This entry is in the series 20090919_Issue

லதாமகன்



ஒரு இரவின் சுடுகாட்டில்
வெட்டியானாய் அமர்ந்திருக்கிறேன்
என்னைச் சிதறிக் கிடக்கும்
நினைவின் பிணவீச்சம் அடைக்கும்
நாசி உறிஞ்சப்படும் சப்தம்
அடுத்த வீட்டுக்காரனுக்குக்
கேட்டு விடாமல்
பார்த்துக் கொள்கிறேன்
எனைச் சுற்றியும்
வெறியுடன் வெறித்திருக்கும்
கவிதையேனும் கனவுகள்
நினைவின் பிணங்களை
தின்று செரிக்க
மூளையின் மூலையில்
பத்திரமாய் மீண்டும்
எழுந்துவிடாமல் புதைத்துவிடும்
எதுவுமின்றி எரித்துவிடும்
என் தொழில் திறமையில்
விடிகிறது மீண்டும்
நினைவின் பிணங்கள் விழும் காலை

parama4u@gmail.com –

Series Navigation