This entry is in the series 20011015_Issue


1/2 கிலோ கோழிக்கறி அரைத்தது (minced)

4 வெங்காயம் நறுக்கியது

3 தக்காளி

5 பச்சை மிளகாய்

2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது

கொஞ்சம் கறிவேப்பிலை, புதினா இலைகள்

கொத்துமல்லி இலைகள்

உப்பும் மிளகாய்த்தூளும் மஞ்சள்தூளும் தேவைக்கேற்ப

2 பெரிய கரண்டி எண்ணெய்

அரைத்த கறியை நன்றாகக் கழுவி பிழியவும்

எண்ணெயஒ ஒரு வாணலியில் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்

உப்பும், அரை தேக்கரண்டி மஞ்சள் தூளும், மிளகாய்த்தூளும் சேர்த்து இதனுடன் இஞ்சிப்பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்

இதனுடன் வெட்டிய தக்காளித்துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்

இத்துடன் அரைத்த கறியை சேர்த்து 10 நிமிடங்கள் வறுக்கவும். இத்துடன் எல்லா கறிவேப்பிலை, புதினா சேர்த்து வதக்கி நன்றாக வேகும் வரை வறுக்கவும்

இறுதியில் பச்சை மிளகாய்த்துண்டுகளையும் கொத்துமல்லி இலைகளையும் போட்டு பிரட்டி பரிமாறவும்

(கோழிக்கறிக்குப் பதிலாக, ஆட்டுக்கறியும் போட்டு இதைச் செய்யலாம்)

Series Navigation