வாழும் பூக்கள்

This entry is part of 30 in the series 20090919_Issue

தினேசுவரி, மலேசியா


சில பூக்களுக்குள்
பல வேளை
நான் மடிந்து போகிறேன்…
அழகில், மணத்தில்,
உதிர்வில்,
மரண சாசனங்களில்…….

உடைத்தெழாமல் என்
குரல் மறுக்கப்படும்
போதும்….
மறைக்கப்படும்
போதும்
இது நடந்தே
விடுகிறது…..
பல முறை
நான் தடுத்தும்….

ஏனெனில்
இறுக்கங்களில்
தளர்ந்து வாழ
கற்றுக் கொடுக்கிறது
பூக்கள்….

பிறருக்காக மணம் வீசி
மலரும் புன்னகையோடே
மரித்துப் போக
நானும் மலர்ந்து
கொண்டிருக்கிறேன்……

– தினேசுவரி, மலேசியா

Series Navigation