This entry is in the series 20090919_Issue

ஹெச்.ஜி.ரசூல்


வலிகளால் கதறி
மன பிரபஞ்சத்தில் உருண்டெழுந்து
உடைபடா முட்டை ஓட்டுக்குள்
திரும்பவும் நுழைந்த
குஞ்சின் மாய உருவம்.
வார்த்தைகள் பற்றிய
பிரக்ஞை எதுவுமற்று
மின்னல்களால் திரண்டுரு கொண்டு
கண்திரைகளை கூசவைத்த
ரகசிய பேச்சு திரும்பவும்.
கண்டும் கேட்டுமறியா
குகையிருள்தாண்டிய
தியான உச்சி கொடுமுடி
இறக்கைகள் அள்ளிச் சுமந்துவந்த
அறிவின் கனி பிளந்து
யுகத்தின் நாவுகளில் தடவிய போது
அறியப்படாத ருசி எங்கும்.

Series Navigation