இலக்கிய வட்டம், ஹாங்காங் ‘இலக்கிய வெள்ளி’- 25ஆம் கூட்டம்

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

அறிவிப்பு


நாள்: ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2008
நேரம்: மாலை 6.00 முதல் 8.30 வரை
இடம்: விரிவுரை அரங்கு, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த் தாய் வாழ்த்து

வரவேற்புரை: திரு.எஸ்.பிரசாத்

வாழ்த்துரை:

திரு.எஸ்.நரசிம்மன் (நிறுவனர், இலக்கிய வட்டம்)
திரு. ப. குருநாதன்
திரு. செ. முஹம்மது யூனூஸ்

நூல் வெளியீடு:

“இலக்கிய வெள்ளி”- இலக்கிய வட்டம் இதுவரை நடத்திய 24 கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய நூல்

வெளியிடுபவர்: திரு. செ. முஹம்மது யூனூஸ்
பெற்றுக்கொள்பவர்: திரு. அ. செந்தில்குமார், தலைவர், தமிழ்ப் பண்பாடுக் கழகம், ஹாங்காங்

உரைகல்- ‘என்ன நினைக்கிறேன் நான் இலக்கிய வட்டத்தைப் பற்றி’- பேசுவோர்:

திருமதி.வித்யா ரமணி
திரு. கே.ஜி. ஸ்ரீனிவாசன்
திருமதி. சுகந்தி பன்னீர் செல்வம்
திரு.பி. நடராஜன்
திருமதி. நளினா ராஜேந்திரன்
திரு. காழி அலாவுதீன்
டாக்டர். கீதா பாரதி
திரு. கே.எஸ்.வெங்கட்ராமன்(ராம்)
திருமதி. கவிதா குமார்
திரு. கே.வி. ஸ்ரீனிவாசன்(வாசு)

பதிலுரையும் நன்றியுரையும்: திரு. மு.இராமனாதன்

தேசீய கீதம்

தங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.


mu.ramanathan@gmail.com

Series Navigation

இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

அறிவிப்பு



இலக்கிய வட்டம், ஹாங்காங்

கருத்தரங்கம்(கூட்ட எண்: 23)

நாள்: வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007
நேரம்: மாலை 7.00 முதல் 9.00 வரை
இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

தலைமை: திரு. செ.முஹம்மது யூனூஸ்

சிறப்புரை :
டாக்டர். திருமதி சாராதா நம்பி ஆரூரன்

பொருள்: கம்பனும் தமிழிசையும்

[இசை, தமிழர் வாழ்வின் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. சங்கப் பாடல்கள் இசையோடு இயற்றப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்கள் என்று தொடர்ந்த தமிழிசை மரபு, செழுமை பெற்று கம்பன் படைப்புகளில் துலங்குகிறது. கம்பராமயணத்தில் கற்பனைவளமும், இலக்கியத்திறமும், உணர்ச்சிப்பெருக்கும், சொல்நயமும் மிகுந்திருப்பதைப் போலவே தமிழிசையும் ததும்புகிறது என்பதை டாக்டர். திருமதி சாராதா நம்பி ஆரூரனின் உரை புலப்படுத்தும்.

தற்போது சேலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றும் திருமதி சாரதா, கடந்த 35 ஆண்டுகளாக வகுப்பறைகளிலும், சமய-இலக்கிய அரங்குகளிலும், தொலைக்காட்சியிலும் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவர். நூலாசிரியர். தமிழக அரசு மற்றும் பல இலக்கிய-சமூக அமைப்புகள் வழங்கிய பட்டங்களைப் பெற்றவர். தமிழையும் இசையையும் முறையாகக் கற்றவர்.]

தங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.


தொடர்புக்கு: மு.இராமனாதன் (mu.ramanathan@gmail.com)

Series Navigation

இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

அறிவிப்பு



இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)

நாள்: சனிக்கிழமை, 27 அக்டோபர் 2007
நேரம்: மாலை 6.30 முதல் 9.00 வரை
இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

பொருள்: புலம் பெயர் வாழ்வு

உரைகள்:

திரு. அ.செந்தில்குமார்- “நாற்றுகள், தொட்டிச் செடிகள் மற்றும் குரோட்டன்கள்”

திரு. கே.எஸ்.வெங்கட்ராமன்(ராம்)- “அக்கரை பச்சைதான்; எக்கரை அக்கரை?”

சிறப்புரை

திரு. செ.முஹம்மது யூனூஸ்- “எழுதப்படாத பர்மா குறிப்புகள்”

[‘யூனூஸ் பாய்’ என்று ஹாங்காங் இந்தியர்களால் அன்போடு அழைக்கப்படும் திரு. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றிச் சொல்வதற்கு, யூனூஸ் அவர்களிடம் ஏராளமான செய்திகள் உள்ளன. பர்மீயர்களும் இந்தியர்களும் இணக்கமாய் வாழ்ந்ததைப் பற்றி, 1930-குப் பிறகு பரஸ்பர நம்பிக்கைகள் மெல்ல மெல்லத் தகர்ந்ததைப் பற்றி, 1941-இன் ஜப்பானிய ஆக்கிரமிப்பைப் பற்றி, 1962-இல் ஏற்பட்ட ராணுவ ஆட்சியைப் பற்றி, அதற்குப் பின்னர் இந்தியர்கள் அங்கு வாழமுடியாமல் போனதைப் பற்றி…..இன்னும் நிறைய. தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள் மீது எல்லையற்ற நேசமும் கொண்ட யூனூஸ் அவர்களின் உரை, ஒரு காலகட்டத்தின் பதிவாக அமையும். அது புலம் பெயர் வாழ்வின் உவப்பையும், அலைந்துழல்வையும் ஒரு சேரப் படம் பிடிக்கும்]

கலந்துரையாடல்:

உறுப்பினர்கள் எப்போதும் போல் பேசப்பட்டவை குறித்தும் பேசத் தவறியவை குறித்தும் பேசலாம், தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

தங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

தொடர்புக்கு:
மு.இராமனாதன் (mu.ramanathan@gmail.com)

Series Navigation

இலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

அறிவிப்பு



இலக்கிய வட்டம், ஹாங்காங்

நாள்: சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2007
நேரம்: மாலை 6.30 முதல் 8.30 வரை
இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

தலைப்பு: திரைப்பட ரசனை

இளைஞர் அரங்கு:

ஆர்.கவிதா- “கற்பனையும் யதார்த்தமும்: Pan’s Labyrinth”

உரைகள்:

வித்யா ரமணி- “இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்”

அ.செந்தில்குமார்- “திரைப்படங்களும் தமிழ்ச் சமூகமும்”

கே.எஸ்.வெங்கட்ராமன்(ராம்)- “ரசிகனைப் பார்க்கும் திரை”

எஸ்.பிரசாத்- “தமிழ் சினிமாவின் அழகியல்?”

கலந்துரையாடல்:

உறுப்பினர்கள் எப்போதும் போல் பேசப்பட்டவை குறித்தும் பேசத் தவறியவை குறித்தும் பேசலாம், தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

நிறைவுரை: செ.முஹம்மது யூனூஸ்

அனைவரும் வருக


Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts