ஆள வந்தான்

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

பவளமணி பிரகாசம்


‘எவன் குடிப்பான் இந்த ஆறிப்போன காப்பியை ? ‘
‘நாய்க்குப் போடு நீ சுட்ட சப்பாத்தியை! ‘
‘வீட்டை ஒழுங்கா வச்சிருக்க துப்பிருக்கா ? ‘
தேளின் கொடுக்கு கூட தேவலை.

‘எந்நேரமும் வேலையா ? சித்த உக்காரேன் ‘,
‘முகம் கழுவி, பவுடர் போட்டதும் பளிச்சினு ஆயிட்டியே! ‘
‘வாயேன், கடைத்தெரு வரை காலார நடக்கலாம் ‘,
‘என்னமா இருக்கு குழம்பு!உன் கைமணமே தனிதான்! ‘

வேறொன்றுமில்லை, வெயில் சாய்ந்து விட்டது,
மாலை மயங்கி இரவாகிக் கொண்டிருக்கிறது.

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்