து
நாட்களை நகர்த்துவது
பள்ளிக் கட்டணம் முதல்
அரசாங்க வரி வரை
கட்டி விட்டு மீதிப்பணத்தில்
குடும்பத்தை ஓட்ட முடியாமல்
விழி பிதுங்கி நிற்பது
அவ்வப்போது வரும்
மருத்துவ செலவு
எனது ஆணி வேரையே
சற்று அசைத்துப் பார்க்குது
பண்டிகை வந்தால்
போனஸுக்கும் மேல்
குடும்பத்திற்காக செலவிடுவது
அதற்காக வட்டிக்கு
கடன் வாங்கி குவிப்பது
இவ்வளவு இருந்தும்
குழந்தைகளின் சிரிப்பில்
கவலையை மறப்பது
மீண்டும் குழந்தையாக
எனதுள்ளம் தவிப்பது
கைகொடுக்காமல்
சாமர்த்தியம் பத்தலை என்று
சொல்லும் உறவுகளை
எந்த கணக்கில் சேர்ப்பது.

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts