கனவில் வந்த கடவுள்

This entry is part of 41 in the series 20110220_Issue

துவாரகன்


ஒருநாள்
என் கனவில் கடவுள் வந்தார்
தான் யார் என்று கேட்டார்
கடவுள் என்றேன்

எல்லாம் அறிந்தவர்
எங்கும் நிறைந்தவர்
எல்லோரையும் காப்பவர்
அவரே கடவுள் என்றேன்

ஆனாலும்
கடவுள் மிகக் கவலைப்பட்டார்
தான் நன்றாக இல்லை என்றார்

கடவுள் நீண்ட நேரம் சிந்திக்கிறார்
கடவுள் நீண்ட நேரம் விடுப்புக் கதைக்கிறார்
இதனால்
கடவுள் நன்றாக இல்லையென்பதைப்
புரிந்துகொண்டேன்

ஒளிவட்டம் கொண்ட
ஞானிகள்போல் கடவுளும் இருக்கவேண்டும்
இல்லையெனில் இரணியன் வந்துவிடுவானே?

இப்போ
நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
இரவில் மின்னுகின்ற
மின்மினிப் பூச்சிகளையும்
நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டே

Series Navigation