This entry is in the series 20110123_Issue

கலாசுரன்



*
அதோ…..
உலாவருகிறது
ஒரு சோகம்

மன்னிக்க முடிவதில்லை
நான் என்ற
யாருமற்ற ஒரு வெளியில்
சிதறிச் சென்ற வார்த்தைகளை

அதன் ஞாபகங்களை
அந்த நிலப்பரப்புகளில்
முளைக்கும்படி
புதைத்துவைக்கவும் தயங்குகிறேன்

இதோ ….
என்னை சூழ்ந்துகொள்கிறது
இன்னுமொரு சோகம் ….!

கவனமாக இருங்கள்
சற்று நேரத்தில்
இது
உங்களுக்கும் நிகழக்கூடும்….!

*
***
கலாசுரன்

Series Navigation