This entry is in the series 20101227_Issue

ரசிகன்


ஒரு குறிப்பிட்ட
சில தோழிகளை மட்டும்
எண்ணம் பட செய்கிறது
ஒரு 555 சிகரெட்டும்
ஒரு கிளாஸ் ஜானி வாக்கரும்!

பேசப்படாத நாட்களில்
மௌனங்களுக்கு
ஊற்றி விடவோ
பற்ற வைக்கவோ
தவறியதில்லை நினைவுகள்!

அதிகப்படியான அன்பென்பதும்
தூக்கலான நட்பென்பதும்
ஒரு சிட்டிகை காதலில்
சமன் செய்யப்படுதல்
குறித்த விவரம்
கேட்டே தீர வேண்டும்
அத்தோழிகளிடம்!
எவள் எவள்
எந்தெந்த ஊரில்
எந்தெந்த நாட்டில்
தோழிகளாக, காதலிகளாக, மனைவிகளாக
என்ற தகவலில்…

கையை சுட்டுவிட்டது
சிகரெட் துண்டு!
– ரசிகன்

Series Navigation