ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

பல்வேறு முறைகள்


ரஜினிகாந்த் முறை:

1) இதோ தாக்கப்போறேன், இதோ அடிக்கப்போறேன் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். சிங்கம், பயத்திலேயே வாழ்ந்து பயத்தாலேயே இறந்துவிடும்

2) இல்லையென்றால், ரஜினி முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை எடுத்து சிங்கத்தின் மீது போட்டுவிட்டால் போது, எடை தாங்காமல் உயிரைவிட்டுவிடும்

கமலஹாசன் முறை:

சிங்கத்தின் அருகே சென்று ஓவென்று கதறி அழவேண்டும். துக்கம் தாங்காமல் செத்துவிடும் சிங்கம்

ஜெயலலிதா முறை:

இரவு 2 மணிக்கு, போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனைக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தைக் கொல்வதுதான்.

கருணாநிதி முறை :

முதலில் சிங்கத்தை உடன் பிறப்பாக்க வேண்டும். ஆக ஒரு மாதம் தொடர்ந்து, ‘என் சிங்கமே, என் உடன் பிறப்பே ‘ என்ற ரீதியில் கடிதங்கள். பிறகு, ஜெயலலிதாவின் வழக்கமான அட்டகாசத்தை காரணமாக வைத்து, ‘சிங்கமே, என் உடன் பிறப்பே.. நீ எனக்காக தற்கொலை செய்து கொள்ளாதே ‘ என்ற ரீதியில் கடிதம் வந்ததும், தலைவர் தன்னை தற்கொலை செய்து கொள்ள சொல்கிறார் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, சிங்கம் தற்கொலை செய்து கொள்ளும். அவ்வளவுதான்.

மணிரத்னம் முறை:

சிங்கத்துக்கு சூரிய வெளிச்சமே காட்டக்கூடாது. ஒரே ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து இருட்டறையில் அதனிடம் குசுகுசுவென்று பேசிக்கொண்டே இருக்கவேண்டும். எரிச்சலில் தற்கொலை செய்துகொண்டுவிடும்.

பாலச்சந்தர் முறை:

ஒரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள். நமது சிங்கமும், பெண் சிங்கமும் காதலில் விழும். இன்னொரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள், அப்புறம் இன்னொரு பெண் சிங்கத்தை. அப்புறம் ஒரு ஆண் சிங்கத்தை. முதல் ஆண் சிங்கம் இரண்டாவது பெண் சிங்கத்தை காதலிக்கும். முதல் பெண்சிங்கம் இரண்டாவது ஆண் சிங்கத்தை காதலிக்கும். சரி, இன்னொரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள். புரியலை இல்லையா.. சரி 15 வருடம் கழித்து இதை மீண்டும் படித்துப்பாருங்கள்.. ம்ஹ்ஊம் செய்யமாட்டார்கள்

பாரதிராஜா முறை:

நெப்போலியனை அனுப்பி திருப்பாச்சி அருவாளால் ஒரே போடு. அவ்வளவு தான். தீர்ந்தது.

சங்கர் முறை:

சிங்கத்தை ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே சுவிட்ஸர்லாந்து ஆல்ப்ஸ் மலை செட்டிங் போட்டு, நல்ல அழகான லொகேஷனில் கம்ப்யூட்டர் அனிமேஷனில் எலும்பு தனி சதை தனியாக பிரிக்க வேண்டியதுதான்.

விஜயகாந்த் முறை:

இன்னும் 5 சிங்கங்களைக் கொண்டுவந்து, எல்லாவற்றுடனும் ஒரே நேரத்தில் சண்டையிட்டு ஐந்தையும் கொன்றுவிட்டு, கடைசி சிங்கத்திடம், (நம் பழைய சிங்கம்தான்) தேசபக்தி, நாடு, மக்கள் என்று அரைமணிநேரத்துக்குப் பேசினால், ஆச்சரியம், சிங்கம் பசுவாகிவிடும்.

டி ராஜேந்தர் முறை:

ஒரு பெண்சிங்கத்தை கூட்டிக்கொண்டுவாருங்கள். நம்முடைய சிங்கம் இந்த பெண் சிங்கத்திடம் காதலில் விழும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். 6 அல்லது 7 பாடல்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். முக்கியமான விஷயம், பாடலில் சிங்கம் என்று வந்தால் சிங்கத்தை காண்பிக்க வேண்டும், கொசு என்று வந்தால் கொசுவைக் காண்பிக்க வேண்டும். இறுதியில் காதல் உடையும்படி பார்த்துக்கொண்டால் போதுமானது, இன்னும் கொஞ்சம் இது போன்ற பாட்டுக்களைப் பாடி சிங்கம் தற்கொலை செய்து கொள்ளும்.

ஷா ருக் கான் முறை:

அசோகா மாதிரி ஒரு படத்தை எடுத்து சிங்கத்தை பார்க்கும்படி கட்டாயப்படுத்தவேண்டும்.

கோவிந்தா முறை:

அந்த சிங்கத்தின் முன்னால், 6 அல்லது 7 நாட்கள் தொடர்ந்து நடனமாடுங்கள்

ராகுல் திராவிட் முறை:

சிங்கத்தை உங்களுக்கு பந்து போடச்சொல்லி, 200 பந்துகளுக்கு பின்னர் 1 ரன் எடுத்தால் போதும்

மேனகா காந்தி

ஆபத்திலிருந்து சிங்கத்தைக் காப்பாற்றி, ஒரே காய்கறியாக கொடுத்துச் சாப்பிடச்சொல்லவேண்டும்.

புஷ் முறை:

அதன் கழுத்தில் ஒஸாமா பின் லாடன் கூட்டாளி என்று போர்டை தொங்கவிட்டு முஷாரஃபிடம் விட்டுவிட வேண்டியதுதான்.

Series Navigation