‘எத்தனை எத்தனை ஆசை! ‘

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

கரு.திருவரசு


எத்தனை எத்தனை ஆசை – உன்மேல்
எத்தனை எத்தனை ஆசை – எத்தனை

முத்தம் கொடுத்திட ஆசை – உடல்
முழுதையும் தழுவஓர் ஆசை
பித்துச் செயலிது வாகும் – எனப்
பிடித்தெனைத் தள்ளிய போதும் – எத்தனை

பூப்போலத் தூக்கியென் மஞ்சம் – தன்னில்
போட்டுத் தாலாட்ட ஆசை
‘சீப் ‘போவென் றெட்டி உதைத்து – என்னைச்
சினந்தாலும் போகாதென் ஆசை – எத்தனை

சின்னச் சிரிப்பினில் ஆசை – உன்னைத்
தினந்தோறும் பார்த்திட ஆசை
அன்னை மலருக்குள் மலர்ந்த – புது
அரும்பே அழகான குழந்தாய் குழந்தாய் – எத்தனை

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு