This entry is in the series 20030822_Issue

தி கோபாலகிருஷ்ணன்


நீ யாரென்று நான் அறியாத
நான் யாரென்று நீ அறியாத
இளமையின் அந்த இனிமையான நாட்களை
நினைக்கிறேன்

நீ யாரென்று நான் அறிந்து
நான் யாரென்று நீ அறிந்த
இளமையின் இன்னும் இனிமையான நாட்களையும்
நினைக்கிறேன்

நீ யாரென்று நான் அறிந்து
நான் யாரென்று நீ அறிந்த பின்
இன்னும் உள்ள இளமையின் துயரமான நாட்களைக்
கழிக்கிறேன்

gk_aazhi@yahoo.com

Series Navigation