இன்னொரு இருள் தேடும்….

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

திலகபாமா,சிவகாசி


செருகும் கண்களுக்குள்
உருகும் பனியதனில்
நனைந்த மலரொன்று
காதலென்று கனவில் வந்து
காதோடு கதைத்தது
பற்றிய விரல்களோடு
பயணித்தது சிகரம் நோக்கி
உச்சியில் சென்றது மெல்ல
உருமாறி மணமாய் நிறைந்து
மறைந்து போக
விழித்த விழியதனில்
விரல்களில் மலர்வாசம்
கண்டுநாசி நுகர
இழுத்தடக்கிய மூச்சுடன்
இன்னொரு இருள் தேடி காத்திருப்பு
மின்னும் நட்சத்திரங்களை
எண்ணியபடி மல்லாந்திருக்க
விடியல் தேடும் மனிதர்களை
விந்தையென நொந்தபடி

***

Series Navigation

இன்னொரு இருள் தேடும்….

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

திலகபாமா,சிவகாசி


செருகும் கண்களுக்குள்
உருகும் பனியதனில்
நனைந்த மலரொன்று
காதலென்று கனவில் வந்து
காதோடு கதைத்தது
பற்றிய விரல்களோடு
பயணித்தது சிகரம் நோக்கி
உச்சியில் சென்றது மெல்ல
உருமாறி மணமாய் நிரைந்து
மறைந்து போக
விழித்த வீழியதனில்
விரல்களில் மலர்வாசம்
கண்டுநாசி நுகர
இழுத்தடக்கிய மூச்சுடன்
இன்னொரு இருள் தேடி காத்திருப்பு
மின்னும் நட்சத்திரங்களை
எண்ணியபடி மல்லாந்திருக்க
விடியல் தேடும் மனிதர்களை
விந்தையென நொந்தபடி

Series Navigation