This entry is in the series 20040805_Issue

செ.பவானி


அங்கும் இங்கும் அசைந்தாடும் காற்று
வேதனையில் அழும் மழை
மகிழ்ச்சியில் சிரிக்கும் சூரியன்
கோபத்தில் கருகும் மேகங்கள்
வீரத்தில் முழங்கும் இடி
ஏளனத்தில் பார்க்கும் நட்சத்திரங்கள்
பூத்துக் குலுங்கும் மலர்கள்
மனதிற்கு இதம் தரும் நிலவு
கண்களுக்கு குளிர்ச்சி தரும் பசுமை
இவையெல்லாம் இயற்கையின் அங்கங்கள்
என்று இறுமாந்தேன்-ஆனால்
உந்தன் செயல்பாடு(செயற்கை)
இத்தனையையும் வெல்ல துடிப்பதை
நினைத்து வெட்கமுற்றேன்,இருந்தும்
இயற்கை இல்லாது இயங்காது
உலகம் என்ற உண்மையை அறிந்து
இன்புற்றேன்….இதுதான்
இயற்கைக்காட்சி
இன்பமான காட்சி.

செ.பவானி,சிங்கப்பூர்—-
s_sujathaa@yahoo.com.sg

Series Navigation