வல்லரசு!
Published November 28, 2010 • By
சபீர்
சபீர்

சுடு
மூச்சுக் காற்றால்-
முதுகெறித்து…
இடையூறிய
கையால்-
மெல்ல இழுத்து…
இடது காலால்-
இடது கால்
சீண்டி…
எழு எழு என-
எண்ண அலை
அனுப்பி…
அப்பாடா…
விழித்துக் கொண்டாள்!
பின்-
எழுந்து…
படுக்கை துலாவி
கடைக் குட்டி கண்டெடுத்து
பொருளாதார தடைபோல்
எமக்கிடையே படுக்க் வைத்து…
மகனுக்கும் மகளுக்கும் நடுவே…
மீண்டும் உறங்கிப் போனாள்…!
மக்களைப் பெற்று விட்டால்
மனைவியே…
வல்லரசு!
-சபீர்