துடித்தலும் துவள்தலும்
ஷம்மி முத்துவேல்

எழுத்துக்களால்
இட்டு நிரப்பிட இயலாத
இடைவெளியில்
உன் பெயர் மட்டுமே
கடவுச் சொல் …..
வெளித் தள்ளிய முத்தின்
பேரெழிலை உணர்ந்திடாமல்
கீறல்களில் முகம் பார்த்திடும்
கிளிஞ்சல்கள்….
துடிப்பின் துள்ளல்
தெரிந்தும்,
மீன் பிடிக்கும்
மீன்கொத்தி ….
நிலைகள் பலவாகினும்
துடித்தலும் துவள்தலும்
அனைத்திலும் ஒருங்கே …..