அருவி

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

முனைவர் சி.சேதுராமன்,முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E.Mail. sethumalar68 yahoo.com
அன்னையாம் மலையின் காதில்
அழகான தொங்கல் அருவி!
அரும்புகள் சிரிப்பதைப் போல்
அருவிதான் ஓசை செய்யும்!
அழகிய செடி கொடிகள்
அற்புத மரங்கள் மடுக்கள்
அனைத்திலும் தவழ்ந்த ஆறு
ஆசையால் துள்ளிக் குதித்து
அருவியாம் பெயரைப் பெறும்!
அன்பு கொள் குழந்தை தாயைக்
கண்டதும் தாவுதல் போல்
மலையின் உச்சியிலிருந்து
மாலைபோல் அருவி தாவும்!
வெள்ளமாம் அருவி நீரில்
வெள்ளமாய் மக்கள் கூட்டம்
ஓடி நீராட வருவர்!
ஒப்பற்ற இன்பம் பெறுவர்!
ஒய்யார அருவிப் பெண்ணின்
ஒப்பற்ற அழகு காண
ஓராயிரம் கண்கள் வேண்டும்

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

அருவி

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

கவிநயா


சப்தமே இல்லாமல்
இரகசியமாய்ப் பின்னால் வந்து
திடாரென்று கத்துகிற சிறுபிள்ளை போல்
சந்தடியில்லாமல் குறுகிச் சென்று விட்டு
சட்டென்று பெரும் இரைச்சலுடன் இறங்கி
ஆர்ப்பாட்டமாய் விரிகிறது அருவி…

மதங்கொண்ட இளங் களிற்றின்
கம்பீரப் பிளிறலுடன்-
கட்டுக் கடங்காமல் திமிறும் கன்றுக்குட்டியின்
உற்சாகத் துள்ளலுடன்-
சிவபெருமானின் சிரசினின்றும் வீழ்ந்த
கங்கா தேவியின் கருவத்துடன்-
உலகத்தை யெல்லாம் ஒரே வீச்சில்
திருத்த முனைகின்ற
இள ரத்தத்தின் வேகத்துடன்-
பல நாட்கள் பிரிந்திருந்த பிள்ளையை
அணைத்துக் கொள்ள ஓடிவரும்
அன்னையின் ஆவலுடன்-

கண்மண் தெரியாமல் அவசரமாய் வந்து
தலை குப்புற விழுந்தாலும்
இளைப்பாறத் தாமதிக்காமல்
வெண்பற்கள் எல்லாம் விலாவரியாய்த் தெரிய
அட்டகாசமாய்ச் சிரித்தபடி…

-meenavr@hotmail.com

Series Navigation

கவிநயா

கவிநயா